முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

இரவு தொழுகை

இரவு தொழுகை - முஹம்மது அப்பாஸ்
'13 ரக்அத்கள்'

நபி (ஸல்) அவர்களின் மனைவியும் என்னுடைய சிறிய தாயாருமான மைமூனாவின் வீட்டில் நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி (ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்துவிட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்று நின்றேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தை என் தலைமீது வைத்தார்கள். என்னுடைய வலக்காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்துகள், மீண்டும் இரண்டு ரக்அத்துகள், இன்னும் இரண்டு ரக்அத்துகள் மறுபடியும் இரண்டு ரக்அத்துகள் மேலும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு சுபுஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்' (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புகாரி 183 & முஸ்லிம் 1400)

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), முஸ்லிம் 1402)

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் வித்ரு தொழுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் முதுமையடைந்து பலவீனப்பட்டபோது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். (அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), திர்மிதீ 420 & நஸயீ 1708)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறு ரக்அத்களிலும் உட்கார மாட்டார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 1341, திர்மிதீ 421, அபூதாவூத் 1141 & தாரமீ 1535)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள் (இரவில்) தொழுவார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 1342)

மேற்கண்ட எந்த வாசகத்திலும் ரமலான் என்ற வாசகம் இடம் பெறவில்லை என்பதை சகோதரர்கள் நன்கு படித்து பார்க்கவும்.

இங்கு நடைப் பெறக்கூடிய தலைப்பு ரமலானில் நடைப்பெறும் தராவிஹ் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

ரமலான் என்று 8 - 3 வரும் ஒரு சில ஹதிஸ்களும் பலஹீனமானது, அதையும் 8 - 3 பள்ளியில் ஜமாத்தாக தொழுகும் சகோதரர்கள் நன்கு படித்து பார்க்கவும்.

11 அல்லது 13 ரக்கத்து பள்ளியில் ரமலானில் ஜமாத்தாக தொழுகுவதற்கு எந்த ஒரு ஆதரபூர்வமான செய்தி கிடையாது.

இன்று சில சகோதரர்கள் ரமலானில் 8 மற்றும் 3 ரக்கத்து வித்ரு ஜமாத்தாக தொழுகுகிறார்கள், இதற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஆதாரத்தை எடுத்து வைக்கிறார்கள்.

20 ரக்கத்து சரியா அல்லது தவறா எனபது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அதைப்பற்றி அதன் ஹதிஸ் நிலை மற்றும் மிகப் பெரிய மார்க்க அறிஞர்கள் விளக்கம் என்ன என்பதை பிறகு பார்ப்போம்.

20 ரக்கத்தின் நிலமையை பலகினமானது என்று குறள் கொடுக்கும் சிலர் 8+3 ரக்கத்தில் வரும் அறிவிப்பளார்களின் நிலைமையையும் கட்டாய தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அவர்கள் 30 நாள் பள்ளியில் ஜமாத்தாக நபி (ஸல்) அவர்கள் தொழுததாக ஆதராத்தையும் முன் வைக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் கீழ்க் கண்ட ஹதிஸை எடுத்து வைக்கும் சிலர்(என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாதாக சொல்லி 30 நாள் ஜமாத்தாக தொழுது வருகின்றார்ர்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமலானில் பள்ளியில் கூட்டாக 30 நாள் இரவு தொழுகை நடத்தி காட்டினார்கள் என்று ஒரு பலகினமான ஹதிஸ் கூட இவர்களால் எடுத்து வைக்கும் முடியாது, ஸஹாபாக்களை பின் பற்ற மாட்டோம் சொல்லும் சகோதரர்கள் இந்த ஒரு விசயத்தில் மட்டும் ஸஹாபாக்களை பின் பற்ற காரணம் என்ன?

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

1) ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரமலானில் 8 ரக்கத்துகளும் வித்ரு 3 ரகஅத்துகளும் தொழவைத்ததாக அறிவிக்கிறார்கள். (அபுதாவுத் & நஸயி).

இது இந்த இரண்டும் நூல்களில் இடம் பெறும் இந்த ஹதிஸ் முன்கர், சாத், மத்ருக் தரத்தில் அமைந்த ஹதிஸ் ஆகும் என இமாம் அபுதாவுத் (ரஹ்), இமாம் நஸயி (ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்தததை மறுக்கும் சகோதரர்கள் மறைத்து தாங்கள் முழுமையாக ஸஹிஹ்வான ஹதிஸ் பின்பற்றும் என்று அறியாத மக்களை மூடராக்கி கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்களின் நிலைமை.

இமாம் அபுதாவுத் (ரஹ்), இமாம் நஸயி (ரஹ்) இதில் வரும் அறிவிப்பாளர் ஈஸா பின் சாரியா யாரென அறியப்படாதவர்.

எனவே இந்த ஹதிஸ் ஏற்க தக்கதல்ல என விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதில் வரும் மற்றொரு அறிவிப்பாளர் முகம்மது பின் ஹூமைத் அர் ரஜி ஒரு பொய்யர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

2) மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஃபு (ரலி), தமிமுத்தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக்கத்து தொழவைக்கும் படி கட்டளையிட்டார்கள் (மாலிக் முஅத்தா).

இது நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக வரவில்லையே, உமர்(ரலி) அவர்கள் அறிவித்தாக வருகின்றது, நபி(ஸல்) அவர்களை பின்பற்றிற்களா? அல்லது உமர் (ரலி) அவர்களை பின்பற்றிற்களே?

மேற்கண்ட ஹதிஸ் அவர்கள் கூற்றுபடி உமர் (ரலி) பின்பற்றுவதை ஏற்று கொள்வதாக என்று வைத்து கொண்டாலும் 23 ரக்கத்து என்பதை கீழ்கண்ட தொடர் மூலம் அறியலாம்.

ஸாயப் பின் யாஜித் அவர்களின் வழியாக இந்த ஹதிஸ் அறிவிக்கப்படுகின்றது, இவர் அறிவிப்பு செய்யும் வரிசையில் 11, 13, 20 ரக்கத்துகள் இடம் பெறுவதால் மார்க்க அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு இருக்கின்றது.

அவற்றின் தொடரை விரிவாக பார்த்தால் உன்மை நிலையை நாம் கண்டறியலாம், ஸாயிப் பின் யாஜித் அவர்களிடமிருந்து 3 பேர் ஹதிஸை அறிவிக்கிறார்கள்.

1) ஹரித் பின் அப்துர் ரஹ்மான்

2) யாஜித் பின் குஷைபா
3) முகம்மது பின் யூசுப்

இதில் 1) ஹரித் பின் அப்துர் ரஹ்மான் மற்றும் 2) யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேரும் 20 ரக்கத்து என அதே ஹதிஸில் குறிப்பிடுக்கின்றார்கள், மேலும் யாஜித் பின் குஷைபா அவர்களிடத்தில் இரண்டு மாணவர்களும் ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் 20 ரக்கத்து என அறிவிப்பு செய்கிறார்கள்.

யாஜித் பின் குஷைபா 1) இப்னு அபிதைப் 2) முகம்மது பின் ஜாபர் ஆகிய இருவரும் 20 ரக்கத்து என ஸாயிப் பின் யாஜித் அவர்களிடத்தில் அறிவிப்பு செய்கிறார்கள்.

இப்போது கருத்து வேறுபாடு முகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் வருகிறது.

முகம்மது பின் யூசுப் அவர்களிடத்தில் மூன்று மாணவர்கள் இடம் பெறுகின்றார்கள்.

1) இப்னு இசாக் 2) தாவுத் பின் கைஸ் 3) இமாம் மாலிக் இதில் இப்னு இசாக் 13 ரக்கத்தும், இமாம் மாலிக் 11 ரக்கத்தும், தாவுத் பின் கைஸ் 21 ரக்கத்து அறிவிப்பு செய்கிறார்கள்.

இதில் மூன்று பேர் அறிவிக்கும் ஹதிஸ் வெவ்வேறாக வருவதால் இது முள்தரப் வகையை சார்ந்தது, அதாவது அறிவிப்பாளர் விசய்த்திலோ அல்லது அறிவிக்கப்படும் செய்திகளிலோ குழப்பம் இருத்தல், இது போன்ற ஹதிஸ் ஏற்கத்தக்கதல்ல, எனவே இதுவும் பலவினமடைகிறது.

மேலும் 1) ஹரித் பின் அப்துர் ரஹ்மான் 2) யாஜித் பின் குஷைபா இந்த இரண்டு பேர் வழியாக வரும் ஹதிஸில் எந்த வித குழப்பமும் இல்லை, அறிவிக்கும் நபர்கள் பற்றி யாரும் விமர்சனம் செய்யப்படவில்லை, இதன் தொடர் மிகவும் அழகானதாகும், எனவே இந்த ஹதிஸ் ஸஹிஹ் தரத்தில் அமைந்தவையாகும், எனவே 20 ரக்கத்து என்பது பலமாக இங்கு நிருபிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் 3 நாட்கள் மட்டும் தொழுகை நடத்தினார்கள்:

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்ட, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். 'நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)

எந்த எந்த நாட்கள்:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் நோன்பு இருந்தோம், அம்மாத்தத்தில் ஏழு நாட்கள் எஞ்சி இருக்கும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. அவ்விரவில் (24ம் இரவில்) மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். ஆறு நாட்கள் மீதம் இருக்கும் போது (25ம் இரவில்)எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. ஐந்து நாட்கள் மீதம் இருக்கும் போது(26ம் இரவில்) பாதி இரவு கழிவும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், அப்போது நாங்கள் அல்லாவின் தூதரே! அவ்விரவில் மீதமுள்ள நேரத்தில் எங்களுக்கு உபரியான வணக்கத்தை நடத்தலாமே? என்றோம், அதற்கவர்கள் யார் இமாம் தொழுகையை முடிக்கும் வரை இமாமுடன் தொழுகிறாரோ அவர் பாதி இரவு வணங்கியதாக பதிவு செய்யப்படுகினறது. என்று கூறினார்கள் மீதமிருக்கும் போது(27ம் இரவில்) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், தம் குடும்பத்தினரயும் மனைவிமாரையும் அழைத்தார்கள் வெற்றி எங்களுக்கு அஞ்சுமளவுக்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள், என அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அப்போது வெற்றி என்பது என்ன? என்று கேட்டேன் அதற்கவர் ஸஹர் செய்தல் என விடையளித்தார்கள். இதை ஜுபைர் பின் நுபைர் அறிவிக்கிறார்கள்(நஸயி, இப்னுமஜா, திர்மதி, அஹ்மத், தாரிமி & அபுதாவுத்)

எவ்வாறு என்னை தொழுகை கண்டீர்களோ அதுபோல தொழுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், எனவே, மறுக்கும் சகோதரர் 23ம், 25ம், 27ம் இரவில் மட்டும் கூட்டாக தொழ வேண்டும.

அப்படி இல்லை என்றால் 30 நாட்கள் பள்ளியில் ஜமாத்தாக தொழுகை நடத்தினார்கள் என ஆதரத்தை நிருபிக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இரவு தொழுகையை சகபாக்கள் எப்படி தொழுதார்கள்:

ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி).

ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும் இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ர லி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!' என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார் (புகாரி).

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபி (ஸல்) மரணிக்கும் வரை மக்கள் தனிதனியாகவே தொழுது வந்தனர், எனவே மறுக்கும் சகோதரர்கள் தனிதனியே தொழ வேண்டும்,

உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜமாத்தாக தராவிஹ் நடத்தபட்டது:

நான் உமர் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!' என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நல்லதாகிவிட்டது. இப்போது தொழுவது மிகக் சிறந்ததாகும் என்று உமர் (ரலி) கூறினார்கள் என அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் (மாலிக் முஅத்தா).

உமர் (ரலி) பின்பற்ற வேண்டும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த பொன் வார்த்தைகள்:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஒரு சிறப்பான பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு கண்கள் நீரைச் சொரிந்தன; உள்ளங்கள் உருகின; அப்பொது யா ரசூலுல்லாஹ்! இது விடை பெறுபவரின் பிரசங்கம் போன்றல்லவா இருக்கிறது. எனவே, எங்களுக்கு இறுதி உபதேசம் செய்யுங்கள் என்று நபித் தோழர்கள் சொன்னார்கள். அப்போது கருப்பு இனத்தைத் சார்ந்த ஒருவர் உங்களுக்குத் தலைவராக வந்தாலும் அவருக்கு நீங்கள் வழிப்படுங்கள். உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும்இ எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள். மார்க்கத்தில் புதிதாக எதையும் உண்டு பண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக உண்டு பண்ணப்படுபவை யாவும் வழி கேடுகளேயாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத், அஹமத்).

உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லா குடி இருக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மதி).

என் அருமை தோழர்களே நான் எவ்வளவு நாட்கள் நான் உங்களுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது, எனக்கு பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களையும், உமர் (ரலி) அவர்களையும் பின்பற்றுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினதாக ஹூதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (மிஷ்காத், அஹ்மத், திர்மதி & இப்னுமஜா).

எனக்கு பிறகு அல்லா ஒரு நபியை இந்த உலகுக்கு அனுப்ப நாடினால் அது உமராக (ரலி) அவர்களாக தான் இருப்பார்கள், ஆனால் அல்லா என்னை இறுதி நபியாக தேர்ந்தெடுத்துவிட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நபிமொழியின் சுருக்கம்).

இதுபோல் பல சிறப்புகளை சொல்லி கொண்டே போனாலும் அவர்கள் மார்க்கத்திற்கு செய்த அருட்கொடைகள்கள் சொல்ல வார்த்தைகளுகள் நம்மிடத்தில் இல்லை, அல்லா அவர்களை அந்தஸ்துகளையும், அவர்களின் கபுருகளையும் ஒளிமயமாக்குவனாக! ஆமின்.

3) மறுப்பவர்கள் வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று பதிலளித்தார்கள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்), புகாரி 3569 முஸ்லிம் 1343).

மேல் உள்ள நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி தஹஜ்ஜதை தான் குறிக்கின்றது தவிர, தராவிஹ் அல்ல.

அல்லா திருமறையில் தஹஜ்ஜத்ப் பற்றி குறிப்பிடுக்கின்றான்.

இன்னும் இரவில் ஒரு சிறு பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக, இதன் பாக்கியத்தினால் உம்முடைய இறைவன் மகாமம் மஹ்முதா என்றும் புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்ப போதும் (17:79),

இன்னும் இரவில் அவனுக்கு ஸுஜுது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் தஸ்பிஹ் செய்விராக (76:26).

இங்கு தஹஜ்ஜத் தொழுகை தொழுது வருவீராக என்பது ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களையும் குறிக்கும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒரு மித்த கருத்து ஆகும்.

மேலும் தஹஜ்ஜத் பற்றி சிறப்புகள் பற்றி புகாரி, முஸ்லிம், திர்மதி, அபுதாவுத், இப்னுமஜா, நஸயி, அஹ்மத் & மாலிக் மூஅததா, உலகத்தில் உள்ள அனைத்து இமாம்களின் கிதாபுகளிலும் நபி (ஸல்) அத்தொழுகையின் சிறப்பை பற்றி நன்மையின் அளவையும், சிறப்பை பற்றி கூறினதை பதிவு செய்யாத இமாம்கள் இல்லை என்று கூட சொல்லாம்.

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் ண் காரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினாதாக என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார் (புகாரி).

அல்லா தஹஜ்ஜத் சிறப்பை பற்றி தெளிவாக கூறுகின்றான், ஆனால் அல்லாவும் தஹஜ்ஜத் தொழுங்கள் என்று சொல்கின்றான், அதே போல் நபி(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகை மக்களுக்கு ஊக்கப்படுத்தினார்கள் என்பது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட விசயம்.

இப்போது நன்கு கவனிக்க வேண்டியவை, அல்லாவும், ரஸீல்(ஸல்) அவர்களும் தஹஜ்ஜத் தொழுகையை தொழுகும் மாறு கூறி இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ரமலானில் ஜமாத்தாக தொழுகை நடத்தின பிறகு ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள். (புகாரி)

3 நாட்கள் தொழுகையை பற்றி தான் இங்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தவிர, தஹஜ்ஜதைப் பற்றி குறிப்பிடவில்லை, ஏனென்றால் தஹஜ்ஜத் தொழுது வாருங்கள், அல்லாவுடைய அருள் தஹஜ்ஜதில் தான் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றி தொழுகை ஏவுவனதை தெள்ளத் தெளிவாக கூறி இருக்கும் போது பிறகு ஏன் இந்த தொழுகை உங்கள் மீது கடமையாகிவிடும் என அஞ்சினார்கள்??.

மேலும், நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)இ ஆதார நூல்: பைஹகீ)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று பைஹகீ இமாம் கூறுகிறார்.

பைஹகீ இடம் பெறும் இந்த ஹதிஸ் பலகினமானது, ஏனென்றால் இதில் இப்ராஹிம் பின் உஸ்மான் அபீஷைபா இடம் பெறுகிறார் என்று இதை தள்ளுபடி செய்கிறார்கள், ஆனால் இது பைஹகீ இமாமின் கருத்து கணிப்பு, ஆனால் இதே ஹதிஸ் இப்னு அபீஷைபா, முஸ்னத் அப்து பின் ஹுமைத், அல் முஜம் அல் அஸத் ஆகிய நூட்களில் ஹசன் தரத்தில் இந்த ஹதிஸை குறிப்பிட்டு அதன் கீழ் பதிவு செய்துள்ளார்கள், அதனால் இதை ஒதுக்கி விட மேன்று நீங்கள் நினைத்தால் அல்லாவிடத்தில் மாட்டி கொள்வது உறுதி.

சகோதரரே நான் இன்னும் 20 - 3கான ஆதரத்தை இன்னும் எடுத்து வைக்க வில்லை. ஏனென்றால் தாங்கள் உலமா இணையத்தில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்புகள் யாவும் மீள் ஆய்வுக்குரியது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள், தங்களின் பதிலுக்காக நான் காத்து கொண்டு இருக்கிறேன், அதை வைத்து தான் அதன் அறிவிப்பாளர்கள் வரிசையுடன் ஆதரப்பூர்வமாக நிருபிக்ககாத் ஆவலுடன் உள்ளேன், ஏனென்றால் தாங்கள் எதற்கெடுத்தாலும் பலகினமானது என்று சொல்லி வருவதால் அதனால் எதனாலந்த ஹதிஸ்கள் எல்லாம் பலகினமடைகிறது நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

யார் உன்மை சொல்கிறார்கள் அல்லது யார் இட்டு கட்டுகிறார்கள் எனபதை பொறுமையுடன் அலசுவோம்.

இன்சா அல்லா தங்களின் பதில் வந்த பிறகு நான் ஒரே ஒரு ஹதிஸ் ஆதரபூர்வமாக நிருபித்துவிட்டால் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது, ஏற்று கொள்ள தயார் என்பதையும் நீங்கள் அறிவிப்பு செய்ய வேண்டும்.

உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் 23 ரக்கத்து தொழுத்தாக என்னிடம் சரியான அறிவிப்பாளருடன் ஒரே சில ஹதிஸ்கள் உள்ளது எனபதை தங்களிடம் முன்னாடியாக தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பு:

தங்களிடம் ரமலானின் 8 - 3 ரக்கத்து 30 நாள் தொழுகிறார்கள் இது எதனால் நீங்கள் செய்கிறீர்கள், நபி(ஸல்) அவர்கள் ரமலானில் 30 நாள் பள்ளியில் ஜமாத்தாக தொழுததாக ஆதாரத்தை முன் வைக்குமாறு கேட்டுகொள்கிறேன், (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி)

எவ்வாறு என்னை தொழுக கண்டீர்களோ அது போல தொழுங்கள் (புகாரி).

இன்சா அல்லா அதற்கு பிறகு 20 ரக்கத்து நிலைமை பற்றி கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் சிறப்பு என்பது வேறு. இரவுத் தொழுகை 20 ரக்அத்களா என்பது வேறு. மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் ஒரு ரக்அத் ஒரு லட்சம் ரக்அத்களுக்குச் சமம். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். மஸ்ஜிதுல் ஹராமின் சிறப்பின் நன்மையைக் கருதித் தனிப்பட்ட முறையில் ஒருவர் எத்தனை ரக்அத்களும் தொழுது கொள்ளலாம். இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் தொழவேண்டும் என்று ஒருவர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் தொழவேண்டும் என்று நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் சகோதரர் சாதிக் அலி அவர்களுக்கு ஓரளவு தெளிவு கிடைக்கலாம்.

என்ன சகோதரரே நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவே குரல் கொடுக்க துவங்கி உள்ளீர்கள், "மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் சிறப்பு என்பது வேறு. இரவுத் தொழுகை 20 ரக்அத்களா என்பது வேறு" என்று நீங்கள் சொன்னீர்கள், நபிமொழியை நிறுத்து விட்டு உங்கள் கருத்துகளை அறிவியுங்கள், தாங்களா ஒரு ஹதிஸை தயார் செய்யாதீர்கள், தாங்கள் எல்லாம் அனைத்தும் கரைத்து குடித்தவர்கள் அல்ல, என்னையும் சேர்த்து தான் சொல்கின்கிறேன், எனக்கும் உன்மை எதுவும் தெரியாது, தங்களுக்கும் எதுவும் தெரியாது, தெரிந்ததை மட்டும் சொல்லுங்கள்.

எவன் ஒருவன் நம்மீது வேணுமென்ற ஒரு இட்டுகட்டி ஒரு செய்தியை அறிவிக்கின்றானோ அவன் தங்குமிடம் நரகம் தான் (நபிமொழியின் சுருக்கம்).

1 படிச்சவங்க சொன்னது:

காயல் இஸ்லாமிக் கம்யூணிகேஸன் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்......
மேலும் இதைவிட என்னிடத்தில் ஆங்கிள மொழியில் 20 ரக்காத்துக்கு ஆதாரம் இருக்கிறது.உங்கள் உலமா சபைக்கு நான் ஹதீஸ்களை தரவேண்டியது இல்லை உங்களிடத்தில் இருக்கலாம் ஆனால் நான் தர ஆவளோடு உள்ளேன் வேண்டும் என்றால் உங்கள் e-mail id தரவும்..

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி