- நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும்.
- அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
- 08.12.2011 வியாழக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மட்டும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்கத்தின் நிர்வாகிகள்.
- குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,
பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,
அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,
பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
புதன், 23 நவம்பர், 2011
K-Tic: குவைத்தில் முப்பெரும் விழா! அரசு விருந்தினராக சூளைமேடு அப்துல்லாஹ் பாகவீ பங்கேற்பு!!
புதன், 9 மார்ச், 2011
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைவர் பெரம்பலூர் மாவட்டம், விஸ்வகுடி மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்களின் மகளார் எம். ராபியத்துல் பஸரிய்யா (வயது 12) அவர்கள் இன்று (09.03.2011 புதன் கிழமை) அதிகாலை 3 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு பெரம்பலூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அக்குழந்தையின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அக்குழந்தையின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழகத் தொடர்புக்கு: (+91) 9443223768 / 8015668858 / (+91 432) 8278611
நன்றி! வஸ்ஸலாம்!!
மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர்,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
துரித சேவை அலைபேசி எண்:(+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
---------------------------------------------------
“Kuwait Tamil Islamic Committee (K-Tic)” deeply saddened to hear of the sudden passing away of “Ms. M. Rabiayathul Basaria”, daughter of our hazrath K-Tic’s President Viswagudi Moulavee M. S. Mohammed Meera Sha Fazil Baqavee.
The young girl was 12 years, last week hospitalized & today (Wednesday 9.3.2011) early morning at 3am she passed away. She will be buried after Asr at Peramballur, Tamilnadu, India.
Inna LILLAHI wa Inna Ilaihi Raji'oon...
We would convey our heartfelt deep condolences to the bereaved family. May Allah s.w.t. enhance her recompense and be generous in calamity and forgive the deceased and induce her father and her family with patience and multiply for us and for them recompense through patience.
India contact nos. of our Hazrath : (+91) 9443223768 / (+91) 8015668858 / (+91 432) 8278611
புதன், 23 பிப்ரவரி, 2011
குவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!
நீடுர் அரபுக் கல்லூரி முதல்வர் மவ்லானா அ. இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!
- குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் குழந்தைகள் பங்குபெற்ற மழலையர் நிகழ்ச்சிகள்!
- 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!
எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் அவர்களின் வரலாற்றை மக்களின் உள்ளங்களில் பதிவு செய்வதற்காக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்த "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்" தொடர்ந்து மூன்று நாட்கள் நான்கு இடங்களில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...
18.02.2011 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி முதல் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப், 'முஹம்து அப்துல் அஜீஸ் அல் உதைபீ' பள்ளிவாசலில் 6ம் ஆண்டு மாபெரும் ஸீறத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு... கீழ்க்கண்ட முறையில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...
1. திருக்குர்ஆன் கிராஅத், சூரா / திக்ர் / துஆ ஒப்புவித்தல் நிகழ்ச்சி
2. ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு
3. K-Tic பிறை செய்தி மடல் இதழின் 6ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு
முதல் நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப் பிறகு மக்ரிப் வரை குவைத் நாடு தழுவிய அளவில் தமிழ் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு திருக்குர்ஆன் கிராஅத், சூரா / திக்ர் / துஆ ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, நடுவராக செயல்பட்டார். வெற்றி பெற்றோருக்கு மாநாட்டின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இரண்டாவது நிகழ்ச்சியாக மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 10:00 மணி வரை நடைபெற்ற ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையேற்க, சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர்கள் மவ்லவீ காரீ ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் எம்.எஸ். அப்துல் குத்தூஸ் பி.ஏ., இறைமறை திருக்குர்ஆனை கிராஅத் ஓத, மவ்லவீ அஷ்-ஷைஃக் ஏ. செய்யது அபூதாஹிர் பாகவீ, வரவேற்புரையாற்ற நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.
இச்சிறப்புமிகு மாநாட்டில் தலைமையுரைக்கு பின் சங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழகத்திலிருந்து வருகை தந்த நீடுர், மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் முதல்வரும், நீடுர்-நெய்வாசல் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அல்லாஹ் அழைக்கும் அண்ணல் நபி (ஸல்)' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரையை நிகழ்த்தினார்கள்.
மவ்லானா அவர்கள் தனது உரையில், சிறப்புப் பெயர்களை கூறி நபி (ஸல்) அவர்களை திருக்குர்ஆனில் அல்லாஹ் அழைக்கும் முறைகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித் தோழர்கள் அழைத்த விதம், மற்ற மக்கள் அழைத்த முறை, நாம் அழைக்க வேண்டிய நடைமுறை போன்றவற்றை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் ஆதராங்களுடன் பட்டியலிட்டு மாநாட்டு சிறப்புரையாற்றினார்கள்.
இறுதி நிகழ்ச்சியாக K-Tic பிறை செய்தி மடல் இதழின் 6ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் சிறப்பு மலரை வெளியிட முதல் பிரதியை சங்கத்தின் மூத்த ஆலோசகரும், குவைத் அல் ஈமான் நற்பணி மன்றத்தின் தலைவரும், சீமாட்டி சில்க்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய அல்ஹாஜ் எம். பஷீர் அஹ்மத் அவர்களும், இரண்டாவது பிரதியை சங்கத்தின் ஆலோசகரும், குவைத் வடக்குமாங்குடி ஜமாஅத்தின் தலைவரும், மஹாராஜா டெக்ஸ்டைல் சில்க் சென்டர் நிறுவனத்தின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ்.என். அப்துர் ரஜ்ஜாக் அவர்களும், மூன்றாவது பிரதியை சங்கத்தின் ஆலோசகரும், சுமங்கலி மற்றும் சுப்ரீம் டெக்ஸ் நிறுவனங்களின் அதிபருமாகிய ஆலி ஜனாப் எஸ். அன்ஸாரி அவர்களும், அடுத்தடுத்த பிரதிகளை தொழிலதிபர்களும், சமூகப் பணியாளர்களும் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களால் சால்வை போர்த்தப்பட்டு கவுரவம் அளிக்கப்பட்டது. குவைத்தில் இயங்கும் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி அல் ஈமான் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் தலைமை நிலையச் செயலாளர் எம். சுலைமான் பாட்சா, ஹழ்ரத் அவர்களுக்கு சால்வை போர்த்தி கவுரவப்படுத்தினார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள், சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் கொள்கைகள், சேவைகள், செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்ததுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் பேராசிரியர் அ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லிப்டன் நிறுவனம் மூலம் மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் குளிருக்கு இதமாக தேநீர் மற்றும் சூப் வகைகளும், மாநாட்டின் இறுதியில் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் இரவு உணவும், சிறப்பு மலரும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இச்சிறப்புமிகு மாநாட்டில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலதிக விபரங்களுக்கு..
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள்.