முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

புதன், 1 ஏப்ரல், 2009

நகர ஜமாஅத்துல் உலமா கோடைகால தீனிய்யாத் வகுப்பு

நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் சார்பாக இன்று மாணவர்கள் கோடைகால தீனிய்யாத் வகுப்புக்கு ஆர்வத்துடன் பங்கும் பெறும் பொருட்டு அவர்களிடத்திலே கலந்துரையாடல் மற்றும் சிறப்பு பயான் நடைபெற்றது முதலில் மௌலானா சித்தீக் அலி ஹஜ்ரத் அவர்கள் கிராத் ஓத நிகழ்ச்சி இனியே துவங்கியது அதன் பிறகு நமது நகர ஜமாஅத்துல் உலமா தலைவர் ஹஜ்ரத் மௌலானா காஜா முஹயத்தீன் ஹஜ்ரத் அவர்கள் மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா பேரவை செயலர் லியாகத் அலி அவர்களும் மாணவர்களுக்கு மக்தப் மதரஸாவின் முக்கியத்துவத்தை பற்றியும் கோடைகால தீனிய்யாத் வகுப்பு நடத்தும் நோக்கத்தைப் பற்றியும் மிக அழகாக மாணவர்களுக்கு எடுத்து கூறினார்கள் அதற்கினங்க மாணவர்களும் மிக ஆர்வமுடன் வரும் கோடைகால வகுப்புகளில் பங்கு பெற்று ஈருலக நன்மை அடைவோம் என்று உறுதி கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உலமாக்கள் அனைவர்களும் திரலாக பங்கு பெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தது மாணவர்களுக்கு மிகுந்த உச்சாகமாக இருந்தது
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி