முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

யார் மீது இறைவனுக்கு அக்கறையில்லை?

உயிரினங்கள் மீது இரக்கம்

ஆரணி கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் பேர‌ர்க‌ள் விபத்தில் வஃபாத்

கடந்த வியாழக்கிழமை (22.10.2009) அன்று குடும்பத்துடன் சகோதரரின் திருமணத்திற்கு சென்று வரும் பொழுது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தமையினால் வேன் கவிழ்ந்து தமிழகத்தின் ஆன்மீகத் தந்தை என்றழைக்கப்பட்ட ஆரணி கமாலுத்தீன் ஹஜ்ரத்தின் பேர‌ர்க‌ளான‌ 1. மௌலானா காரி ஆஷிக் அலி 2. மௌலானா காரி நஸ்ருல்லாஹ் (இருவரும் ச‌ப்அ காரிக‌ள் 7 வ‌கையான‌ கிராஅத்துக‌ளை க‌ற்று, ப‌ல‌ காரிக‌ளை உருவாக்கிய‌வ‌ர்கள் அதில் ந‌ல்ல‌ ஞான‌ம் பெற்ற‌வ‌ர்கள்) உட்பட அன்னார் குடும்பத்தை சார்ந்த 10 நபாகள் மரணம் அடைந்து விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை பிரார்த்தனை செய்கிறது.

அனைவரின் அப்ப‌‍ழுக்க‌ற்ற‌ மார்க்க‌ச்சேவையை அ‍ங்கீக‌ரித்து, குற்றங்களை மன்னித்து, ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைவிப்பானாக‌ ஆமீன்.

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அனைவரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி! வஸ்ஸலாம்!!

ஈரோடு தாவூதியா அரபிக் கல்லூரி பேராசிரியர் காரீ முஹம்மது நஸ்ருல்லாஹ் ஹஜ்ரத் கார் விபத்தில் மரணம்.

ஈரோடு பெரிய அக்ரஹாரம் தாவூதிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியரும் ஆரணி பாவா கமாலுதீன் ஹஜ்ரத் அவர்களின் பேரனுமாகிய காரீ மு.முஹம்மது நஸ்ருல்லாஹ் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் அரவக்குறிச்சி அருகேயுள்ள மணல்மேடு என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் வஃபாத்தானார். அன்னரது ஜனாஸா சேலம் ஜங்ஷன் கபருஸ்தானில் வெள்ளிக் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப் படுகின்றது.

முஹம்மது நஸ்ருல்லஹ் ஹஜ்ரத் அவர்கள் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தனது இரு சகோதரர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நிகழ்ச்சி முடிந்து மாலையில் சேலம் நோக்கி ஆம்னி வேனில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். வேனை அவரது சகோதரர் ஷபியுல்லாஹ் ஓட்டிச் சென்றார்.

அரவக்குறிச்சி அருகேயுள்ள மணல்மேடு என்ற இடத்தில் சென்றபோது, சாலையின் ஓரத்திலிருந்த பள்ளத்தில் வேன் நிலை தடுமாறி திடீரென உருண்டது. இந்த விபத்தில் வேன் உருக்குலைந்தது. தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள், ரோந்து போலீஸார் மற்றும் அரவக்குறிச்சி போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கார் கதவுகளை உடைத்து மய்யித்துகளையும் காயம அடைந்தவர்களையும் வெளியில் எடுத்துனர்.

இந்த விபத்தில் நசுருல்லா ஹஜ்ரத் அவர்களும், அவரது தந்தை கமால்பாட்ஷா, அவரது மச்சான் ஆசிக் அலி ஹஜ்ரத், வாலாஜாவை சேர்ந்தவரும் ஷபியுல்லாஹ்வின் நண்பருமான அப்துல் நசீர், ஷபிர்யுல்லாஹ்வின் குழந்தைகள் இஃபத், ஸர்வத் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த ஓட்டுநர் ஷபியுல்லாஹ், முகமது இக்பால், அப்துல் ஜப்பார் நஸ்ருல்லாஹ்வின் மகன் 4 வயது நுசுக்கி என்கிற இஹ்ஸானுல்லாஹ் ஆகியோர் கரூரிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப் பட்டனர். பிறகு ஷபியுல்லாஹ் இரண்டு காலிலும் அடிபட்டு கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.

நஸ்ருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கு மனைவியும் இனாமுல்லாஹ், இஹ்ஸானுல்லாஹ் மற்றும் அமானுல்லஹ் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். ஹஜ்ரத் அவர்கள் பெரிய அக்ரஹாரம் தாவூதியா அரபிக் கல்லூரியில் பேராசிரியரகவும்பெரிய அக்ரஹாரம் மதரஸா தய்யிபா நிஸ்வான், தாருல் குர்ஆன் மகளிர் மதரஸா ஆகியவற்றிலும் பகுதி நேர தஜ்வீத் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

நஸ்ருல்லாஹ் ஹஜ்ரத்,அவரது தந்தை கமால் பாட்சா,மற்றும் குழந்தைகள் இஃபத், ஸர்வத் ஆகியோர் மய்யித்கள்; சேலம் அம்மா பாளையம் கபருஸ்தானில் வெள்ளிக் கிழமை மாலை அஸர் தொழுகைக்கு நல்லடக்கம் செய்யப் பட்டன. அப்துல் நசீர்; மய்யித் வாலஜாவுக்கும் ஆஷிக் அலி ஹஜ்ரத் அவர்களின் ஜனாஸா ஆரணிக்கும் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப் பட்டன.

பெங்களூரு மௌலானா முப்தி முஹம்மது அஸ்ரப் அலி ஹஜ்ரத் அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார். பள்ளபட்டி, கரூர், ஈரோடு சேலம் ஆகிய ஊர்களை சேர்ந்த உலமாக்களும், ஜமாத்தார்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். மௌலானா எம்.எஸ்.உமர்பாரூக் ஹஜ்ரத் உட்பட தாவூதியா அரபிக் கல்லூரி அனைத்து பேரசிரியர்களும் அனைத்து மாணவர்களும் மற்றும் கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மௌத்தாக்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யும் படி குடும்பத்தார்கள் சார்பாகவும் தாவூதிய்யா மதரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி