முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

சிப்பாய்கள் பெற்ற உத்வேகம்

சிப்பாய்கள் பெற்ற உத்வேகம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவது 1857 - இல் நடந்த சிப்பாய் கலகம் ஆகும்.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியப் போக்குகளுக்குத் துணை போகிறோமே என்றஅதிருப்தியுடன் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றிய ஏராளமான இந்திய இளைஞர்களுக்கு. பிரிட்டீஷாருக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் உத்வேகத்தைக் கொடுத்ததே ஓர் இஸ்லாமிய நாடு சந்தித்த போர்தான்.
நெப்போலியனையே கடற்ப்போரில் தோற்கடித்த ஆங்கிலப் படை முதன் முதலாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போரில்தான் தோல்வியைச் சந்தித்தனர். 50 போடி ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் போர் வீரர்களை இழந்த ஆங்கிலேயரின் அத்தோல்வி, இந்திய சிப்பாய்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. ஆங்கிலேயர் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அவர்களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய சிப்பாய் களுக்குப் பிறந்தது.
ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது ஓர் இஸ்லாமிய நாடு என்றால், அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவாக்கியது ஓர் இஸ்லாமிய மார்க்க நெற் ஆகும்.
1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப் பிரிட்டீஷார் அற்முகம் செய்தனர். ஆத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எள்தாக வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக் கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்ஆதாட்டாக்களைப் பொதிந்திருந்த மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில் தடவப்பட்டிருந்த பன்றி – பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)உணவு ஆகும். பிராமணர்களும் பிற சைவர்களும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். எனவே தங்கள் வாயில் பன்றி – பசுக்கொழுப்பு படுவதை இருசாரரும் வெறுத்தனர்.
கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட எனடஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது. அந்த நேரத்தில் வங்காளம் பராக்பூரில் முகாமிட்டிருந்த 34-வது படைப்பிரிவு புரட்சியை ஆரம்பிக்கத் துடித்துக் கொண்டிருந்தது இப்படைப் பிரிவிலுள்ள இந்திய சிப்பாய்களுக்கு கல்கத்தாவின் அருகில் தங்கியிருந்த அலி நத்ஹிகான் என்ற இஸ்லாமிய ஆட்சியாளர்தான் ஆதரவும் தூண்டுதலும் அளித்து வந்தார்.ழூ
இந்த நேரத்தில் ராணுவ முகாம்களுக்குள் இருந்த இந்திய வீரர்களிடம் பிரிட்டீஷாருக்கு எதிரான போராட்ட உத்வேகத்தைத் தங்கள் ரகசியப் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் பக்கீர்கள் ஏற்படுத்தினார்ககள்.
ஆயிரக்கணக்கான பக்கீர்கள் பல இடங்களுக்கும்சென்ற சிப்பாய்கள் மனதில் விடுதலைத்தீயை மூட்டினர். ராணுவ முகாம்களுக்குள் நுழைந்து வீரர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.ழூழூ
(ழூ வீரசாவர்க்கர், எரிமலை,பக்கம்.85) (ழூழூ மேற்படி., பக்கம்.63)
மக்கள் மத்தியிலும் பிரச்சாரங்கள் மூலம் இப்பக்கீர்கள் சுதந்திர ஊழுச்சியை ஊட்டினர். இதனை வீரசாவர்க்கர், 1857-இல்...தேசயாத்திரை செய்வதாக் கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும் ஒவ்வொரிடத்திலும் ரகச்யமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர். அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான டுறைகள் வெகு சதந்திரமாக் கைக் கொள்ளப்பட்டன.
அந்தப் போதகர்கள் (மௌல்விகள்) ஒவ்வொரு நகரத்திறு;கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவரப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்ழூ. -என்று வியந்து தன் நூலில் வடித்துள்ளார்.
பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன் இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர்.
(ழூ மேற்படி, பக்கம். 63-64)
அவ்வாறு எதிர்த்தவர்கள் விலங்கிடப்படு;டு, ராணுவ உடைகள் கிழித்தெறியப் பட்டு மக்கள் முன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அவமாப்பட்ட குதிரைப்படை வீரர்கள் சிறைகளை உடைத்துக் கைதிகளை விடுவித்துக்கொண்டு வெள்யேறினர்.அப்போது கர்னல் பின்னஸ் போன்ற அதிகாரிகளையும், ஏராளமான பிரிட்டீஷாரையும் கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு தீயிட்டனர்.
அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! – என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.ழூ
இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் 'டில்லியை மீட்போம்! டீல்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!' என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.ழூழூ நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் 'டில்லி சலோ!' என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.
கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.
(ழூ ஏ.என். முகம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.10)
(ழூழூ டீ.டு.புசழஎநசஇ ளு.புசழஎநசஇ யு நேற டுழழம யவ ஆழனநசn ஐனெயைn ர்ளைவழசலஇ P665)
பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட் படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது. ஆதில் கைதான - கொல்லப்பட்ட – தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.
வட இந்தியாவில் அப்புரட்சியின் பலமலக முஸ்லிம்கள் இருந்ததால், முஸ்லிம்களை விடக்கூடாது என்று முடிவு செய்த ஆங்கிலேயர், கலகத்தை ஒடுக்குதல் என்ற போர்வையில் முஸ்லிம்களை சகல நிலைகளிலும் இழப்புக்குரியவர்களாக்கினர். முஸ்லிம்களைப் பொருளாதாரத்தில் வீழ்த்தி விட்டால் அவர்களது ஆங்கில எதிர்ப்பு குறையும் என்ற திட்டத்துடன் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நடவடிக்கையில் பிரிட்டீஷார் இறங்கினர்.
1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டீல்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள்ட வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.- திவான் இந்திய விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம்,57.
இஸ்லாமியர் நடத்திய அரசுகள் - அதன் கஜானாக்கள் அபகரிக்கப்பட்டன. இஸ்லாமிய செல்வந்தார்கள் ஆதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் உடைமைகளை இழந்தனர் இன்று தென்னிந்திய முஸ்லிம்களை விட வட இந்திய முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இரப்பதற்கு இதுதான் காரணமாகும். இதில் தப்பிப் பிழைத்த ஒரு சில செல்வந்தர்கள் இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டனர். அதனால் தான் இன்று சாலை ஓரத் தொழிலாளிகளாக - கூலிகளாக – ரிக்ஷா ஓட்டுபவர்களாக வட இந்திய முஸ்லிம்களை நாம் காண்கின்றோம்
இஸ்லாமியரின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு இந்திய மண்ணில் அவர்களது வாழ்க்கைத் தரத்தையே மாற்றி அமைத்தது. இது பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர வேண்டும். அது காலத்தின் தேவை. ஏனென்றால் இன்றும் இஸ்லாமியரின் வளர்ச்சியை இம்மண்ணில் தடுக்க, அவர்களைப் பொருளாதரத்தில் வீழ்த்துவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் சக்திகள் உள்ளன. அவர்களது நோக்கம் கோவை போன்ற இடங்களில் நிறைவேறி வந்துள்ளதையும் காணலாம்.
இவ்வாறு இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போரான சிப்பாய் கலகம் உருவாக உத்வேகம் அளித்தவர்கள் - அக்கலகத்தை தங்கள் பிரச்சாரங்கள் மூலம் சுதந்திரப் போராட்டமாக மாற்றியவர்கள் - அப்போராட்டத்தில் இழப்புகளுக்கு ஆளானவர்கள் பெரும்பானமை முஸ்லிம்களே என்பது வீரசாவர்க்கர் போன்றோர் தரும் வாக்கு மூல உண்மையாகும்.
ஒரு பிடி மண்
பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காக ராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னளர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். இந்தச் சூழலில் தான் 1837 -இல்-பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.
1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,
நாளை ஈத் பெருநாள்.முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? ஏன்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து – முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்.-என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து – முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்துள்ளான்.
இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, ''ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டும் மாடுகளை வெட்டக்கூடாது'' - என்று பிரகடனப் படுத்துகிறார். நுடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்வி கானல் நீரானது. ஏமபற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், ''என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்'' - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.
பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரிய திட்டம் உருவானது.
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியஜல் அழித்துவிட நம்மால் முடியும்.அவனை முடித்து உய்ரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும்,அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம்.- என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.ழூ
தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள்,சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு – போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மததம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.
... ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.ழூழூ
(ழூ காஸிம் ரிஸ்வி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகதுர்ஷா ஜஃபர் பக்கம், 7.
ழூழூ வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம்,58.)
இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப்,ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா – ராஜஸ்தான் - மகாராஷ்டிரா மன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக – ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.
...ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான் உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 99.
ஆனால் மே 10-ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தன்யாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷபருக்கு எதிரான பேர் நடவடிக்கைகளில் முழுமைiயாக இறங்கினர். துங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.
மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். ஒரு நாள் காலை... காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.
ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பென்யின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான். அங்கே... கபதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளை வெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு... இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து...)
பகதுர்ஷா: தைமூர் வம்வத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்! (கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு ...
ஹட்ஸன்: உமது கண்களில் என்ன... நீர் வற்றி விட்டதா?
பகதுர்ஷா: ஹட்ஸன் ... அரசர்கள் அழுவதில்லை! (என்று பெருமிதத்துடன் கூற... தலை குனிந்த வாறு வெளியேறுகிறான் ஹட்ஸன்)ழூ
அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்... உடம்பிலிருந்து துண்டாய்! பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.
ழூ முயளiஅ சுணைறiஇ வுhந புசநயவ டீயாயனரச ளூய துயககநசஇ P.10.
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது. மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது. ''என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்.'' – என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.- வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம், 296-297.
தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம் செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார். பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து,ழூ அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக, நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்! - என்று சபதமேற்றார். இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே ... ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(ழூ அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)
முதல் மக்கள் இயக்கம்
காந்திஜியின் வருகைக்குப் பின்னர்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக – மக்கள் இயக்கமாக மாறியது. இதற்கு முன்னோடியாக 19-ஆம் நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பெரய்ஸி இயக்கம்(குயசணைளை ஆழஎநஅநவெ) என்ற மக்கள் இயக்கததைக் கட்டியவா கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த ஹாஜி ஷரியத்துல்லா (ர்யதi.ளூயசயைவாரடடயா) ஆவார்.
வங்காளத்தின் வடக்கு மாவட்டங்களில் 1820-களில் கரம்ஷா (முயசயஅ ளூயா) வும் அவர் மகன் திப்பு (வுhipர)வும் நடத்திய ஆன்மிக – அரசியல் இயக்கம்தான் இந்த பெரய்ஸி இயக்கத்துக்கு முன்னோடி. ஜமீன்தார்களின் கொடுமைக்கு ஆளாகும் விவசாயிகளின் குடி உரிமைகளுக்காகப போராடிய திப்பு, 1825 -இல் செராபூர் (ளூநசிரச) பகுதியைக் கைப்பற்றி ஆட்சிஅமைத்தார். ஆங்கில எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி கோரா மலைப் (புயசழ ர்டைடள) பகுதிவரை தன் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தினார். 1830 - களிலும் 1840 - களிலும் இப்பகுதிகள் ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்த - பிரச்சனைக்குரிய பகுதிகளாகத் திகழ்ந்தன.ழூ இவ்வியக்கத்தின் தாக்கம்தான் கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லாவைப் போராடத்தூண்டியது.
பிரிட்டீஷாருக்கு வரிவசூல் செய்து கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜமீன் அமைப்பில் , ஆளுவோரின் பிரதிநிதிகளான ஜமீன்தார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலகட்டம், கிழக்கு வங்காளத்தில் ஜமீன்தார்களின் அடக்குமுறைகளுக்கு ஆளான விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் தங்கள் முதலீடுகளையும் உழைப்பையும் வரி என்ற பெயரில் பறி கொடுத்துக் கொண்டிருந்தனர்.
உரிமை இழந்து வந்த இம்மக்களை ஒன்று திரட்டி, பரிதாபூரை (குயசiனிரச) மையப்படுத்தி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவர் மகன் தித்தோமியானும் (னுயனர ஆயைn) நடத்திய மக்கள் இயக்கம்தான் பெரய்ஸி இயக்கம். இவர்களின் ஜமீன் எதிர்ப்பு நாளடைவில் ஜமீன் எஜமானர்களான பிரிட்டீஷாருக்கு எதிரான கிளர்ச்சியாக வெடித்தது. 1839 முதல் 1857 வரை 18 ஆண்டுகள் இவ்வியக்கம் ஆங்கிலேயருக்குப் பல சிக்கல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது.ழூழூ
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தித்தோமியான், புரட்சியைத் தூண்டியவர் என குற்றம் சுமத்தப்பட்டு 1860 - இல் தூக்கிலிடப்பட்டார்.
சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பிரிட்டீஷாருக்கு எதிராக நடைபெற்ற பெரய்ஸி இயக்கம்தான் இந்தியசுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் மக்கள் இயக்கம் என்பதை புதிய வரலாறு பதிவு செய்யட்டும்.
(ழூ டீ.டு. புசழஎநசஇளு.புசழஎநசஇ யு நேற டுழழம யவ ஆழனநசn ஐனெயைn ர்ளைவழசலஇ P.248. ழூழூடடினை.இP.248)
முதல் சுதந்திரப் பிரகடனம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் 2.7.1943 - இல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (யுணயன ர்iனெ புழஎநசnஅநவெ) – என்ற தற்காலிக சுதந்திர அரசை அறிவித்தார். அவ்வரசுக்கு ஆசாத் ஹிந்த் பவுச் (யுணயன ர்iனெ குயரத) – என்ற இந்திய தேசிய ராணுவத்தையும் தனி ரிசர்வ் பேங்க் ஒன்றையும் ஏற்படுத்தினார்.ழூ அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய சுதந்திரக் கொடியை முதன்முதலாக அந்தமானில் 30.12.1943-இல் ஏற்றி ஆங்கிலேயரை அச்சம் கொள்ள வைத்தார்.
நேதாஜியின் இந்த இமாலய முயற்சிக்கு முன்னோடியாக, இந்திய மண்ணிலேயே ஆங்கிலேயருக்கெதிரான தனி சுதந்திர அரசுகளைப் பிரகடனப் படுத்தியவர்கள் இஸ்லாமியர்களாவர். (ழூ டடினை.இP.665)
இந்திய வஹாபி இயக்கத்தின் தலைவர் சையது அஹமது ராய்பரலி அவர்கள் உத்திரப் பிரதேசத்தில் அச்சாதனையை நிகழ்த்தினார். சுமய – சமுதாய சீர்திருத்த இயக்கமான வஹாபி இயக்கம் பின்னர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட இயக்கமாக மாறியது. ஹாஜ் சரியத்துல்லா, தீத்தோ மியான் ஆகியோரது வீழ்ச்சிக்குப் பின்னர் பெரய்ஸி இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள் இந்த வஹாபி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.ழூ ழூ(டடினை.இP.248..)
பாட்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட செய்யது அஹமது ராய்பரலி, இந்திய தேசத்தைத் தாருல் இஸ்லாம் (னுயசரட ஐளடயஅ) அதாவது 'இஸ்லாமியர்களின் உலகம்' என்ற சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார். இச்சதந்திர அரசுக்கென மேற்குப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் தன் ராணுவத்தளம் அமைக்ப்பட்டது. இச்சுதந்திர அரசின் நோக்கம், 'இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஜிஹாத் (புனிதப்பேர்) புரிவதாகும்'.
செய்யது அஹமது ராய்பரலியின் இச்சுதந்திர அரசம் அதன் முன்னணித் தலைவர்களும் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளால் சந்தித்த கொடுமைகள் ஏராளம். பாட்னாவில் விலாயத் அலி, ஹிமாயத் அலி ஆகியோர் தலைமையில் ஆங்கிலேயருக்கெதிரான புரட்சிகள் தொடர்ந்தன.
கிளர்ச்சியில் ஈடுபட்ட மௌல்வி. முஹம்மது ஜஃபிரை ஆங்கில அரசு கைது செய்து, தேசத்துரோக தண்டனை விதித்து அந்தமானுக்கு நாடு கடத்தியது. அவர் அந்தமானில் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார்.
1870 - இல் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான அமீர்கானும் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரை அந்தமானுக்கு நாடுகடத்தும் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி நார்மனை அப்துல்லா என்ற முஜாஹித் இளைஞன் சுட்டுக்கொன்றான். இதுபோன்ற பல வீரவரலாறுகள் இச்சுதந்திர அரசின் நடவடிக்கையில் உண்டு.
இதுபோன்றே 1921-இல் மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சியின் போது, கேரளாவில் எர்நாடு, வள்ளுவநாடு, பகுதிகளை ஒருங்கிணைத்து கிலாபத் இராஜ்யம் என்ற தனி சுதந்திர அரசை அலி முஸல்லியார் பிரகடனப்படுத்தினார். இவ்வரசக்கென கிலாபத் கொடி, கிலாபத் நாணயம், கிலாபத் ராணுவம் ஏற்படுத்தி தனி முத்திரையுடன் கூடிய சாகச ஆட்சியை, ஆங்கிலேயரை ஆதரித்த சமஸ்தாங்களின் எல்லைகளுக்குள்ளேயே நடத்திக்காட்டினார்.
இவ்வாறு இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் - முதல் போராட்ட உத்வேகம் - முதல் மக்கள் இயக்கம் - முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது.

2. மண்ணிற்காக மார்க்க அறிஞர்கள்
--------------------------------------------------------------------------------
கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்து கொள்ள மாட்டோம்.-மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி.
ஒரு மனிதன் ஒரு பட்டாளம்
மீரட் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்து வந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச்வென்று விடும்படி உத்தரவிட்டது. சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அப்பக்கிரி ஒன்றும் அற்யாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொந்தமாக வசித்துக் கொண்டு, தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார். அவர்தான் அததீவிர தேசபக்தரான மௌல்வி அஹமதுஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. - என்று வீரசாவர்க்கரால் புகழப்பட்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்ட தியாகிதான் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.ழூ
சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பபதந்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர்.லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது'' - உன்றார். ஆங்கில அரசு வதித்திருந்த பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. (ழூ வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65.)
கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1857 - இல்நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சுpறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார். சுதந்திர யுத்தத்திற்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலைகள் லக்னோவிலும் ஆக்ராவிலும் உள்ள மூலை முடக்குகள் எல்லாம் பரவிக்கிடந்தது. தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.
ஆங்கில அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை ரகசியமாக உருவாக்கிய நானா சாஹிப், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், அலி நத்ஹிகான் போன்றத்தலைவர்களின் இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.77.
ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். ஆந்த ஆயுதங்களைக் கைப்பற்று வதற்காக 1858 ஜனவரி 15 - இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌல்வி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ருவரி 15 - இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார். கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌல்வியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.
அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது:
புரட்சிக்காரர்களின்... தலைவரான பைசாபாத் மௌல்வி அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர்.ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும் சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.ழூ (ழூ வீரசாவர்க்கர், எரிமலை., பக்கம்.354.)
அதன்பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை போன்ற கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார். இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.
அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார். ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது. அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத அஹமதுல்லா ஷாஹ். ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி நகருக்குள் நுழைகிறார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோடடைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌல்வி, தப்பிக்க முயற்சிக்கு முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட... தோட்டாக்களை மார்பில் ஏந்தி மண்ணில் சாய்கிறார் அஹமதுல்லா ஷாஹ்.
ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌல்வியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரிடம் ஓடினர். மேளல்வியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்துத் தங்கள் ஆத்திரங்களுக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். அன்னாரது உடலைத துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர். இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்அபருமகனின் உடல்கூட முறைப்படி நல்லடக்கம செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று. அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ;ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒரு கையில் வாளையும் மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி (மௌல்வி அகமதுஷா) புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை ! - வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.354.
ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக ராஜா ஜகன்னாத சிங்கிற்கு ஆங்கில அரசு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துப் பாராட்டியது.
மௌல்வி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி :
இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. ஸர், ஆலன் கேம்பல் என்ற மாபெரும் ஆங்கிள தளபதி, யுத்தக் களத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு இவரே காரணம். தன் தாய்நாடு விடுதலை பெற வேண்டும் என்று போராடியதில் இவர் ஒரு நிகரற்ற தீரர்;. - என்று குறிப்பிட்டுள்ளது உண்மை ... வெறும் புகழ்ச்சி இல்லை !ழூ
(ழூ ஏ.என்.முகம்மது யூசுப், இந்தி விடுதலைப் போராட்ட வீரர்கள், பக்கம்,60-61.)
ஒரு வாள் இருபது தலைகள்
மௌல்வி அஹமதுல்லா ஷாஹ் போன்று ஒரு தனிமனிதராக இருந்தாலும் ஒரு பட்டாளத்திற்குரிய முழு பராக்கிரமத்துடன் திகழ்ந்த மற்றொரு மார்க்க அறிஞர் மௌல்வி மிர்ஜா மஹ்தீ சாலிஹ்
சிறந்த போர்க்கலைப் பயிற்சியாளராகத் திகழ்ந்த மிர்ஜா மஹ்தீ, முஃத்தீகன்ஞ் பகுதியைத் தன் ஆளுகைப் பகுதியாகக் கொண்டவர். இவரது முஃத்தீகன்ஞ் எல்லைக்குள் ஆங்கிலேயர் நுழைந்தால் அவர்களது தலை தப்பாது.
1858 - இல் இவரை வீழ்த்துவதற்காக கௌகாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கிலப் படை மிர்ஜா மஹ்தீயின் எல்லைக்குள் நுழைய முடியாமல் தத்தளித்தது. பல நாள் முற்றுகைத் தொடர்ந்தது. ஒரு நாள் அதிகாலை பஜ்ரு தொழுதுவிட்டு பள்ளிவாயிலை விட்டு மிர்ஜர் மஹ்தீ வெளிவர, ஆங்கிலப் படை அவரைச் சூழ்கிறது.
தன் நபராக நின்று 20 பேரை வெட்டி வீழ்த்தி இறுதியில் எதிராளியின் குண்டுகளை மார்பில் தாங்கி சாய்கிறார். இப்படி இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய உலமாக்கள் பலர் வீர மரணம் அடைந்தபோது, அவர்களது ஜனாஸா (இறந்த உடல்) வைப் பொதிந்த கபன்துணி (சவத்துணி) முழுக்க இரத்தக்கறைப் படிந்திருந்தது உண்மை வரலாறாகும்.
பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
1929 – ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (ஊழஅpடநவந ஐனெநிநனெநnஉந ஐனெயைஇயள வைள பழயட) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.ழூ
ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை – என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். (ழூ டீ.ட புசழஎநசஇளு.பசழஎநசஇயு நேற டுழழம யுவ ஆழனநசn ஐனெயைn ர்ளைவழசலஇ P.426.)
1921 - இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர். இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தினை அதாவது பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். டோமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கருதினர்;.
மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள் ஒரவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.
புரண சுயராஜ்யம் (ஊழஅpடநவந ஐனெநிநனநnஉந யேவழைn) தீர்;மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆற்றிய தீர்;க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப் பங்கேர்ப்பாளர்கள், இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் பூரண சுயராஜ்ய கோசம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.
ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.ழூ
(ழூ லுழரபெ ஐனெயைஇ ஆயல 4 இ 1992; சுநக் ளூயn ஆராயஅஅயனஇ குசநநனழஅ ஆழஎநஅநவெ in ஐனெயை- வுhந சுழடந ழக யுடi டீசழவாநசளஇ PP.159-60இ 164-65.)
ஆனால் 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே பூரண சுயராஜ்யம் கோரிக்கையை காந்திஜியே முன் மொழிந்தது வரலாறு.
ஹஜ்ரத் மொஹானி அவர்கள் 1923 - இல் கிலாபத் கமிட்டித் தலைவராகவும், 1924 - இல் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டுத் தலைவராகவும் இருந்து தேச விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1921 அஹமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில்தான் எழுப்பிய பூரண சுதந்திரம் கோரிக்கையை 1937 -இல் லக்னோவில் நடைபெற்ற முஸ்லிம்; லீக் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்
மிகச் சிறந்த எழுத்தாளராள ஹஜ்ரத் மொஹானி அவர்கள், தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக உருது முஹல்லா என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எத க மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.
ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆக்கவிதையை ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதற்கு ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீஸுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.
ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.
''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?'' - என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்திருக்கிறார்.
ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. அக்குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவன் திருமுகத்தைப் பார்க்கவும் வாரிசைக்காட்டவும் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைகிறார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விடுகிறது. மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்திக்கிறார்.
தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள், சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார். தன் குழந்தைக்கு ஒரு தகப்பன் முத்தமிட்டது குற்றமா? ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது.சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. சுpறைச்சாலையில் ஹஜ்ரத் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது !ழூ
செக்கிழுத்த செம்மல் ஹஜ்ரத் மொஹானி என்று இனியாவது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும்.
(ழூசிராஜுல் மில்லத் அ.க. அப்துஸ் ஸமது, இஸ்லாமிய தமிழர் பேரவை நடத்திய சுதந்திரப் பொன்விழா உரையில், சென்னை. 18.10.1997)

பத்வா
தென்னகத்தில் இயங்கி வந்த அரபிக் கல்லூரிகளும் மதரசாக்களும் அன்று தேச விடுதலைப் போராட்டக் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. இந்நிறுவனங்களில் பணியாற்றிய உலமாக்கள் ஆங்கில மரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 1831 மே 6 - இல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் நூற்றுக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தனர்.
தேச விடுதலைப் போராட்டம் மார்க்க அமல் (வழிபாடு) தொடர்பானது – என்ற தேசாபிமபன முழக்கங்களுடன் ஆங்கிலேயருக்கு எதிராக உழுதியுமு; பேசியும் தங்கள் சுதந்திரப் பங்களிப்பைத் தந்த தேவ்பந்த் உலமாக்களின் பண் மகத்தானது. ஆங்கிலேயர் மீதுள்ள வெறுப்பினை அவர்களது மொழயின் மீதும் காட்டினர். ஆஙிகிலம் படிப்பது ஹராம் - என்று தேவ்பந்த் உலமாக்கள் பத்வா(மார்க்கத்தீர்ப்பு) கொடுத்தனர்.
அந்நியப் பொருட்களைப் பரிஷ்கரிக்க வேண்டும் சுதேசிப் பொருட்களையே வயங்கவேண்டும் என்ற காந்திஜியின் சுதேசி இயக்கம் நாடெங்கும் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கலாச்சார இயக்கமாக உருவாகியது. இதில் இஸ்லாமியர்களழன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம்கள் பிரிட்டீஷாரின் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் (ர்யசயஅ ; ருடெயறகரட).
-1921 ஜுலையில்கராட்சியில் நடைபெற்ற கிலாபத் மாநாட்டின் தலைமை உரையில் மௌலானா முகம்மது அலி.ழூ
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்,ழூழூ கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது – என்ற பகிரங்க அறிவிப்பை விடுத்தார். அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றிய உலமாக்களின் சுதந்திர பங்கேற்பு மகத்தானது.
(ழூ ளூயn ஆராயஅஅயனஇ குசநநனழஅ ஆழஎநஅநவெ in ஐனெயை – வுhந சுழடந ழக யுடi டீசழவாநசளஇ P.153.)
(ழூழூ சிராஜுல் மில்லத் அ.க.அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களது தந்தையார்.) மு.முஹம்மது ஷேக்ஆதம் மழாஹிரி

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி