முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,
பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,
அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,
பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
செவ்வாய், 15 ஏப்ரல், 2014
பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற நபிமொழி (ஹதீஸ்) ஆய்வரங்கம்
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருந்த நபிமொழி (ஹதீஸ்) ஆய்வரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை கடந்த வியாழக்கிமை (10.04.2014) மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கும்மத் பள்ளி தெருவிலுள்ள ரஹ்மான் மண்டபத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் குறித்த ஆய்வரங்கம் திருநெல்வேலி மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் பி.ஏ. காஜா முய்னுத்தீன் பாகவீ அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது.
நபிமொழி (ஹதீஸ்) என்றால் என்ன? எப்படி தொகுப்பட்டது? நபிமொழி தொகுப்பாளர் (முஹத்தீஸ்) என்றால் யார்? மார்க்க சட்ட வல்லுநர் (முஃபக்கிஹ்) என்றால் யார்? போன்ற விஷயங்கள் குறித்து சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி ஆலிம்கள் விரிவாக விளக்கம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலிம்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஷேக் ஆதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)