முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,
பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,
அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,
பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
சனி, 31 ஜனவரி, 2015
திருக்குர்ஆன் பாடம் துவங்கும் நிகழ்ச்சி
பரங்கிப்பேட்டை காதிரிய்யா பள்ளிவாசலின் திருக்குர்ஆன் மதரஸாவில் குர்ஆன் பாடம் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரங்கிப்பேட்டையின் புதிய ஜும்ஆ பள்ளியான ஹக்கா ஸாஹிப் தெரு காதிரிய்யா பள்ளிவாசலில் அல் மதரஸத்துல் காதிரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா செயல்பட்டு வருகிறது. இம்மதரஸாவில் 170 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் 53 மாணவ, மாணவியர் ஆரம்ப நிலை பாடங்களை முடித்து விட்டு திருக்குர்ஆன் பாடத்தை தொடங்கும் நிகழ்ச்சி இன்று அப்பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை வடபழனி ஹக்கானி மஸ்ஜித் தலைமை இமாம் மவ்லவீ ஜி.எம். தர்வேஷ் ரஷாதி, தீனியாத் மக்தப் கண்காணிப்பாளர்கள் மவ்லவீ எஸ். முஹம்மது இஸ்மாயீல் காஷிஃபி மற்றும் மவ்லவீ ஏ. அமானுல்லாஹ் மழாஹிரி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மதரஸா மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி எம். எஸ். முஹம்மது யூனுஸ், தவ்லத் நிஸா மகளிர் மதரஸா நிர்வாகி எஸ்.ஓ. செய்யது ஆரிஃப் மற்றும் மௌலவிகள் ஹச். அப்துஸ் ஸமது ரஷாதி, யு. நூருல்லாஹ் பாகவீ, முஹம்மது யூசுஃப் காஷிஃபி, எஸ். கௌஸ் முஹ்யத்தீன் மன்பயீ, எம்.எஸ். அஹ்மத் கபீர் காஷிஃபி, துணை காஜி ஏ. லியாகத் அலி மன்பயீ உட்பட உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை உச்சாகப்படுத்தினர்.
படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)