முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

புதன், 26 மார்ச், 2014

வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பொதுக்குழு
சிதம்பரம் வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு செவ்வாய்கிழமை காலை பின்னத்தூர் ஜாமீஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
 
இதில் மாநில ஐக்கிய ஜமாஅத் ஒருங்கினைப்பாளர் சிக்கந்தர், கடலூர் மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் முஹம்மது யூனுஸ், வட்டார தலைவர் ஜியாவுத்தீன், பரங்கிப்பேட்டை உட்பட சிதம்பரம் வட்டாரத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த பொதுக்குழுவில் பள்ளிவாசலுக்கு உள்ளே மற்றும் வெளியே நம் சமுதாயத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நலத்திட்டங்களில் மாநில அளவில் ஒருங்கினைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் வட்டார இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயல் திட்டம் மற்றும் பள்ளிவாசல்களின் இந்திய அரசியல் சாசன விதிமுறைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது.
 
செய்தி & படங்கள்: ஷேக் ஆதம்

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி