முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

புதன், 4 நவம்பர், 2009

லால்பேட்டை வஜ்ஹுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் வஃபாத்

த‌மிழக‌த்தின் ப‌ழம்பெரும் அர‌புக்க‌ல்லூரிக‌ளில் ஒன்றான‌ லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் க‌ல்லூரியின் முதுபெரும் பேராசிரிய‌ரும், அக்க‌ல்லூரியில் பல்லாண்டுகளாக மார்க்க‌ச் சேவை ஆற்றியவ‌ருமான‌ மவ்லானா மெளலவி அல்ஹாஜ் வஜ்ஹுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் இன்று (புதன் கிழமை 04.11.2009) காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் அப்ப‌‍ழுக்க‌ற்ற‌ மார்க்க‌ச் சேவையை அ‍ங்கீக‌ரித்து, நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை பிரார்த்தனை செய்கிறது.

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி! வஸ்ஸலாம்!!

'வந்தே மாதரம்' இஸ்லாத்துக்கு எதிரானது - ஜம்இயத்தே உலமாயே ஹிந்த் தீர்மானம்

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி