முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 28 மே, 2009

தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள்! இருக்க கூடாத பண்புகள்!!

தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள்! இருக்க கூடாத பண்புகள்!!

-------------------------------------------------------------------------------- தலைமைத்துவத்தை பற்றி கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் அவர்கள் 'வலுக்கட்டாயமற்ற வழிவகைகளை கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவை தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் இட்டு செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம்' என்று விவரிக்கிறார். மேலும் இஸ்லாமும் தலைமைத்துவத்திற்கும், கூட்டமைப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
'முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.' (புகாரி, முஸ்லிம்)
'மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்' (புகாரி, முஸ்லிம்)
மேலும் இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளமே அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பட்டுள்ளது என்பதைத்தான் உமர் (ரலி) இப்படி இயம்பினாhர்;கள் 'நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை.' (ஸுனன் அத்தாரமி)
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸல்) வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.
அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)
தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்
1. தக்வா - தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. 'மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்' (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் குர்ஆனின் (26:109,127,145,164,180) வசனங்கள் குறிப்பிடுவது போன்று இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.
2. அறிவு - வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம். மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து ஜாஹிலிய்யாவை அறியா ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
3. உறுதி கொண்ட நெஞ்சம் - 'அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே' (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
4. நிலைமையை கணிக்கும் திறன் - தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும். ஹீதைபியா உடன்படிக்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த உதாரணம்.
5. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். 'மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.' (5:8)
6. திடவுறுதி, பொறுமை, வீரம் - இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கல்;களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.
7. இஸ்திகாமத் - சத்தியப் பாதையில் இருந்து தன்னை திருப்பி விட எவ்வளவோ உபாயங்களை மேற்கொண்ட போதும் இன்னல்களை கொடுத்த போதும் நிலைகுலையாமல் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மனிதர்கள் சூரியனை எனது ஒரு கையிலும் சந்திரனை மறுகையிலும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் இதனை கை விடமாட்டேன், அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தருவான் அல்லது நான் இதன் வழியில் செத்து மடிவேண்' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் சூளுரைத்தது போன்ற தன்மை உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.
8. பொது அறிவு திறன் - இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்;டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு 'சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்' எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.
'முஹம்மத் (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான வார்த்தைகளாகவே காணப்பட்டது. அதனை கேட்ட அனைவரும் எளிதில் விளங்கிக் கொண்டனர்' (அபூதாவூத்)
'நான் சுருக்கமாக, ஆனால் அதிக விளக்கமுள்ள வார்த்தைகளை பேசச்கூடியவனாக அனுப்பப்பட்டுள்ளேன்.' (புகாரி)
9. சேவை மனப்பான்மை - 'சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்' (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
10. ஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். 'இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்' (ஷீரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)

தலைமையிடம் இருக்க கூடாத பண்புகள்
1. பதவிக்கு ஆசைப்படல் - 'பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.' (புகாரி) என்ற நபி மொழிப்படி பதவிக்கு ஆசைப்படுபவரை தலைவராக்க மாட்டோம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவிக்கு அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.
2. குடும்ப சொத்தாக கருதுதல் - ரசூல் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவியை ஒரு அமானிதமாக கருதி பொறுப்புடன் தன் கீழுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே தவிர குடும்ப சொத்தாக பொறுப்பை கருதக் கூடாது. 'முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான்' (புகாரி)
3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை - புகழ் பெறவேண்டும் என்பதற்காக செருக்குடன் பிறரை புறக்கனித்து தன்னை முன்னிலைப்படுத்துபவராக தலைமை இருக்கக் கூடாது 'அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்'. (முஸ்லிம்)
4. பலவீனமானவர் - அபூதர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பொறுப்புகளை கேட்ட போது முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அபூதர்ரே நிச்சயமாக நீர் பலவீனமானவர் அப்பொறுப்போ மிகப் பளுவான அமானிதமாகும். அதனை உரிய முறையில் நிறைவேற்றாதவருக்கு மறுமையில் அதுவே சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்' (முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப அப்பொறுப்புக்கேற்ற உடல் உள தகுதியுள்ளவர்களே அப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
5. சொல் வேறு, செயல் வேறு 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை ஏன் ஏவுகின்றீர்கள்' (அஸ்ஸப் 2) எனும் இறைவாக்கிற்கேற்ப தலைவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. தங்களால் சாத்தியமானதை மட்டும் சொல்ல வேண்டும்.
6. ஆடம்பர வாழ்க்கை - தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தம் உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கக் கூடாது. சாம்ராஜ்யங்களிலிருந்து சிறு அமைப்புகள் வரையிலான வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். 'அன்றி அவர்கள் செலவு செய்தால் அளவை கடந்து விட மாட்டார்கள் உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள் இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள்' (புர்கான் 67)
7. கோழைத்தனம் - பிரச்சினைகள் ஏற்படும் போதும் தம் கீழுள்ளவர்களை தவிக்க விட்டுவிட்டு ஒளிந்து கொள்ளக் கூடியவராக தலைவர் இருக்கக் கூடாது மேலும் (8:60) ல் அல்லாஹ் சொல்கிறபடி தானும் எத்தியாகத்திற்கும் தயாராவதோடு தன் சமூகத்;தையும் தயார்படுத்த கூடியவராய் இருத்தல் வேண்டும்.
8. பொறாமை - பொறாமை தலைவரிடத்தில் இருக்க கூடாத பண்பாகும். ஏனென்றால்; அது தான் பிற தீய குணங்களான கோள் சொல்லுதல், குற்றங்களை துருவி ஆராய்தல், புறம் அனைத்திற்கும் முக்கிய காரணமாய் உள்ளது. அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் 'உங்களை நீங்கள் பொறாமையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில் நெருப்பு விறகை தின்பது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகிறது' (அபூதாவூத்) என பகர்ந்தார்கள்.
மேற்கூறப்பட்டவை அடிப்படையில் ஒரு தலைமை அமையும் போது நிச்சயம் அது இஸ்லாத்தை மலரச் செய்யும் ஓர் உன்னத தலைமையாய் மிளிரும். எனவே எத்தலைமையும் அடிப்படையாக
1. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல், முழுவதும் அவனை சார்ந்திருத்தல்.
2. பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற தேவையான உள, உடல், அறிவு, ஆற்றல்கள், வலிமை.
3. கலந்தாலோசனை மூலம் முடிவெடுத்து செயல்படுதல்.
போன்ற தன்மைகளை அவசியம் பெற்றிருக்க வேண்டும். அத்தலைமை மஹல்லா போன்ற சிறிய பொறுப்பாயிருந்தாலும் ஆட்சி தலைமை போன்ற பெரும் பொறுப்பாயிருந்தாலும் சரியே.

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு...
குழந்தைகளின் தகுதியும் திறமையும்.
ஓய்வின்றி ஓட்டம் ஆட்டமும் தொலைந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் காலம் வந்துவிட்டது.
புடி!படி! என எல்லோரும் ஒரு பரபரப்பை உருவாக்கிட போகின்றனர்! பிஞ்சு நெஞ்சங்கள் பதை பதைக்கப் போகின்றன. பள்ளிக்குச் செல்ல மனமின்றி ஏங்கும் குழந்தைகள் இன்னும் சில நாள் ஓய்வு நீடிக்காதா? ஏன கற்ப்பனை செய்து பார்ப்பார்கள்!
பேற்றோர்களோ கற்ப்பனை தேரினில் பறந்து கொண்டிருப்பார்கள்.தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி! டாக்டர், இஞ்சினியர்,என கற்பனைகள்.
நும் குழந்தை அப்படிப் படிக்க வேண்டும் இப்படிப் படிக்க வேண்டும் என பல்வேரு படிப்புக்ள. மதிப்பெண்களே லட்சியம்.
பெற்றோர்களின் கற்பனை குழந்தைகளின் திறமை இந்த இரண்டிற்கு மிடையே இடைவெளி வீழ்ந்து விடுவதுண்டு.
பெற்றோர்களின் கற்பனை குதிரைகளின் வேகத்திற்கினையாக குழந்தைகளின் படிப்பு வேகமடையவில்லையென்றால் மனத்தாங்கல்கள். ஆதங்கம் இவை வளர்கின்றன.
குடும்பத்தின் சுமூகமான சூழல் பாதிக்கப்படுகின்றது. பெற்றோர்களின் எதிர்பார்பிலிருந்து மதிப்பெண்கள் குறைய குறைய குழந்தையைக் குற்றம் பிடிப்பது அதிகமாகின்றது.
ஏரிந்து விழுகின்றார்கள். ஏளனம் பேசுகின்றார்கள்.
ஏதேனும் காரணத்திற்காக மதிப்பெண்கள் ஒரேடியாகக் குறைந்து போனால், குழந்தைகள் மீது பாயும் வெறுப்பு மொழிகள் அனல் பறக்கும்.
இதனால் குழந்தைகள் மனம் கூனி குறுகிப் போகின்றார்கள். பல நேரங்களில் குழந்தைகள் விரக்தி வயப்படுகிறார்கள். நம்மால் எதுவும் முடியாதுஎன்ற மந்த நிலைக்கு வந்து விடுவார்கள். சில நேரங்களில் அவர்கள் தற்கொலையே செய்து கொள்கிறார்கள்.
இப்படி விரக்தியை நோக்கி அவர்களை ஓட்டுவது எந்த வகையிலும் நியாயமல்ல.
குழந்தைகளின் தகுதிக்குமெல் சுமைகளை சுமத்துவது தவரு. இதில் நாம் குழந்தையையே இழந்துவிடவேண்டியது வரலாம்.
நம் குழந்தை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அதன் தகுதியும் திறமையும் முடிவு செய்யட்டும என்கின்றார் ஆராய்ச்சியாளர் ரங்கீன் சிங்.
றுந:ஆயசஉh(ள)2003
பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்ததுக்கொள்ளவும் அந்தத்திறமைகளைப் பயன்படுத்தவும் தேவையான வழிவகைகளை ஏற்படுத்தித் தருவதுதான்;.
அத்தோடு திறமையான குழந்தைகள்கூட நட்பால் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் பெற்றோர்களின் கடமையாகும்.
அதேபோல பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தங்களால் என்ன வெல்லாம் இயலுமோ அவற்றையெல்லாம் முயற்ச்சி செய்து பார்க்கட்டும். அதனால் என்ன முடியுமோ அதைத் தேர்வு செய்யட்டும் அந்தத் தேர்வில் அது தன்னால் இயன்றதை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள் உதவலாம்.
அதுவல்லாமல் குழந்தைக்கு பிடிக்காத முடியாத எதையும் அதன் மீது திணிக்க வேண்டாம்
அவர்கள பள்ளிக்குச் செல்லட்டும் படிக்கட்டும் திறமைக்கேற்றதொரு பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும் அதற்க்கு நம்மால் இயன்றதையெல்லாம் செய்வோம்.
அன்பான அறிவுரைகள் குழந்தைகளைத் திருத்தவும் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தவும் போதும்.
எது எப்படியானாலும் குழந்தைகளை அடுத்தவர்கள் முன்னால் வைத்து அவமானப்படுத்திவிடாதீர்கள்.
அவர்களுக்கென ஓர் சுய கவுரவம் இருக்கின்றது. அதனை நீங்கள் தொட்டு புண்படுத்திவிடாதீர்கள்.
இதைநீங்கள் செய்தால் விபரீதமான செயல்களை உங்கள் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்கலாம்.
''சகிப்புத்தன்மையுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குற்றமனப்பான்மையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் காப்பாற்றி விடுகிறார்கள். தவறுகள் குழந்தைகள் வளரும் பருவத்தின் ஒரு பகுதி என்பதை உணர்ந்தால் நன்மைகள் பல நடக்கும்.
நல்ல மன வளத்தை உங்கள் குழந்தைகளுக்குத் தந்துவிட்டால், அதுவே அவர்கள் தங்கள் திறமைகளை வளர்க்கவும், அவற்றைபயன் படுத்தவும் போதுமானதாக இருக்கும்'' .இப்படி பரிந்துரைக்கின்றார் 'ருக்கின் சிங்' என்ற ஆராய்ச்சியாளர்.
ஆக குழந்தைகளை உற்சாகப்படுத்தி வளர்ப்போம் அவர்களை அன்பால் அரவனைத்து வாழ்க்கையில் வீரர்களாய் ஆக்கிடுவோம். அவர்களின திறமையை விஞ்சும்; சுமைகளை அவர்கள் மீது சுமத்த வேண்டாம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
''...எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல்(எதுவும் செய்ய) நிற்பந்திக்கப்படமாட்டாது... அல்குர்ஆன் 2:233
''அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அதுதாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை.'' அல்குர்ஆன் 3:286

சனி, 23 மே, 2009

மனிதனைப் படைத்ததன் நோக்கம் என்ன?

இந்த உலகிலுள்ள கோடானு கோடி மக்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1. நிராகரிப்பாளர்கள் (குஃபார்)
2. விலகிச் செல்லும் முஸ்லிம்கள்
3. மேலோட்டமான முஸ்லிம்கள்
4. இறைவிசுவாசிகள் (முஃமினூன்)
இறைநிராகரிப்பாளன் (காஃபிர்) என் பவன் சத்தியத்தை நிராகரிப்பவன் அல்லது சத்தியத்தை மறைப்பவன் ஆவான். அவனது மனோ இச்சைகளுக்கே அவன் தீனி போடுவான். அவனால் இறைவன் படைத்துள்ள பிரமாண்டங்களை கண்டுணர இயலாது. அதேபோல் உண்மை இறைவனையும் உணர இயலாது. தெய்வீகத் தகுதிகளிலிருந்து அவன் தன்னையே நிராகரித்து வாழ்வான். அவன் உண்ணுவதையும் உறங்குவதையும், குடிப்பதையும், கும்மாளமடிப்பதையும் தவிர வேறு எதனையும் சிந்திக்க மாட்டான். இவனைப்பற்றித்தான் இறைமறை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
''ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீணி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கின்றார்கள்(நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.'' (முஹம்மத் 47:12)
இரண்டாவது வகையினரான விலகிச் செல்லும் முஸ்லிம்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
'' அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்துவிடுமாறு செய்துவிட்டான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்.அறிந்து கொள்க, ஷைத்தானின் கூட்டத்தினர்தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!'' (அல் முஜாதலா 58:19)
இந்த வகையைச் சேர்ந்த முஸ்லிம், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததனால் அவன் முஸ்லிம் பெயரை வைத்துள்ளான். அந்தப் பெயர் ஒன்று தான் அவனை இஸ்லாத்தில் இனைக்கின்றது. அவன் அனைத்து எல்லைகளையும் தாண்டுகிறான், தனது மனோ இச்சைக்கு இரையாகின்றான்.
மூன்றாவது வகையைச் சேர்ந்த மேலோட்டமான முஸ்லிம், அல்லாஹ்வை தொழுவான். திருக்குர்ஆனை
சப்தமாக ஓதுவான், இஸ்லாத்தை வெறித்தனமாக நேசிப்பான்.ஆனால் அவனது ஈமானில் ஆழம் இருக்காது.அவன் சத்தியத்தின் அருகில் இருக்கின்றான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவன் முழமையாக சத்தியத்தினுல் நுழையவில்லை.
அவன்தான் மார்க்க் கடமைகளை இயந்திரம் போல் செய்கின்றான். ஆனால், அவனது உள்ளம் அதில் ஈடுபடவில்லை திருக்குர்ஆன் இந்த வகை முஸ்லிம்களை இவ்வாறு எச்சரிக்கின்றது:
''ஈமான் கொண்டோர்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறக்கியுள்ள உண்மை யான வேதத்தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்(ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட 'காலம்' சென்றபின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகிவிட்டன. அன்றியும் அவர்களில் பெரும்பாலோர் (ஃபாஸிக்குகளாக) பாவிகளாக ஆகிவிட்டனர்.'' (அல் ஹதித் 57:16)
மேற்சொன்ன அந்த 3 வகையினருக்கும் நேரெதிரான வகையினர்தான் நான்காவது வகையினரான ''முஃமின்'' இஸ்லாத்தின் உண்மையான இறைவிசுவாசி. பூமியில் மகிழ்ச்சிகரமான மனிதன் அவன்!
ஆவன் யாருக்கும் அடிமைஏவல் புரிய மறுக்கிறான். அப்படி அடிமை வேலை வாங்குபவர்களை எதிர்க்கிறான். அவனது உள்ளம் இஸ்லாத்தின் இறைக் கொள்கை யால் நிரம்பி வழியும். அவன் உளப்பூர்வமாக இறைவனிடம் தன்னை ஒப்படைக்கிறான்.
அவனுக்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
''எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கின்றானோ, அவன் நிச்சயமாக உருதியான கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ் விடமே உள்ளது.'' (லுக்மான் 31:22)
நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு நொடியில் தெரிந்துவிடும் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பது. ஆனால் அல்லாஹ் நம்மைவிட மிகத் தெளிவாக இதனை அறிவான்.
அல்லாஹ் அருள்மறையில் கூருகின்றான்:
''ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர். நற்செயல்களின்பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கின்றான். (அல் பகரா2:148)
மேற்கண்ட வசனத்தின் படி நமக்கென்று ஒரு திசையை, இலக்கை நாம் கொண்டிருக்க வேண்டும். அதுமிக முக்கியம். சுரியும் தப்பும், சரிசமமாக இருக்க முடியாது. அதேபோல் சத்தியத்தின் பக்கம் இருப்பவர்களும், அசத்தியத்தின் பக்கம் இருப்பவர்களும் சமமாக முடியாது.
அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
''எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாகமாட்டார்கள்.'' (அஸ்ஸஜ்தா 32:18)
''எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தம் மனோ இச்சைகளை பின்பற்றுகிறார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?'' (முஹம்மத் 47:14)
நல்ல பாதை, கெட்ட பாதை இதில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறான் மனிதன். தேர்ந்தெடுக்க வேண்டிய அவசரத்தை அல்லாஹ் கீழ்கண்ட வசனத்தில் தெளிவகக் குறிப்பிடுகின்றான்:
''நாம் உங்களை படைத்ததெல்லாம் வீனுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (என்றும் இறைவன் கேட்பான்) ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ் மிக உயர்ந்தவன், அவனைத் தவிர நாயன் இல்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!'' (முஃமினூன் 23:115,116)
ஆதலால் நம்மை இந்த உலகில் படைத்ததன் நோக்கத்தை நாம் அறிந்து, அந்த நோக்கத்தின் படி வாழ்வதற்க்குன்டான தகுதிகளை நம்முள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் மேற்கண்ட வசனத்தின் ''வீனுக்காக அல்ல'' 'கணக்கு' 'உண்மையான அரசன்' ஆகிய வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே தெரியும் இது அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று.
மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்? இதை இறைவனே கூறுவதைப் பார்ப்போம்.
''(பின்னர் ஆண்,பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காக. ஆவனைக் கேட்பவனதகவும் பார்ப்பனவாகவும் ஆக்கினோம்.'' (அத்தஹ்ர் 76:2)
வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் வீழும் மனிதன் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை மறக்கலாம்.
மனிதனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கியது அவனது அருளே இதை மறந்துவிடலாகாது. அந்த எச்சரிக்கை இதோ:
''எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞான மில்லையோ அதைச்(ச் செய்யத்) தொடர வேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்னுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (பனீ இஸ்ராயில் 17:36)
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கத்தை மிகத் தெளிவாக மேற்கண்ட வசனத்தின் வாயிலாக கூறுகின்றான்.
ஆதம்(அலை) அவர்கள் தொட்டு அனைத்து இறைச் செய்திகளும் இதனையே கூறுகின்றன.
ஸூரா அத்தாரியாத்தின் கீழ் கண்ட வசனங்கள் அல்லாஹ் நம்மை படைத்ததன் நோக்கத்தை அழகுறச் சொல்கின்றான்.
''இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்தப் பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன். பலம் மிக்கவன், உறுதியானவன்.'' (அத்தாரியாத் 52:56-58)

நகர ஜமாஅத்துல் உலமாவின் 5ம் ஆண்டு நிறைவிழா மற்றும் பரிசளிப்பு விழா நமது ஊர் தலைவர் யூனுஸ் நானா அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. கிராஅத் ஹாபிஸ் காரி சித்திக் அலி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓத நிகழ்ச்சியை ஹாபிஸ் மு முஹம்மத் ஷேக்ஆதம் ஹஜ்ரத் மழாஹிரி அழகிய முறையில் அவர்கள் தொகுத்து கொடுத்தார்கள். வரவேற்புரை ஹாபிஸ் அப்பாஸ் ஹிஜ்ரத் அவர்கள் கூற லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை கூற கூட்டம் இனிதே துவங்கியது தலைவர் அவர்களின் தலைமையுரைக்குப் பின் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது இறதியில் சித்திக் அலி ஹஜ்ரத் அவர்கள் மற்றும் ஜகரிய்ய நானா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.
போட்டியை காண வந்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி




மழலை மாறா சிறு குழந்தை கலிமாவை முழங்கும் காட்சி
வெற்றியாளர்களுக்கு ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்கள் பரிசு வழங்குகிறார்கள்


கிராத்தில் வெற்றி பெற்றவருக்கு சித்தீக் அலி ஹஜ்ரத் அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்கள்
இரண்டாம் பரிசை வென்ற மாணவிக்கு ஜகரிய்யா நானா பரிசு வழங்குகிறார்கள்

காஜி சாஹிப் அவர்கள் பரிசு வழங்குகிறார்கள்

சிறப்பு பேச்சாளர்


சிறப்பு பேச்சாளர் வர இயலாவிட்டாலும் சிறப்பு பேச்சாளரின் இடத்தை நிவர்த்தி செய்த ஜகரிய்யா நானா

ஞாயிறு, 17 மே, 2009


போட்டிக்காக தயாராக இருக்கும் மாணவர்களும் நடுவர்களும்

போட்டிகளுக்கும் காத்திருக்கும் மாணவ பட்டாளத்தின் ஒரு பகுதி

குழிமியிருக்கும் மாணவப் பட்டாளங்களை கண்டு ரசிக்க வந்த பார்வையாளர்களில் சில பகுதி! ஏன் நாயகம் (ஸல்) அவர்களும் சிறார்களின் திறமையை கண்டு ரசித்து ஊக்கமளிப்பவர்களாகத்தானே இருந்தார்கள்

பத்திரிக்கை நிருபர்களும் இறைவழி அறிய மழலை மாறா குழுமியிருக்கும் பிஞ்சுகளும்.

கோடை கால தீனிய்யாத் போட்டி






கோடை கால தீனிய்யாத் போட்டி



அல்ஹம்துலில்லாஹ் எங்கே செல்கிறது அலை கடல் என திரண்டு இந்த மழலை மாறா பட்டாளம்? இவர்களின் நோக்கம் என்ன? இவர்களின் லட்சியங்கள் தான் என்ன? சீரென வார்ததைகளும் மொழியத் தெரியா அந்த பிஞ்சு நெஞ்சங்களின் நாவிலிருந்து பீரிட்டு ஒளித்த லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் எனற அந்த கலிமா ஏனோ இறுகிய நெஞ்சையும் நெகிழத்தான் செய்தது அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு அழகிய முறையில் குர்ஆனை ஓதி கான்பித்தலும் துஆ கலிமா ஹதீஸ், பாங்கு,பயான்,கட்டுரை என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அன்று நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்த ஹதீஸுக்கு ஒப்ப அதாவது கியாமத் நாள் வரை ஓர் கூட்டம் நேரிய வழியில் நிலைத்திருக்கும்''' ஆம் அந்த கூட்டத்தில் உருவெடுக்கவும், உருவாக்கவும் நாங்கள் என்றுமே சளித்தவர்கள் அல்ல என்று மழலை படை மொழிந்ததை போன்று நிகழ்ச்சி அமைந்தது. இன்ஷா அல்லாஹ் இவர்களின் பரிசளிப்பு விழா மற்றும் உலமாக்களின் பயான் நாளை நடைபெறும்.

சனி, 16 மே, 2009

நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் கோடை கால தீனிய்யாத் போட்டி

இன்ஷா அல்லாஹ் நமது நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் கோடை கால தீனிய்யாத் போட்டி நானை காலை 10. அளவில் இனிதே துவங்கவுள்ளது போட்டி இன்ஷா அல்லாஹ் இளம் காரி ஹாபிஸ் தன்வீருல் ஹக் அவர்கள் கிராஅத் ஓத மௌலானா நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்த இன்ஷா அல்லாஹ் மழலையர்கள் போட்டி முதலில் துவங்கும் பிறகு வகுப்பு வாரியாக போட்டிகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

திங்கள், 11 மே, 2009

இஸ்லாமும் அரசியலும்

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன். (முஅத்தா)
இறைவன் தனது இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான்.
ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிhயாய் ஆக்கித் தந்தான் இறைவன்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே உங்களுக்கு இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி) அல்லாஹ்வை அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 33:21)
ஓர் இறைநம்பிக்கையாளன் இறையாட்சியை இவ்வுலகத்தில் நிலைநிறுத்த பாடுபட வேண்டும். அது அவன் மீதுள்ள கடமை. அதற்காக அவன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவன் சிறந்த ஒழுக்கமுள்ளவனாகத் திகழ வேண்டும். ஒழுக்கமில்லாதவன் சமுதாயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஒழுக்கமுள்ளவனைத் தான் மக்கள் நம்புவார்கள். அவன் சொல்வதைத்தான் காது கொடுத்துக் கேட்பார்கள்.
மனிதனுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள அனைத்து வணக்கங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன.
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் 9:119)
என்று அல்லாஹ் கூறுவதன் மூலம் ஒழுக்கம் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் உணரலாம்.
ஆக, நல்ல ஒழுக்கத்தையும், இறைவணக்கத்தையும், இறைநம்பிக்கையையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், எந்த முஸ்லிமின் நம்பிக்கை முழுமையானது? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யாரிடம் சிறந்த ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றனவோ அவரே, என்று பதில் பகர்ந்தார்கள். (தப்ரானி)
இன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நியாயத் தீர்ப்பு நாளில் ஒரு முஃமினின் தராசில் சிறந்த ஒழுக்கத்தை விட கனமானது எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லாஹ் ஆபாசமாகவும், கடினமாகவும் பேசுகின்றவனை வெறுக்கின்றான். நல்ல ஒழுக்கத்தை உடைய ஒருவர், தொழுகை, நோன்பு ஆகியவற்றை உடையவரது நிலைக்கு வந்து விடுகின்றார். (இப்ன அஹ்மத்)
இதன் அடிப்படையிலேயே அண்ணலாரின் பண்புகளும் அமைந்திருந்தன.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பிணிவிடை செய்யும் தோழர்களிடமும் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை. நபிகளாரைக் கண்ட எவரும் அவர்களிடம் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபிகளார் தங்களை கைகளை விலக்கிக் கொண்டதில்லை.
மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வரை நபிகளார் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை. சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை. நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் ஒரு போதும் சும்மா விட்டதில்லை.
எப்பொழுதும் இரக்கத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள்.
கஞ்சத்தனம் கிஞ்சிற்றும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். நேர்மையானவர்கள். தைரியமானவர்கள்.
மதினாவில் அனைவரும் ஆழ் துயிலில் இருந்த இரவு நேரம்.. . எங்கம் அமைதி. திடீரென்று பேரிடி போல் ஒரு சப்தம். என்ன, ஏதென்று புரியாமல் அலறிப் புடைத்துக் கொண்டு மதீனத்து வாசிகள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளி வந்தார்கள். ஆனால் சப்தம் வந்த திசையிலிருந்து நபிகளார் குதிரையில் வந்து கொண்டிருந்தார்கள். மக்களே.. கவலைப்பட வேண்டாம். ஒன்றும் இல்லை என அனைவரையும் தங்கள் இல்லம் திரும்பிடச் செய்தார்கள்.
இப்படி அனைவருக்கும் முன்பாக செல்வதில் அசாத்திய தைரியம். போர்க்களத்தில் எதிரிகளோடு நெருக்கமாக நிற்பது நபிகளார் தான்.
கேட்டது எதையும் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள்.இல்லையெனில் மனநிறைவோடு கேட்டவர் திரும்பிடுமாறு செய்வார்கள்.
எப்பொழுதும் கண்ணியம் காத்தார்கள். அடக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள். குறுகிய மனப்பான்மையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, பரந்த மனப்பான்மையோடு அனைவரிடமும் பழகினார்கள்.
தர்க்கம் செய்வது அவர்களது சுபாவத்தில் இல்லை. அருவருப்பான வார்த்தைகளை அவர்கள் உபயோகித்ததில்லை.
அவர்கள் அளவுக்கு மீறி ஒருவரைக் கண்டித்ததும் கிடையாது. அளவுக்கு அதிகமாக ஒருவரைப் புகழ்ந்ததும் கிடையாது. எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம் பெருமானார் சிரிப்பார்கள்.
குழந்தைகளோடு மிருதுவாகப் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். நோயுற்றவர்கள், ஊனமுற்றவர்களை மதீனாவின் தொலை தூரங்கள் வரை சென்று பார்த்து வருவார்கள்.
காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால் அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள். யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத் தான் இருக்கும்.
அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள். தோழர்களைக் கண்ணிப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைத்தார்கள்.
யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள். அண்ணலார் அவர்கள் வரும் போது தோழர்கள் எழுந்து நிற்பதைத் தடுத்தார்கள். யாரிடமும் அவசியமின்றி பேச மாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு.
நடக்கும் போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமோ இருக்காது.
பேச்சுக்கள் நிதானமாக இருக்கும். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பெருமானார் (ஸல்) அவர்களின் பேச்சுக்கள் எவ்வளவு நிதானமாக இருந்தன என்றால் ஒருவர் அவர்கள் பயன்படுத்து; வார்த்தைகளை எண்ணிட விரும்பினால் தாராளமாக எண்ணி விடலாம்.
நறுமணத்தை விரும்பினார்கள். அதிக நேரங்களில் நறுமணத்தோடு இருந்தார்கள். ஆடம்பரத்தை வெறுத்தார்கள். எளிய வாழ்க்கையை விரும்பினார்கள்.
அண்டை வீட்டாருடன் நல்லவிதமாக நடந்து கொண்டார்கள். கோழைத்தனமில்லாமல் வாழ்ந்துகாட்டினார்கள். கோழைத்தனத்தை விட்டும் பாதுகாத்தருளும்படி பிரார்த்திக்க நமக்கும் கற்றுத் தந்தார்கள்.
இவ்வளவு நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததனால் தான் அவர்கள் இவ்வுலகில் வெற்றி வாகை சூடினார்கள். பூமி முழுவதும் அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கச் செய்தார்கள். அண்ணலாரது நபித்தோழர்கள் புடம் போட்ட தங்கங்களாக மின்னினார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை அகிலமெங்கும் நிலை நாட்டினார்கள்.
இந்தப் பண்புகளைக் கொண்ட கொள்கைக் கோமேதங்களாக நாம் திகழ்வோம். அல்லாஹ்வின் நாமம் இப்புவியெங்கும் ஒலித்திட ஓடாய் ஓயாமல் உழைத்திடுவோம். அண்ணலார் அழகுற அமைத்துக் காட்டிய அல்லாஹ்வின் ஆட்சியை அவனியில் அமைத்திட அனுதினமும் பாடுபடுவோம்.

திங்கள், 4 மே, 2009












கல்வி,,குடும்பவியல்,அரசியல்,பொருளாதாரம் என அனைத்து துரையிலும் மிக்க சிரமத்தை கண்டு வந்த பரங்கி மாநகர மக்களுக்கு ஓர் மைல் கல்லாக இந்த பாலம் அமைந்து இருக்கின்றது என்பதை மறுக்கமுடியாத ஒன்றாகும். நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் மைல் ஊர்ரை சுற்றி வரவேண்டிய கட்டாயம் என இருந்தமைக்கு இது ஓர் மைல் கல்லாக தான் இருக்கிறது என்பதற்கு மறுப்பதற்கு இல்லை.... வெளிநாடுகளுக்கு சென்றால் தான் தமது இல்லத்தில் அடுப்பு எறியும் என்ற நிலை இன்ஷா அல்லாஹ் இந்த பாலத்தின் பரிபூரணம் சிதம்பரம் நகரத்தை சமீபமாக்கியதால் வெளிநாடுகளுக்கு தங்களது பிள்ளைகளும்,கணவன்மார்களும், சென்றால் தான் உணவு என்ற நிலை மாறி நாமும் நமது குடும்பத்தாருடன் இனைந்து உள்ளுரிலேயே தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை பரங்கி மாநகர மக்களுக்கு ஏற்பட தான் செய்துள்ளது. அல்லாஹ் விரைவில் நிரைவுபெறச்செய்து அனைவர்களின் நோக்கங்களையும் நிறைவேற்ற செய்வானாக. ஆமீன்



பரங்கி மாநகர மைல்கல் ஓர் கண்கொல்லா காட்சி

பரங்கி மாநகர மைல்கல்

தமிழக உலமாக்கள் நகர்

தமிழக உலமாக்கள் நகர்

ஞாயிறு, 3 மே, 2009

பெண்ணியம் சில புரிதல்கள்

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.
ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது. இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்திய கோட்பாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன. அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்கு முறை இடம் பிடிக்கின்றது. இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.
வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது. பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம். ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள். எல்லை கடந்து போய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு! அத்தகைய ஒரு சமயப்பற்றினால், நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை. மனிதகுலத்திற்கான விடுதலையே இஸ்லாமின் மூலமாதத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம். வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம். மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்!
சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது. கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் (குநஅinளைஅந) என்ற சொல்லை 1837 இல் கையாண்டார். அதன் பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.
ஓரிடத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன என்றால் அவற்றைப் பெறவும் மீட்டெடுக்கவும் அங்கே பாதிப்படைந்தவர்களால் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்து மோதல்கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன! எந்தெந்தக் காரணங்களால் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவற்றைக் குறி வைத்தே இவ்வெதிர்வினைச் செயற்பாடுகள் அமைகின்றன. இக்கண்ணோட்டத்தில் பெண்ணியம் பேசும் உலகளாவிய குழுக்களை கீழ்க்காணும் ஏழெட்டுப் பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அப்பிரிவுகளின் தலைப்புகளே பின்னணிக் காரணங்களை விளக்கி விடும் என்பதால் வகைப்படுத்துவதோடு நாம் நின்று கொள்கிறோம்.
சமஉரிமை, சமத்துவம் கோரும் குழுக்கள் ((நுபயடவையசயைn குழசஅள)
தாயார் சமூக அமைப்புக் குழுக்கள் (புலழெஉநவெசiஉ குழசஅள)
ஆணாதிக்க எதிர்ப்புக் குழுக்கள் (டீநடநைக ஐnழிpசநளளழைn டிப Pயவசயைசஉhவல)
பிரிவினைவாதக் குழுக்கள் (ளுநபசநபயவயடையெடளைவ)
நிலம் சார்ந்த குழுக்கள் (யுகசiஉயn யுஅநசiஉயn)
மேற்குலகு தாண்டிய குழுக்கள் (ழேn-றுநளவநசn)
பாலியல் சுதந்திரம் பேசும் குழுக்கள் (Pசழ-ளநஒ குநஅinளைஅ)
நம்முடைய இறை நம்பிக்கையும் ஈமானும் சரியாக இருக்கின்ற பட்சத்தில் இந்த இடத்தில், இத்தகைய பின்னணிக் காரணங்கள் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் நிலவுகின்றனவா? என்று கேட்பதை விட, இத்தகைய பின்னணிக் காரணங்கள் இடம் பெற இஸ்லாமியக் கோட்பாடு அனுமதிக்கின்றதா? என்று கேட்பதற்கே முன்னுரிமை அளிப்போம். இவ்விரண்டு கேள்விகளுக்கும் இடையிலான அடிப்படை அதே சமயம் அதிமுக்கிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இன்றைக்கு ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்ணியம் என்று அறிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் தோன்றியிருக்காது.
ஏனென்றால், யூதப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம், ஆப்பிரிக்கப் பெண்ணியம். கிறிஸ்துவப் பெண்ணியம், இந்து மதப்பெண்ணியம் என்றெல்லாம் நிலம் சார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த பெண்ணியக் குழுக்கள் காணப்படுவதைப் போல இஸ்லாமியப் பெண்ணியம் என்று உலக அரங்கில் காணப்படுவதில்லை (அதைத் தோற்றுவிக்க ஒருசிலர் வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறார்கள்) ஏன்? என்ன காரணம்? என்றால் எந்த விதமான உட்காரணங்களும் அறவே இல்லை என்பதால் இஸ்லாமியப் பெண்ணியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் அடியோடு கிடையாது.
ஒரு கொள்கையோ, கோட்பாடோ பெண்ணை மனுஷியாகக் கருத மறுத்தால், அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தால், அவளிடம் புதைந்துள்ள திறதமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தால் நாம் அதை உட்காரணம் என்று கூறுகிறோம்.
ஒரு கொள்கையைப் பின்பற்றும் மக்கள், பின்பற்றாளர்கள் அதனை முறையாக பின்பற்றாததால் தோன்றும் பின் விளைவுகளை நாம் புறக்காரணம் என்று வகைப்படுத்துகிறோம்.
இஸ்லாமிய வட்டத்திற்குள் பெண் விடுதலை என்கிற பேச்சே எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான உட்காரணம் ஒன்று கூட இங்கு காணப்படவில்லை என்று நாம் கூறுவதால் இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் சமூக அளவிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையப் பெற்று மேனிலையில் விளங்குகிறார்கள் என்று சாதிப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. நம்முடைய பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பதையோ, அதற்கான மூலக் காரணங்களை இனங்கண்டறிந்து நீக்குவதில் முனைந்து செயற்பட வேண்டும் என்பதையோ நாம் ஒரு போதும் மறுக்கவில்லை.
உட்காரணம், புறக்காரணம் என்பவை பற்றிய முறையான புரிதல் எதுவும் இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்கும் திறன், சீர்தூக்கிப்பார்க்கும் போக்கு எதுவுமே இல்லாமல், மேற்கண்ட எல்லாவகையான பெண்ணியக் கொள்கைகளுக்கும் அமைந்துள்ளதைப் போன்றே, முஸ்லிம் பெண்களின் கீழ் நிலைக்கும் இஸ்லாமிய சமயத்தில் உள்ள குறைபாடுகளும் கோளாறுகளும் தான் காரணம் என்று வெள்ளாடுகளைப் போல மேலோட்டமாகப் புரிந்து கொண்டும், அதிமேதாவித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டும் சிலர் எக்கச்சக்கமாக பேசிக் கொண்டுள்ளார்கள். இத்தகைய வெள்ளாடுகளை கறுப்பு ஆடுகளாக எப்படியாவது மாற்றி இஸ்லாமின் மீது சேற்றையும் சகதியையும் வாரியிறைத்து விட வேண்டும் என்று உலகளாவிய அளவில் சில சக்திகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இறையருளால் இத்தகு முயற்சிகள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை என்பதோடு, உட்காரணம் எதுவும் உண்மையிலேயே இல்லாததால் அவை தோல்வியையே தழுவும்.
இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்டுரைக்கு இடையில் சம்பந்தமில்லாமல் வந்து விட்ட விஷயம் என்றாலும் கவனித்தாக வேண்டிய விஷயம். இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நான், இறைவனுக்கு பயந்து நான் அறிந்த சில விஷயங்களை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், நாளை அதற்கான விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் எழுதிக் கொண்டுள்ளேன். இறைவனைப் பற்றிய பயம் என்னை எழுதத் தூண்டுகின்றது. இறைநம்பிக்கை, இறையருள் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறேன். அதே சமயம், இஸ்லாமியப் பெண்ணியம் என்று பேசுபவர்களுடைய, முஸ்லிம் பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு எழுத்தாணியை ஏந்துபவர்களை உன்னிப்பாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தகைய ஒரு பார்வையையே காண முடியாது!
ஒரே இறைவன் தான் என்பது நம் கொள்கை!. ஒரே இறைவன் தான் என்பதால் அவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் சரிசமமானவர்கள்!!. வெள்ளை கறுப்பு பாகுபாடுகள், நிற வேறுபாடுகள், ஆண்பெண் பிரிவினைகள் அறவே கிடையாது. ஆணை விட பெண் தாழ்ந்தவள் அல்ல என்று நாம் கூறுகிறோமென்றால் அதற்கான அடிப்படை அம்சம் இங்கு தான் இருக்கின்றது. மேலுலகில் இருந்து கருத்துக்களைத் தருவித்துக் கொண்டிருக்கும் இறக்குமதியாளர்கள் (இறங்குமதியாளர்கள்) இந்த இடத்தில் வேறுபடுகிறார்கள்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் அதற்காக முனைந்து உழைப்பதும் தான் பெண்ணியம் என்றால் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை என்ன? சமூக அளவிலும், குடும்ப அளவிலும். கல்வி, பொருளாதார நிலைகளிலும் அவர்கள் எங்ஙனம் காணப்படுகிறார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம்.
அதே சமயம் பெண்களின் உரிமைகளாக பெண்ணியக் குழுக்கள் முன் வைக்கும் சம உரிமை, ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள், தனித்துவம், பாலியல் சுதந்திரம், ஓரினச் சேர்க்கை, போன்றவற்றைப் பற்றி இஸ்வாம் என்ன கருதுகின்றது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய சமூகம் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் பேரருள் அவர் மீது உண்டாகட்டும்) அவர்களுடைய வார்த்தைகளில் ஓருடலைப் போன்றது. உடலில் ஒரு நோய் தோன்றிவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி மழுப்புவது அறிவுடைமை ஆகாது. நோய் நாடி நோய் முதல் நாடி கண்டடைந்து நீக்க முயல வேண்டும். முஸ்லிம் பெண்கள் இன்று எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம் உள்ளம் பதறுகின்றது. இறைவனிடம் அவர்களுக்காக மன்றாடுகிறோம். தலாக், வரதட்சணை, அடக்கு முறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம். பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல!
நம் இனப் பெண்கள் இன்னலுறுகிறார்களே என்கிற அக்கறையினாலும் அல்ல, இறைவனும் இறைத்தூதரும் கடமையாக்கியுள்ள காரணத்தினால் ....... நாளை விசாரணை நாளன்று வல்ல இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாய் நிற்க வேண்டியிருக்குமே என்கிற பயத்தினால்......

சனி, 2 மே, 2009

கோடை கால தீனிய்யாத் பாட வகுப்பு ஆலோசனைக் கூட்டம்

கோடை கால தீனிய்யாத் பாட வகுப்பு ஆலோசனைக் கூட்டம்நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் மாணவர்களுக்கான கோடை கால தீனிய்யாத் வகுப்பு பற்றி ஆலோசனைக் கூட்டம் நேற்று நகர ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்கள் தலைமையில் இரவு 8.30 மணியளவில் நடைபெற்றது. ஹாபிஸ் யூசுப் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார். துவக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து போதிலும் சமுதாய சேவையில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளும் நமது ஜமாஅத்துல் உலமா கௌரவ ஆலோசகர் மௌலானா அ.ப. கலீல் அஹ்மத் அவர்களுக்கு ஜமாஅத்துல் உலமா பேரவையின் செயல்பாடுகளை துள்ளியமாக ஆய்வு செய்து தானாகவே முன்வந்து குவைத் வாழ் தமிழ் மக்களின் சார்பாக ஜமாஅத்துல் உலமாவை ஆர்வமூட்டும் வகையில் கணிசமான தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு துஆ செய்யப்பட்டது . அதன் பின் நமது மக்தப் மாணவர்களின் கோடை கால தீனிய்யாத் வகுப்பின் தேர்வை வரும் ஏப்ரல்13ம் தேதி நடத்துவது என்றும் மற்றும் போட்டி இன்னும் மக்தப் ஆண்டு விழாவை ஏப்ரல் 17.18ல் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பு: கோடை கால தீனிய்யாத் போட்டிகளில் பங்கு கொள்ள நாடுபவர்கள் உடனே அதற்கான விண்ணப்ப படிவத்தை அனைத்து பள்ளி இமாம்களிடமும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மார்க்கப்பற்றுள்ளவர்களாக வளர்க்க இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி