முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 30 ஜூலை, 2009

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. - குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
வடக்கில் சிந்திய முதல் ரத்தம்
வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.
இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை முதலில் கணித்து, ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.
1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.
ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்... இந்திய சரித்திரமே மாறியிரக்கும். ஆனால் இயற்கை ஒத்துழைக்க மறுக்க,நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.
தெற்கின் முதல் போராளியோடு...
தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரவாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டப்பொம்மன். இராமநாதபுரத்திற்கு­ ஜாக்ஸன் துரையைச் சந்தித்த கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல். அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை,
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்...
- என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது.ழூ
(ழூ செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்.36)
கட்டபொம்மன் படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர். அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச முடியாதவர் என்ற பொருளுடைய ஆழுழுமுயுர் என்னும் உருது வார்த்தையால் அழைத்ததைக் கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்ழூழூ
இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின் விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
(ழூழூ செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம்;.38)
கிளிங்கர்கள்
மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர். கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களி; தியாக வரலாறு ஒன்று உழிந்திருக்கின்றது.
தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்திதுப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டுது வரலாறு. மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு, அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.
அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.
அக்கைதிகளில் இருவருக்கும் மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர். அவர்களில் உருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. முற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் உருவihன சேக் உசேன் எனற் இஸ்லாமிய இளைஞர்ழூ. யார் இந்த சேக்உசேன்?
(ழூ ஆடைவசல உழளெரடவயவழைளெஇ ஏழட.307(19.1.1803)இ P.1249- இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது.பார்வை:மேற்படி பக்கம்.45.)
இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி ஜ1800-1801ஸ முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (முhயn-i-துயா-முhயn)இ மராத்தியில் சிமோகா (ளூiஅழபய) பகுதியை ஆண்ட தூண்டாஜிவோக் (னூழனெயதi றுயரப), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுக'கல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.
இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷாகான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுல்ல பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். ஆந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் களீஷாகான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷாகான் ஈடுபட்டார்.ழூ ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சிஙில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (ஆயஉடநழன) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்ழூழூ
(ழூ மு.சுயதயலலயnஇ ளுழரவா ஐனெயைn சுநடிநடடழைnஇ வுhந குசைளவ றுயச ழக ஐனெநிநனெநnஉந. 1800-1803இஇ PP.110-111.)
(ழூழூடiடின.இP.125)
அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.ழூ இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாத்தாக(கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட் தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.
இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்;சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.ழூழூ
இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பச் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச்சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள் விளங்கியுள்ளனர்.
(ழூ செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41.)
(ழூழூ மு.சுயதயலலயnஇ ளுழரவா ஐனெயைn சுநடிநடடழைnஇ வுhந குசைளவ றுயச ழக ஐனெநிநனெநnஉநஇ 1800-1803..இPயபந.274.)
சிப்பாய்கள் பெற்ற உத்வேகம் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்து காணலாம். மு.முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

துருக்கி சுல்தான்களின் இஸ்லாமிய ஆட்சிகளின் கடும் வீழ்ச்சியால் உலகெங்கும் ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டது.


நம் இந்திய நாட்டிலும் முகலாய மன்னர்களின் ஆட்சியின் வீழ்ச்சியினாலும் இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மிகப்பெரும் சோதனையும், வேதனையும் ஏற்பட்டது.

இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் இஸ்லாமியர்களின் கல்வி, கலாச்சாரம், தனித்தன்மை இவைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஆங்கிலேயர்கனினால் நடந்து கொண்டிருந்தது முஸ்லிம் சமுதாயத்தினரிடையே ஒருவகையான அச்சமும், வேதனையும் நிலவிய காலக் கட்டத்தில் தான்.

அல்லாஹுத்தஆலாவின் மீது அச்சம் கொண்ட தியாகச் சீலர்கள் உருவானார்கள்.

இருளே போ! போ! என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பதை விட இருள் சூழ்ந்திருந்த இடத்தில் ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய் விடும்.

அந்த நல்ல நோக்கில் - தியாக நோக்கில் சத்திய சீலர்களான சங்கைமிகு உலமாக்களால் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டது.

வலிமை மிகுந்த பிரிட்டிஷ் அரசை கடுமையாக எதிர்த்து 1857-ம் ஆண்டில் ஷாமிலி மைதானத்தில் தியாகச் சீலர் மவ்லானா இம்தாதுல்லா தலைமையில் நடைபெற்ற கடுமையான போராட்டத்தில் கலந்து கொண்டு தியாகமிகு சேவையாற்றிய தேவ்பந்த், தாருல் உலூம் கல்லூரியின் நிறுவனர் காஸிம் நானோத்தவி அவர்களின் பெயரும் மற்றும் மார்க்க மேதைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.

இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிறைப் பிடித்து சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிதும் கங்கணம் கட்டிக் கொண்டு, தேடுதல் வேட்டையாடிய காலக் கட்டத்தில்தான் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த மார்க்க மேதை - தியாகச்சீலர் மவ்லானா காஸிம் நானோத்தவி தலைமையில் மக்காவின் மிகப் பெரும் இந்திய நாட்டு உலமாக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்துடன் வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும், வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும், இஸ்லாமிய கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், இஸ்லாமியர்களின் உரிமைகளில் - அவர்களின் மார்க்க சட்டத்தை பேணிப் பின்பற்றுவதில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஊர்களில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், சமுதாயப் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்று சேர்ந்து மதரஸாக்களை உருவாக்கினார்கள். நாடெங்கும் நடை பெற்று வரும் மதரஸாக்களிலிருந்து வருடந்தோறும் மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்றவர்கள், பட்டயங்கள் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகிறார்கள்.

அதுபோல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்களும், காரி பட்டம் பெற்றவர்களும் வருகை தருகிறார்கள்.

இதேபோல் பெண்கள் மதரஸாக்களிலிருந்தும் ஆலிமா பட்டம், முபல்லிகா பட்டம் பெற்ற பெண்களும் வருகை தந்து நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடியார்கள் மீது அன்பு ஆதரவு அண்டை வீட்டாரிடமும் அன்பான உறவு முறை - உறவினர்களிடம் நேசமுடனும், பாசமுடனும் நடந்து கொள்ளும் அன்பான முறை இத்தகைய மனிதநேயத்தை பேணிப் பின்பற்றி போதித்து வரும் அன்பார்ந்த வாழ்க்கை முறையை மதரஸாக்களிலிருந்து கற்றுத் தேறி பட்டங்கள், பட்டயங்கள் பெற்று வரும் அனைவர்களையும் அன்புடனும், மகிழ்வுடனும் வருக என வாழ்த்துகிறோம்.

இந்திய நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், உ.பி. மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸாவுக்கு சென்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் உலமாக்கள் நம் நாட்டுக்கு செய்த சேவை விடுதலைப் போராட்டத்தில் உலமாக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது, இன்றும் அவர்களின் சேவையை நினைக்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்ன செய்தி சரித்திர செய்தியாகும்.

புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலூம் மதரஸாவின் பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டு உலமாக்கள் செய்த சேவை இந்திய விடுத லைப்போரில் உல மாக்கள் ஆற்றிய பங்கு மிக மகத்தானது என்று அவர் நிகழ்த்திய உரை மறக்க முடியாததாகும்.

தென்னகத்தின் தாய் மதரஸாவான வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பேசுகையில் மனித சமுதாயத்தை புனித சமுதாயமாக ஆக்கி வருவது மதரஸாக்கள் என்று குறிப்பிட்ட செய்தி நமக்கு இன்றும் நினைவில் நிற்கிறது.

சிறப்புமிகு லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் சங்கை மிகு உலமாக்கள், கண்ணியமிகு - சத்தியமிகு நபிமார்களின் வாரிசுகளாக திகழ்கிறார்கள், புனித நபிமார்கள் செய்தப் பணியை சங்கைமிகு உலமாக்கள் செய்து வருகிறார்கள் என்று உலமாக்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லிபியா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசுகையில் உண்மைகளை - நன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் என் இந்திய நாட்டு உலமாக்கள் மிகச் சிறந்தவர்கள் என்று தலைவர் பேசிய செய்தி உலக செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்தது. மணிச்சுடரிலும் வந்தது.

மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற வெண்புறாச் சேனைகளே! மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற சமாதான புறாக்களே!! வருக!!!

ஹாபிழ் பட்டம் பெற்ற அன்பின் சின்னங்களே வருக! ஆலிமா பட்டம் பெற்ற சமுதாயச் செல்வங்களே வருக!! முபல்லிகா பட்டம் பெற்ற சமுதாயக் கண்ணொளிகளே வருக வருக!!! என உங்களை வாழ்த்தி வரவேற்று உங்கள் சேவை சிறக்க துஆ செய்கிறோம்

- மவ்லவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, மாநில மார்க்க அணிச் செயலாளர், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

புதன், 29 ஜூலை, 2009

ஷஃபான் மாதமும், நாமும்

இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருங்கக் கூறின், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழவிலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் காருண்ய நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.
இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் மான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை, என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
மற்றுமொரு அறிவிப்பில்,
நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்) என வந்துள்ளது.
ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதால் அம்மாதம் நபி (ஸல்) அவர்களுக்கு மிக விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அம்மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள். எனினும், அவர்கள் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். (நஸஈ).
ஷஃபான் மாதம் முழுவதும், அம்மாத்தின் அதிகமான நாடகளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என வந்துள்ள மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போன்று வெளிப்படையாகத் தோன்றினாலும், அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்காது அம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மாத்திரம் தான் நோற்றிருக்கின்றார்கள் என்பதை குறித்து ஹதீஸ்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது எவ்வித முரண்பாடுகளுமின்றி விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்கும்படி பணிக்கப்பட்டதன் ரகசியம் :
உஸாமா (ரலி) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ,ஸஹீஹ் இப்னு ஹுஸைமா).
மக்கள் அசிரத்தையாக காட்டும் ஷஃபான் மாதம் சிறப்பு வாய்ந்தது. அடியார்கள் செய்யக் கூடிய அமல்கள் அம்மாதத்தில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் எடுத்துக் காட்டப்படும் பொழுது, நோன்பும் கூட இருந்தால் தன் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது என மேற்படி ஹதீஸ் எமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி ஷஃபான் மாத நோன்பு ரமழான் மாத நோன்பிற்கான சிறந்ததோர் பயிற்சியாகவும் அமைகிறது. இயல்பிலேயே - திடீரென ஏற்படும் உடல், உள ரீதியான கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை. ஆனால், அதை முன் கூட்டியே ஒரு பயிற்சியாகக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை. ஆனால் அதை முன்கூட்டியே ஒரு பயிற்சியாககக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகிறது. எனவே தான் பசி, தாகம், இச்சை போன்றவற்றை அடக்கி ஷஃபான் மாத நோன்பை கஷ்டமாகக் கருதாது இலகுவாக நோற்று விடுவான். இந்த வகையில் ஷஃபான் நோன்பு, ரமழான் நோன்பிற்கான முன்னுரைசயாகவே அமைகிறது.
ஷஃபான் மாதத்தில் எந்தளவு நோன்பு நோற்க முடியுமோ அந்தளது நோற்பது நபிவழியாக இருக்கிறது.
பராஅத் இரவும், வணக்கங்களும் :
ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).
ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷவ்வால் ஆறு நோன்வுகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)
வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)
ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்).

இஸ்ராவும் மிஃராஜும்

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையானது ஓர் அதிசய நிகழ்வாகும். ஓர் அற்புதமாகவும் மாத்திரமின்றி பல தத்துவங்களையும், தாத்பரியங்களையும் தன்னகத்தே பொதிந்ததாகவும், அடிப்படையான பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. நபியவர்களின் இவ்விண்ணுலக யாத்திரை இரு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணம் அதன் முதற் கட்டமாகும். அதனை அல் இஸ்ரா என வழங்குகிறோம். இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நபியவர்கள் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அமைந்தது. இதுவே மிஃராஜ் எனப்படுகிறது. இந்த யாத்திரையின் முதற் கட்டத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது.
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
நபியவர்களின் இப்புனித யாத்திரை முஸ்லிம்களின் இரு முக்கிய தலங்களுடன் தொடர்புற்று இருப்பதைக் காண முடிகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமும், அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமே இவ்விரு புனித ஸ்தலங்களாகும்.
இஸ்ராவும் இஸ்லாத்தின் பூர்வீகமும்
நபிகளாரின் விண்ணுலக யாத்திரை இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு இறை வழிகாட்டலும், வஹியும் இறங்கிய தலமான அல்மஸ்ஜிதுல் ஹராமுடன், மூஸா (அலை), ஈஸா (அலை) போன்றோருக்கும் இறைத்தூது கிட்டிய இடமான மஸ்ஜிதுல் அக்ஸாவுடனும் தொடர்புற்றுள்ளது. இது உணர்த்தி நிற்கும் உண்மை என்ன, இவ்விண்ணுலக யாத்திரையில் இவ்விரு இடங்களும் தொடர்புபட்டுள்ளதன் தத்துவம் யாது என்பன நோக்கத்தக்கவை. உண்மையில் இந்த யாத்திரை, குறித் இரு தலங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டதன் மூலம் உணர்த்தப்படும் ஒரு பேருண்மை இருக்கிறது. அவ்வுண்மை யாதெனில், நபி (ஸல்) அவர்கள் நூதனமாகத் தோன்றி ஒரு நபியல்ல. அவர் கொண்டு வந்துள்ள மார்க்கமும் புதியதொன்றல்ல. மாறாக, எந்த அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து நபி (ஸல்) அவர்கள் தனது விண்ணுலக யாத்திரையைத் துவங்கினார்களோ அதே இடத்தில் தமக்குரிய இறைத்தூதைப் பெற்ற முன்னைய தூதர்களான இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரும் நபியவர்கள் எந்த அல்மஸ்ஜிதுல் அக்ஸாவை தனது பயணத்தில் கடந்து சென்றார்களோ அதில் வைத்து, அதன் சூழலில் இறை வழிகாட்டலைப் பெற்ற மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட இன்னும் பல இறைத் தூதர்களும் போதித்த அதே மார்க்கத்தையே முஹம்மத் (ஸல்) அவர்களும் போதித்தார்கள் என்ற உண்மையே இங்கு போதிக்கப்படுகிறது. இந்த வகையில் அல் இஸ்ராவை நினைவுகூறும்போதெல்லாம் மதம், இறை வழிகாட்டல் பற்றிய இந்தப் பேருண்மையை நினைத்துப் பார்க்க வேண்டும். இஸ்ராவின் மூலம் செய்முறையாகக் காட்டப்பட்ட இவ் உண்மை அல்குர்ஆனில் சித்தாந்த ரீதியில் மிக விரிவாக விளக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கிறோம்.
உலகில் தோன்றிய அனைத்து இறை தூதர்களும் ஒரே வரிசையில் வந்தவர்கள். ஒரு கட்டடத்தின் கற்கள். அவர்கள் போதித்த மார்க்கம் ஒன்றே. அது இஸ்லாமாகும். அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருந்தனர் என அல்குர்ஆன் கூறும் ஓர் அடிப்படை உண்மையைச் சுட்டிக் காட்டுவதாக அல் இஸ்ரா அமைந்தது.
இப்ராஹீம் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மாறாக தூய்மையான முஸ்லிமாகவே இருந்தார். (3:67)
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால். ''நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)
இது இஸ்ரா உணர்த்தி நிற்கும் ஒரு பேருண்மையாகும். இந்த வகையில் இஸ்ரா நிகழ்ச்சியை நினைவுகூறும் பொழுது எமது ஞாபகத்திற்கு வருவது அல் மஸ்ஜிதுல் ஹராமும், அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமாகும்.
விடுதலையைத் தேடும் குத்ஸ்
இஸ்ரா கூறும் மேலும் ஓர் உண்மையும் இருக்கிறது. இஸ்ராவுடனும், தவ்ஹீதை நிலைநாட்ட வந்த இறைத்தூதர்களுடனும் குறித்த இரு தலங்களும் தொடர்புடையவனாக இருப்பதன் காரணமாகக அவ்விரண்டு புனிதஸ்தலங்களையும் அனைத்து வகையான ஷிர்க்குகள், அநியாயங்கள், அக்கிரமங்கள், குழப்பங்கள் ஆகியவற்றில் இருந்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அங்கே தவ்ஹீதினதும் ஈமானினதும் கொடியே பறக்க வேண்டும் என்ற உணர்வை எமக்குத் தருகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமை தூய்மைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு முஸ்லிம்களுக்கு இருப்பது போலவே அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை தூய்மைப்படுத்தும் பொறுப்பும் முஸ்லிம்களைச் சார்ந்ததாக உள்ளது. நபியவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூறுகின்ற நாம் அவ்விண்ணுலக யாத்திரையின் மையமாகவும், உலகில் தவ்ஹீதை நிலைநாட்ட வந்த பல நபிமார்களும் இறைத்தூதர்களும் இறைத்தூதைப் பெற்ற இடமாகவும் முஸ்லிம்களின் முதற்கிப்லாவாகவும் விளங்கம் பலஸ்தீனில் அமைந்துள்ள பைதுல் மக்திஸை இச் சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அது மீண்டும் அந்தச் சண்டாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பிறக்க வேண்டும்.
நபிகளாரின் இஸ்ரா நிகழ்வைப் பற்றி விளக்கும் அல்குர்ஆன் அத்தியாயம் ஸுரதுல் இஸ்ரா என வழங்கப்படுகிறது. அவ்வத்தியாயத்தின் முதல் வசனம் இஸ்ராவைப் பற்றிக் கூறுகிறது. தொடர்ந்து வரும் வசனங்கள் மூஸா (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் பற்றியும், யூதர்களின் அட்டகாசங்கள், வேதத்திற்கு முரணான அவர்கள் நடந்து கொண்ட விதம் பற்றியும் விளக்குகிறது. இவ்வாறு இஸ்ராவைத் தொடர்ந்து யூத சமூகத்தைப் பற்றிக் கூறுவதானது, அவர்களின் ஆதிக்கத்திலிருந்து என்றும், எப்போதும் மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதை சூசகமாக உணர்த்துவதாகும்.
நபிகளார் பெற்ற நன்மைகள்
இஸ்ராவும் மிஃராஜும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கௌரவமாகவம் அமைந்தது. அண்ணாரை அல்லாஹ் இக்குறுகிய உலகத்திலிருந்து பரந்து விரிந்த வானுலகம் நோக்கி உயர்த்தி தன் சன்னிதானம் வரை வரவழைத்து கௌரவித்தான். பல அற்புதக் காட்சிகளையும் அன்னாருக்கு காண்பித்து கௌரவித்தான்.
அனைத்துக்கும் மேலாக நபியவர்கள் மேற்கொண்ட இவ்விண்ணுலகப் பயணம் அவர்களுக்கு இறைவனால் வழஙகப்பட்ட ஒரு பெரும் பயிற்சியாக அமைந்தது. அல்லாஹுத்தஆலா அன்னாரை இந்த யாத்திரையின் மூலமாக உடல், உள, சிந்தனா ரீதியாக பலப்படுத்தினான். தனது தூதின் பளுவை சுமப்பதற்கும், தொடர்ந்து இடம்பெறவிருக்கம் ஹிஜ்ரத்தின் சிரமங்களைச் சகிப்பதற்கும், இனி வரும் அறப்போராட்டங்களின் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்வதற்கும் தேவையான மனோவலிமையையும் ஆன்மீகப் பலத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். இந்த வகையில் இஸ்ராவும், மிஃராஜும் நபியவர்களுக்கு முழு அளவில் வழங்கப்பட்ட பயிற்சியாக அமைந்தன.
நபியவர்கள் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட அன்றைய சூழ்நிலையை நோக்கும் போது இப்பயணமானது அவர்களுக்கு மன ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கக் கூடியதாக அமைந்தது. ஏனெனில் நபியவர்களது அழைப்புப் பணிக்கு பக்க பலமாக, துணையாக, ஆறுதலாக, உற்சாகமூட்டுபவராக இருந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களும், பாதுகாப்பு அரணாக இருந்த சிறிய தந்தை அபூதாலிப் அவர்களும் ஒரே ஆண்டில் மரணமடைந்தார்கள். இவ்விருவரதும் இழப்பு நபியவர்களை கடுமையாகப் பாதித்தது. காபிர்களின் தொந்தரவும், துன்புறுத்தலும் அதிகரிக்கத் தொடங்கின. இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் மனமுருகி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள் :
இறiவா! எனது பலவீனத்தையும், வழியறியா நிலையையும், மக்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையையும் உன்னிடமே முறையிடுகிறேன். அருளாளனுக்கெல்லாம் அருளாளனே! ரஹ்மானே! நீ தான் பாதிக்கப்பட்டோரின் ரப்பாக இருக்கிறாய். உனக்கு என்மீது கோபம் இல்லையெனில் நான் எதனையும் பொருட்படுத்துவதற்கில்லை. உனது திருப்தியே எனக்குப் பெரிது. (தபகாது இப்னு ஸஃத்)
இந்நிலையில் தான் அல்லாஹ் தன் சிறப்புக்குரிய அடியாருக்கு உதவிக்கரம் நீட்டினான். தன்பால் அன்னாரை வரவழைத்தான். அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான். நபியவர்களை வதைத்துக் கொண்டிருந்த இப்பூவுலகத்தின் கருமேகங்களைப் போக்கக் கூடிய, எதிர்கால வெற்றிக்குக் கட்டியம் கூறும் அத்தாட்சிகளைக் காண்பித்தான். அவற்றின் மூலம் அண்ணலாரின் ஈமானுக்கு மேலும் வலுவூட்டினான். பூமியையும், பூமியிலுள்ளோரையும் துச்சமாக மதிக்கும் மனோநிலையை அளித்தான். தான் காணும் அம்மாபெரும் அதிசயங்களினதும் அற்புதப் படைப்புகளினதும் இறைவன் தனக்குத் துணை நிற்கிறான் என்ற உணர்வை இறைவன் அண்ணலாருக்கு கொடுத்தான். இந்த வகையில் இஸ்ராவும், மிஃராஜும் நபியவர்களுக்கு புத்துணர்ச்சியையும், புதுத் தெம்பையும் வழங்கியது என்றால் அது மிகையாகாது. இவ்வுண்மையையே அல்லாஹ் தன் அருள்மறையில் இவ்வாறு கூறுகிறான்:
உம்மை நாம் ஸ்திரப்படுத்தி (உறுதிப்படுத்தி) வைக்காதிருப்பின் நீர் ஓரளவாயினம் அவர்கள்பால் சாய்ந்து விடக் கூடுமாய் இருந்தது. (17:74)
மிஃராஜ் ஒரு பரிட்சை
மிஃராஜ் சம்பவமானது அன்றிருந்த உண்மை முஃமின்களை பிரித்தறிவதற்கும், போலிகளை இனங்காண்பதற்கும், உறுதியான ஈமானைப் பெற்றிருந்தோரையும் ஈமானில் பலவீனர்களாக இருந்தோரையும் நபிகளார் அறிந்து கொள்ளவும் துணை புரிந்தது. இவ்வுண்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் கீழ்வருமாறு கூறுகிறான் :
நபியே! நாம் (இஸ்ரா, மிஃராஜின் போது) உமக்குக் காட்டிய காட்சிகளை மக்களுக்கு (அவர்களின் ஈமானை அறிய) ஒரு பரீட்சையாகவே அமைத்தோம். (17:60)
உண்மையில் ஹிஜ்ரத்துக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற இஸ்ராவும், மிஃராஜும் தொடர்ந்து வர இருக்கும் நிலைமைகளுக்கு முகங் கொடுக்க தன்னுடன் இருப்பவர்கள் தயாhனவர்களாக இருக்கிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நபிகளாருக்கு துணை புரிந்தது.
இஸ்ராவையும், மிஃராஜையும் முடித்துக் கொண்டு திரும்பிய நபி (ஸல்) அவர்கள் அதனை அடுத்த நாள் காலையில் மக்கள் மத்தியில கூறவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நபியவர்கள், தான் நேற்றிரவு மக்காவில் இருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வானுலகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் நேற்றிரவே மீண்டும் திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களை பொய்ப்பிப்பதற்கு தங்களுக்கு நல்லதோர் ஆதாரம் கிடைத்து விட்டதாக கருதியமையே காபிர்களது ஆனந்தத்திற்குக் காரணமாக அமைந்தது. இச்சம்பவத்தை வைத்தே முஹம்மதின் தோழர்களையும் அவரின் வலையில் விழ இருப்போரையும் இலகுவில் பலவீனப்படுத்தி முஹம்மரை விட்டும் அவர்களைப் பிரித்து தூரமாக்கி விட முடியும் என அவர்கள் மனப்பால் குடித்தனர். நபியவர்கள் மிஃராஜ் சென்றதைக் கூறிய மாத்திரத்தில் சிலர் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் சென்றனர்.
உமது நபி நேற்று இரவோடிரவாக விண்ணுலகம் போய் வந்ததாகப் பிதற்குகிறாரே? இதனையும் நீர் நம்புவீரோ! என ஏளனமாகக் கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அளித்த பதில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதைவிடப் பாரதூரமான செய்தியை அவர் கூறிய போது நான் அவரை நம்பவில்லையா? இறைவனிடம் இருந்து தனக்கு வஹி வருவதாக அவர் கூறினாரே! அதனையே நம்பிய நான் ஏன் இதனை நம்பக் கூடாது? அன்னார் இதனைக் கூறியிருந்தால் நான் இதனை எத்தகைய சந்தேகத்துக்குமிடமின்றி நம்புபவனாகவே இருப்பேன், என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்பட ஏனைய முஃமின்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது நபிகளாருக்கு பெரும் திருப்தியைக் கொடுத்தது. தம் முன்னே காத்திருக்கும் பணிகளைச் செவ்வனே மேற்கொள்வதற்கும் இந்தப் பாதையில் தாம் எதிர்நோக்கவிருக்கும் சோதனைகளை எதிர்நோக்குவதற்கும் உரிய வலிமையைப் பெற்ற மனிதர்கள் பலர் தம்முடன் இருப்பதை நபியவர்கள் இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
மிஃராஜின் பரிசு
மிஃராஜின் இரவிலே தான் ஐங்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்திற்குச் சென்ற இறைத்தூதருக்கு அவன் அளித்த சன்மானமாக தொழுகை அமைந்தது. அல்லாஹ் அதனை ஏனைய சன்மார்க்கக் கடமைகள் போன்று இப்பூவுலகில் வைத்து விதியாக்காது உயர்ந்த மலக்குகள் மத்தியில் வானுலகில் வைத்து கடமையாக்கினான். அந்தப் பரிசை தன் தூதருக்கும் தனது அடியார்கள் அனைவருக்குமான நிரந்தர நிலையான மிஃராஜாகவும் ஆக்கி வைத்தான். தன்னோடு தனது நபியவர்கள் விரும்பும்போதெல்லாம் உரையாடுவதற்கான ஊடகமாகவும் தொழுகையை அமைத்து வைத்தான்.
தொழுகையை நிலைநாட்டுங்கள். அதனை விட்ட முஷ்ரிக்குகளாக ஆகி விடாதீர்கள். (30:31)
என அல்குர்ஆன் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :
ஈமானுக்கம் குப்ருக்கும் இடையிலுள்ள தடை தொழுகையாகும். (முஸ்லிம்)
மிஃராஜ் வழங்கிய சொத்தான தொழுகை நபிகளாருக்கு அனைத்திலும் பிரியமான ஒன்றாக அமைந்திருந்தது.
தொழுகையில் தான் எனக்குக் கண்குளிர்ச்சி உள்ளது (நஸயீ) என நபியவர்கள் கூறினார்கள்.
புனித மிஃராஜ் நினைவுகூரும் போதெல்லாம் மிஃராஜின் பரிசாக அமைந்த தொழுகையின் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டும். அதனை சீர் செய்து கொள்ள வேண்டும் என உறுதி கொள்ள வேண்டும்.
மிஃராஜ் சித்தரிக்கும் இஸ்லாம்.
நபிகளார் மேற்கொண்ட மிஃராஜை மேலுமொரு கோணத்தில் பார்க்க முடிகிறது. அதாவது இஸ்லாத்தை, அதன் பாதையை படம் பிடித்துக் காட்டுவதாகவும், வேறு வார்த்தையில் சொல்வதாயின் இறைவனை அடைவதற்கான, அவன் திருப்தியை பெறுவதற்கான பாதையை, அப்பாதையின் மைற்கற்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சித்தரித்துக் காட்டுவதாகவும் மிஃராஜ் அமைந்துள்ளது. மேலும் கீழ்க்கண்ட அம்சங்களையும் இந்த மிஃராஜ் பயணம் நமக்குத் தொட்டுக் காட்டுகின்றது.
1. தௌபா
2. ஜிஹாத்
3. தொழுகை
4. ஸகாத்
5. பெரும்பாவம் வட்டி
6. நாவின் விபரீதங்கள்
7. பாவங்களின் பயங்கரம்.

புதன், 22 ஜூலை, 2009

சென்னை செங்குன்றத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா!

சென்னை செங்குன்ற‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாசென்னை செங்குன்ற‌ம் அருலிலுள்ள‌ கோணிமேட்டில் உருவாகி வ‌ரும் குட்வேர்ட் ப‌ப்ளிக் ஸ்கூல் வ‌ளாக‌த்தில் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழா இன்ஷா அல்லாஹ் ஜுலை 26 ஞாயிறு காலை 11 ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்விற்கு ஜ‌மாஅத்தே இஸ்லாமி ஹிந்த‌ த‌மிழ்நாடு & பாண்டிச்சேரி த‌லைவ‌ர் ஏ. ஷ‌ப்பீர் அஹ்ம‌த், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர‌பிக் க‌ல்லூரி முன்னாள் முத‌ல்வ‌ர் ம‌வ்லானா பி.எஸ்.பி. ஜைனுலாபுதீன் பாக‌வி ஹ‌ஜ்ர‌த் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்க‌ உள்ளார்.

சென்னை ஆயிஷா ம‌ருத்துவ‌ம‌னையின் த‌லைவ‌ர் ஷேக் முஹ்ஸின், ர‌ஹ்ம‌த் ப‌திப்ப‌க‌ மொழிபெய‌ர்ப்புக் குழு மேலாய்வாள‌ர் ம‌வ்ல‌வி அ. முஹ‌ம்ம‌து கான் ஃபாஜில் பாக‌வி, எல்.கே.எஸ். த‌ங்க‌ மாளிகை த‌லைவ‌ர் எல்.கே.எஸ். சைய‌த் அஹ்ம‌த், இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் ட்ர‌ஸ்ட் துணைத்த‌லைவ‌ர் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌த் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்க‌ உள்ள‌ன‌ர்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

தொட‌ர்புக்கு : 988 430 6902 / 98 401 23536





லால்பேட்டை மன்பவுல் அன்வார் பட்டமளிப்பு விழா! - 2



லால்பேட்டை மன்பவுல் அன்வார் பட்டமளிப்பு விழா! - 1



செவ்வாய், 21 ஜூலை, 2009

சூரிய கிரகணமும், நாம் செய்ய வேண்டியவையும்....

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்ப்பட்டது. உடனே, நபி صلى الله عليه وسلم அவர்கள் மேலாடை இழுபட(வேகமாக)பள்ளிக்குள் நுழைந்தார்கள் கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துகள் தொழுவித்தார்கள். எவரது மரணத்துக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே அவ்விரு கிரகணங்களையும் காணும் போது தொழுங்கள். உங்களுக்கு ஏற்ப்பட்டது விலகும் வரை துஆச் செய்யுங்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) நூல்:புகாரி)

صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு தாயாராகுங்கள்) என்று பிரகடனம் செய்யப்பட்டது. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமிர் நூல்:புகாரி, முஸ்லிம்)


சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அதன் ஒளிகளை நேரடியாகப் பார்ப்பதால் அதன் கதிர் வீச்சுகளால் கண்களும் உடலும் பாதிக்கும்.அதனால் வெளியே நடமாடக்கூடாது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இதன் ஆபத்துகளை மக்களுக்கு புரிய வைக்க முடியாது என்பதால் கிரகணம் முடிவது வரை நபி (ஸல்) அவர்கள் மக்களை பள்ளி வாயலில் தொழுகையில் ஈடுபடுமாறு செய்வார்கள். தொழுகை முடிந்து வெளியே வரும் போது கிரகணங்கள் முடிந்து விட்டிருக்கும். இஸ்லாம் எந்த அளவு முன்னெச்செரிக்கையாக நடந்து கொள்கிறது என்பதை சிந்தித்தால் அது ஒரு அறிவு மார்க்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


கிரகணத்தின்போது தொழுவது.


561. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும்வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும்வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் ''சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்' எனக் கூறினார்கள். முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.


கிரகணத்தின்போது தர்மம் செய்தல்.


562. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து 'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.


தொழுகைக்கு அஸ்ஸலாத்து ஜாமிஆ என்று அழைப்புக் கொடுப்பது.


563. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.


கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுதல்.


564. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் 'கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக!' என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கப்ருடைய வேதனையை விட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்.பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. முற்பகல் நேரத்தில் (இல்லம்) திரும்பினார்கள். பின்னர் தொழலானார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நிலையில் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் ரக்அத்தின் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். தொழுது முடித்து அல்லாஹ் நாடிய செய்திகளை மக்களுக்குச் சொன்னார்கள். பின்னர் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.


தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது.


565. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். அத்தொழுகையில் பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். (முடித்ததும்) 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணத்தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். என்று நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எதையோ பிடிக்க முயன்று பிறகு பின் வாங்கியது போல் நாங்கள் கண்டோமே ( அது ஏன்?)' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் சொர்க்கத்தைப் பார்த்தேன். அதன் ஒரு குலையைப் பிடிக்க முயன்றேன். அதை நான் பிடித்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் நீங்கள் அதை உண்பீர்கள். மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்' என்று விடையளித்தனர். 'அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்' என்று கேட்கப்பட்டதற்குக் 'கணவனை நிராகரிக்கிறார்கள்; காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்' என்று விடையளித்தார்கள்.


கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது.


566. அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.


இறைவனை நினைவு கூர்தல்.


567. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுதல்.568. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூவுச் செய்தார்கள். ருகூவிலிருந்து நிமிர்ந்ததும் 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வ லகல் ஹம்து' என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.


(ஸல்) அவர்கள் ஒரு கிரகணத்தின் போது தொழுதார்கள். அதில் (குர் ஆன்) ஓதி விட்டு ருகூவு செய்தார்கள். மீண்டும் ஓதி ருகூவு செய்தார்கள்.இவ்வாறு இரண்டு தடவை ருகூவு செய்தார்கள். அடுத்த ரக் அத்தையும் இதுபோலவே செய்தார்கள்.அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : திர்மிதி, புஹாரி

புதன், 15 ஜூலை, 2009

இளம் மார்க்க அறிஞர்களே! பல்கலைப் பட்டம் பெறலாம் வாரீர்!!


திறன் குன்றிய மாணவர்களுக்கு 'சிறப்பு கல்வி'

சென்னையில் ஆலிம்களின் சொற்பொழிவு

திங்கள், 13 ஜூலை, 2009

சொத்து பற்றிய கேள்விக்கு விரிவான விளக்கம்

ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது சொத்து முழுவதையும் தருமம் செய்யவோ அல்லது தனது பிள்ளைகளுக்கு மத்தியில் பகிர்ந்தளிப்பதற்கோ குர்ஆன் ஹதீசில் அனுமதியுன்டா? பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிப்பதாயின் சமமாகவா பகிர வேண்டும்?

ஒருவருடைய சொத்தில் அவர் மரணிக்கும் வரை அவரே முழுப் பொறுப்புதாரியாகின்றார். சொத்துக்கு முதலாளியான அவர் தமது சொத்தை தான தர்மம் செய்யவோ பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கவோ, யாருக்கும் எதையும் கொடுக்காமல் தனது வாரிசுகளுக்கு விட்டு செல்லவோ உரிமைப்படைத்தவராவார்.

ஆனாலும் இஸ்லாம் பொருளாதாரத்தின் மீது ஜகாத்தை விதித்துள்ளது. தான தர்மங்களை ஊக்குவித்துள்ளது.

அதிக இறை நம்பிக்கையுள்ள ஒருவர் தமது சொத்து முழுவதையும் இறைவழியில் தானதர்மம் செய்து விட அனுமதியுண்டா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம்.

அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 25:67)

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா (ரலி) )பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2748

ஆரோக்யம் - பொருளாதாரத்தின் மீது ஆசை - அதே சமயம் வறுமைக் குறித்த பயம் இவை ஒன்று சேர இருக்கும் நிலையில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும் அதுவே மகத்தான் செலவீடாகும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

எனவே வயதான காலம் வரட்டும் என்று காத்திராமல் ஒருவர் தனது வாலிப பருவத்தில் அவருடைய சொத்தை இறை வழியில் செலவு செய்யலாம் - செய்ய வேண்டும்.

நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது" (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் வேதத்தில், 'நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது 'பைருஹா' (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம்.

எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! அது லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். ( அனஸ் (ரலி) பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2758

பெருமதிப்பு மிக்க, நீர் நிலைகள் உள்ள தனது சொத்தை இறைத் திருப்தியைப் பெருவதற்காக தனது இரத்த பந்த உறவினர்களுக்கு (இவர்கள் சொத்தின் வாரிசுதாரர்களல்ல) இறைத்தூதரின் வழிகாட்டுதல் படி அபுதல்ஹா(ரலி) அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள்.

இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் தனது சொத்தை தன் விருப்படி செலவிடலாம் என்பது விளங்குகின்றது.

ஆனாலும் ஒருவர் தனது சொத்துக்கு வாரிசுதாரர் இருக்கும் நிலையில் தனக்கு சொந்தமான முழு சொத்தையும் இறைவழியில் செலவிட நபி(ஸல்) அனுமதிக்கவில்லை.

தனக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில் அவரும் செல்வ செழிப்புடன் உள்ள நிலையில் தனது சொத்தை இறைவழியில் செலவு செய்வது பற்றிய தீர்ப்பை ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) கேட்கிறார்கள். 'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்" என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்" என்றே பதிலளித்தார்கள்.

நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)" என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. (புகாரி பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2742 )

பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது. திர்மிதியில வரும் செய்தியில் தம் மகள் செல்வநிலையில் இருக்கிறார் என்ற கூடுதல் விபரம் கூறப்பட்டுள்ளது.

ஒருவன் தன் சொத்தில் தன் வாரிசுக்கு கிடைக்க வேண்டிய பங்கை கிடைக்காமல் செய்து இழப்புக்குள்ளாக்கி விட்டால் அல்லாஹ் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கை இழக்க செய்து விடுவான் என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அனஸ்(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் சட்டங்கள்.

  • ஒருவர் தம் சொத்துக்கு முழு உரிமைப் படைத்தவராவார்
  • தள்ளாத காலம் வரை காத்திராமல் வாலிபக் காலங்களில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும்.
  • செலவு செய்கிறேன் என்று குடும்பத்தாருக்கு இழப்பு ஏற்படுத்தி விடக் கூடாது. அவர்கள் செல்வ நிலையில் இருந்தாலும் சரியே.
  • மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தையோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் வஸியத் செய்யலாம்.
  • செலவு செய்ய முடிவு எடுத்து விட்ட நிலையில் சொத்துக்கு வாரிசுதாரராகாத பிற உறவினர்களுக்கு, சொந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • சொத்து சொர்க்கத்தில் நமது இடத்தை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.

அடுத்து சொத்துதாரி உயிருடன் இருக்கும் போது தன் குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பார்ப்போம்.

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46) அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா (26:88)

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது இயற்கையாகவே ஒரு குழந்தை மீது அன்பு அதிகமாக இருக்கத்தான் செய்யும். இதன் காரணத்தால் பிற குழந்தைகளை விட குறிப்பிட்ட குழந்தைக்கு எதையும் அதிகமாக கொடுக்கும் மனநிலை வரும்.

செலவிடுதல்.

குழந்தைகளுக்கு செலவிடுவதில் யாரொருவரும் விதிவிலக்கில்லாமல் வித்தியாசப்படவே செய்வர். பெற்றப்பிள்ளைகளுக்கு செலவிடப்படும் தொகை வித்தியாசமாக இருக்கக் கூடாது என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அது கட்டாயம் வித்தியாசப்படவே செய்யும். சில குடும்பங்களில் ஆண்குழந்தைகளின் படிப்புக்கும், பிற குடும்பங்களில் பெண் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கும் செலவிடப்படும் தொகையைப் பார்த்தால் பெரும் வித்தியாசம் இருக்கும். இது பிள்ளைகளின் தேவை அறிந்து செய்ய வேண்டிய செலவீனமாகும்.

இது தந்தை மீதான கடமை. இதில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. "தேவையே" இங்கு பிரதானமாக பார்க்கப்படுவதால் இந்த வித்தியாசத்தால் சொத்துக்குரியவர் குற்றவாளியாக மாட்டார்.

கொடுத்தல்

செலவிடுவதை கடந்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்காக கொடுக்கப்படும் தொகை, அல்லது சொத்து போன்றவற்றில் அவர்களைக் கலந்துக் கொள்ளாமல் பாராபட்சம் காட்டக் கூடாது. இது குழந்தைகளுக்கு மத்தியில் வீண் மனதாபத்தையும், சண்டை சச்சரவையும் ஏற்படுத்தி விடும்.

"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவீர்கள், உங்கள் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்" என்ற நபிமொழியை கவனத்தில் கொண்டு தந்தை நடந்துக் கொள்வதே அறிவுடமையாகும்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மேடையின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள்.

என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். புகாரி பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2587

இந்த நபிமொழியிலிருந்து பெறப்படும் உண்மை 'கொடுக்கும் விஷயத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் நீதியாக நடந்துக் கொள்ள வேண்டும்" என்பதாகும்.

பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பிரச்சனைகள் வெடிப்பதற்கு காரணமே தாய் தந்தையின் பாராபட்ச பொருளாதார அன்பளிப்புகளே.

முஸ்லிம் குடும்ப தலைவர்கள், தலைவிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டிய ஒன்று குழந்தைகளுக்கு மத்தியில் பாராபட்சமாக நடக்காமலிருப்பதாகும்.

தந்தை மரணித்தப்பின் வாரிசுரிமை பெறுபவர்கள் என்பதும், அவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்தை பகிர்வது என்பதும் வெவ்வேறாகும்.

வாரிசுரிமையுள்ளவர்களுக்கு சொத்துதாரர் உயிருடன் இருக்கும் போது எதையும் கொடுக்கக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

சொத்து முழுவதையும் ஒருவர் பகிர்ந்து அளித்து விட்டு மரணித்துவிட்டார். இது தெளிவான பிரகு மரணித்தவரின் வாரிசுகள் தமது பங்குகளை குர்ஆன் சட்டப்படி மீளப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அல்லது அது அவர்களுக்கு குற்றமில்லையா?

தனது சொத்து முழுவதையும் சொத்துக்கு வாரிசிலலாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது. மரண சாசனம் செய்யக் கூடாது என்பதை நாம் முன்னர் கண்டோம்.

சொத்துக்கு வாரிசாக முடியாத பிறருக்கு ஒருவர் தனது சொத்து முழுவதையும் எழுதி விட்டு மரணிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த சொத்துக்கு வாரிசாகக் கூடியவர்கள் இஸ்லாமிய நீதி மன்றத்தை அணுகலாம். அணுகினால் அவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும்

இதற்கான ஆதாரத்தை கண்டு விட்டு தொடர்வோம்.

ஆறு அடிமைகளைப் பெற்றிருந்த ஒரு நபித்தோழர் அந்த அடிமைகள் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத நிலையில் மரணிக்கும் போது ஆறு அடிமைகளையும் விடுதலை செய்து விட்டு மரணித்துவிட்டார். இறந்தவரின் வாரிசுதாரர்கள் இதுகுறித்து நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது அந்த ஆறு அடிமைகளையும் அழைத்து இருவர் இருவராக மூன்று அணியாக அவர்களைப் பிரித்து சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். பெயர் வந்த அணியினரை விடுதலை செய்து நால்வரை வாரிசுதாரர்களுக்கு உடைமையாக்கி விட்டார்கள். (இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கும் இச் செய்தி முஸ்லிம், அபுதாவூத் போன்ற நூல்களில் வருகின்றது.

வேறெந்த சொத்தையும் வைத்திருக்காத நிலையில் இருக்கும் சொத்தையும் பிறருக்கு வழங்கி மரணித்த ஒரு நபித்தோழரின் செயலை நபி(ஸல்) சரிகாணவில்லை. மரணித்தவரின் குடும்பத்தார் எதுவுமின்றி நிற்கும் நிலையில் அனைத்தையும் தானம் செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலி்ருந்து விளங்கலாம்.

மூன்றில் ஒருபங்கு அதாவது 33 சதவிகிதத்திற்கு அதிகமாக ஒருவர் பிறருக்கு கொடுத்து விட்டோ அல்லது உயில் எழுதி விட்டோ மரணித்தார் என்றால் அந்த 33 சதவிகிதத்திற்கு அதிகமானவற்றை மீட்க நாம் நடவடிக்கை எடுக்கலாம்.

குர்ஆனின் அறிவைப் பெற்று அதன்படியோ அல்லது குர்ஆனின் அறிவு இல்லாமலோ ஒருவர் தனது பிள்ளைகளுக்கு தான் உயிருடன் இருக்கும் போதே கூடுதல் குறைவாக தனது சொத்தை பிரிந்து அவரவர் பெயரில் எழுதி வைத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மரணித்த பிறகு அவர் எழுதி வைத்த சொத்துக்களை மீளாய்வு செய்து - ஒன்று திரட்டி மீண்டும் குர்ஆன் சொல்லும்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அது தவறும் கூட.

வாரிசுரிமை, பாகப்பிரிவினை பற்றி பேசும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ஒரு சட்டத்தை நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

மரணித்தவர் விட்டு சென்ற சொத்தில் அவரது கடன், மரண சாசனம் (உயில்) போக மீதியுள்ளவற்றில் தான் பிறருக்கு உரிமையுள்ளது என்று. என்றைக்கு தனது வாரிசுகள் பெயரில் சொத்து மாற்றப்படுகின்றதோ அன்று முதல் அந்த சொத்துக்குரியவர் அந்த வாரிசுதானே தவிர மாற்றி கொடுத்தவருக்கும் அந்த சொத்துக்கும் எந்த உரிமையுமில்லை. மாற்றிக் கொடுத்தவருக்கே உரிமையில்லை எனும் போது பிறர் அந்த சொத்து குறித்து நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியமாகும்.

நான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ள ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போது அந்த குழந்தைகளுக்கு மத்தியில் வித்தியாசத்தில் தனது சொத்தை பிரிக்கிறார். மகன்களுக்கு அதிகமாகவும், பெண்பிள்ளைகளுக்கு குறைவாகவும், அல்லது பெண் பிள்ளைகளுக்கு அதிகமாகவும், ஆண்பிள்ளைகளுக்கு குறைவாகவும் பிரித்து அவர்கள் பெயரில் சொத்தை மாற்றி எழுதி பதிவு செய்து விடுகின்றார். அவரது மரணத்திற்கு பின் குழந்தைகள் இதை பாராபட்சமாக கருதுகின்றது. இப்போது அந்த பிள்ளைகளாக வேண்டுமானால் ஒன்று சேர்ந்து பேசி தனது சொத்துக்களை விரும்பியவாறு பிரித்துக் கொள்ளலாமே தவிர தந்தை எழுதி வைத்தது செல்லாது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.

ஒருவேளை பிள்ளைகளுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால், தன் தந்தை மூலம் தமக்கு கிடைத்த சொத்தை மீண்டும் பகிர்ந்தளிப்பதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவர் குற்றவாளியுமல்ல. அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் முடியாது.

சூரதுன் நிசாவில் வாரிசுரிமைச் சட்டங்கள் சொல்லிவிட்டு 14 ஆவது வசனத்தில் இதை மீருபவர்கள் நிரந்தர நரக வாதிகள் என்று கொல்கிறது இதனை நாம் எப்படி தெளிவாக விளங்குவது.

பாகப்பிரிவினை பற்றிப் பேசும் அனைத்து வசனங்களும் மரணித்தவருக்கு பிறகு அந்த சொத்தை பிரிப்பவர்கள் பற்றியே பேசுகின்றது.

அவ்வாறு பிரிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய கடமை

  1. மரணித்தவரின் கடன்,
  2. அவர் எழுதி வைத்துள்ள மரண சாசனம் (உயில்) இவை இரண்டும் போகவே பிற சொத்தில் பாகபிரிவினை.

இது இறைவனின் வரம்பாகும். இதை மீறுபவர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான் இறைவன். ஏற்கனவே பிரித்து எழுதப்பட்ட சொத்திற்கும், இறைவனின் இந்த எச்சரிக்கைக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

மு. முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி

ஞாயிறு, 12 ஜூலை, 2009

குவைத்தில் ஆலிம்களின் சொற்பொழிவு

சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை

ஸவூதி மருத்துவனையில் வேலை வாய்ப்பு


ஸவூதி அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு

வியாழன், 9 ஜூலை, 2009

குடும்பத்தில் மகிழ்ச்சி, மன நிம்மதி தேவையா?

ரஜப் மாத சிறப்பு கட்டுரை - 2




ரஜப் மாத சிறப்பு கட்டுரை - 1




த‌மிழ‌க‌ அர‌சின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு: மறுபரிசீலனை செய்ய முஸ்லிம் லீக்கின் த‌லைமையில் ச‌முதாய‌ அமைப்புக‌ள் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டுமென முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொண்டு முஸ்லிம் அமைப்புகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முஸ்லிம்களிடையே எழுந்துள்ள அச்ச உணர்வை போக்கவும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு அதனை கொண்டு செல்லவும் ஒருமித்த கருத்தை பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் 07-07-2009 செவ்வாய் மாலை 5.30 மணிக்கு சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் பிரசிடெண்டில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் ஆம்பூர் எச். அப்துல் பாஸித், சட்ட மன்ற முன்னாள் இந்திய தேசிய லீக் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், அணிகளின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், என். ஹாமித் பக்ரீ, கே.எம். நிஜாமுத்தீன், மில்லத் இஸ்மாயில், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில தேசிய லீக் பொதுச் செயலாளருமான திருப்பூர் அல்தாப், த.மு.மு.க. மாநிலச் செயலாளர் ஏ.எஸ். முஹம்மது ஜுனைது, த.மு.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் பி.எல்.எம். யாசின், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் அப்போலோ முஹம்மது ஹனீபா, சென்னை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொருளாளர் எம். முஹம்மது சிக்கந்தர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச. உமர் பாருக், ஐக்கிய சமாதான அறக்கட்டளை பொறுப்பாளர் சி. அபூபக்கர் சித்திக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை செய்தித் தொடர்பாளர் கே.எம். இல்யாஸ் ரியாஜி, சுன்னத் ஜமாஅத் ஆன்மீக பேரவை தலைவர் தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் எஸ். என். சிக்கந்தர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர், தமிழக சட்டமன்ற முன்னாள் இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம். நாகூர் மீரான், பேராசிரியர் டாக்டர் சையத் ரபீக் அஹமது, பேராசிரியர் ஆர்.என். இக்பால் அஹமது ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு-

  • தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.
  • தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப்பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.
  • முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.
  • நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த தி.மு.க. பாடுபடும் என்று டாக்டர் கலைஞர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து பின்னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் என். ஜெய்னுல் ஆபிதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மவ்லவி ஹாமித் பக்ரீ இறைமறை ஓதினார்.

இக் கூட்டத்தில் மாநில முஸ்லிம் லீக் விவசாய அணி துணை அமைப்பாளர் திருச்சி வி.எம். பாரூக், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, செயலாளர் பூவை எம்.எஸ். முஸ்தபா, வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.எச். இஸ்மாயில், மாநில முஸ்லிம் லீக் கல்வி மேம்பாட்டு துணை அமைப்பாளர் ஏ. ஷேக் மதார், யு. முஹம்மது சலீம் சித்தீக், கே.எம். ஹசன் சேக், வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. எம். ரஃபி, பூவை காதர், டி.எம்.கே. ஹாஜா நஜ்முத்தீன், திருவான்மியூர் காஜா, சுன்னத் ஐக்கிய ஜமாஅத் பேரவை கிருஷ்ணாம்பேட்டை கிளை செயலாளர் எம்.ஏ. முஹம்மது இப்ராஹீம், ரஹ்மத்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மவ்லவி சலீம் சிராஜி துஆ ஓதினார்.

Source: தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்

புகழ்பெற்ற தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் ஷாஹி இமாம் ஸயித் அப்துல்லாஹ் புஹாரி வஃபாத்தானார்.

அவருக்கு வயது 87.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இத்தகவலை ஜும்மா மசூதியின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் ஸயித் அப்துல்லாஹ் புஹாரி தில்லி ஜும்மா மசுதியின் 12வது ஷாஹி இமாம் ஆவார்.

அவரது தந்தை இமாம் ஸயி ஹமீத் புஹாரி 11வது ஷாஹி இமாமாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் உள்ள சம்ஹார் என்னும் ஊரில் பிறந்த இமாம் ஸயித் அப்துல்லாஹ் புஹாரி தில்லியில் உள்ள அப்துர் ரப் மதரஸôவில் கல்வி பயின்றார்.

1946ல் இவர் ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாமாக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

இதில், அகமது புஹாரி என்னும் மகன் தான் தற்போது ஜும்மா மசூதியின்

ஷாஹி இமாமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 7 ஜூலை, 2009

குடும்பப் பெண்களுக்கான தபால் வழி இஸ்லாமியப் படிப்பு



அஞ்சல் வழி இஸ்லாமியக் கல்வி - 2


அஞ்சல் வழி இஸ்லாமியக் கல்வி - 1





அஃப்ஜலுல் உலமா படிப்பு

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் - 4

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் - 3





அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் - 2





Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி