முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

சனி, 23 மே, 2009

மனிதனைப் படைத்ததன் நோக்கம் என்ன?

இந்த உலகிலுள்ள கோடானு கோடி மக்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1. நிராகரிப்பாளர்கள் (குஃபார்)
2. விலகிச் செல்லும் முஸ்லிம்கள்
3. மேலோட்டமான முஸ்லிம்கள்
4. இறைவிசுவாசிகள் (முஃமினூன்)
இறைநிராகரிப்பாளன் (காஃபிர்) என் பவன் சத்தியத்தை நிராகரிப்பவன் அல்லது சத்தியத்தை மறைப்பவன் ஆவான். அவனது மனோ இச்சைகளுக்கே அவன் தீனி போடுவான். அவனால் இறைவன் படைத்துள்ள பிரமாண்டங்களை கண்டுணர இயலாது. அதேபோல் உண்மை இறைவனையும் உணர இயலாது. தெய்வீகத் தகுதிகளிலிருந்து அவன் தன்னையே நிராகரித்து வாழ்வான். அவன் உண்ணுவதையும் உறங்குவதையும், குடிப்பதையும், கும்மாளமடிப்பதையும் தவிர வேறு எதனையும் சிந்திக்க மாட்டான். இவனைப்பற்றித்தான் இறைமறை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
''ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீணி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கின்றார்கள்(நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.'' (முஹம்மத் 47:12)
இரண்டாவது வகையினரான விலகிச் செல்லும் முஸ்லிம்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
'' அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்துவிடுமாறு செய்துவிட்டான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்.அறிந்து கொள்க, ஷைத்தானின் கூட்டத்தினர்தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!'' (அல் முஜாதலா 58:19)
இந்த வகையைச் சேர்ந்த முஸ்லிம், ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததனால் அவன் முஸ்லிம் பெயரை வைத்துள்ளான். அந்தப் பெயர் ஒன்று தான் அவனை இஸ்லாத்தில் இனைக்கின்றது. அவன் அனைத்து எல்லைகளையும் தாண்டுகிறான், தனது மனோ இச்சைக்கு இரையாகின்றான்.
மூன்றாவது வகையைச் சேர்ந்த மேலோட்டமான முஸ்லிம், அல்லாஹ்வை தொழுவான். திருக்குர்ஆனை
சப்தமாக ஓதுவான், இஸ்லாத்தை வெறித்தனமாக நேசிப்பான்.ஆனால் அவனது ஈமானில் ஆழம் இருக்காது.அவன் சத்தியத்தின் அருகில் இருக்கின்றான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவன் முழமையாக சத்தியத்தினுல் நுழையவில்லை.
அவன்தான் மார்க்க் கடமைகளை இயந்திரம் போல் செய்கின்றான். ஆனால், அவனது உள்ளம் அதில் ஈடுபடவில்லை திருக்குர்ஆன் இந்த வகை முஸ்லிம்களை இவ்வாறு எச்சரிக்கின்றது:
''ஈமான் கொண்டோர்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறக்கியுள்ள உண்மை யான வேதத்தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்(ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட 'காலம்' சென்றபின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகிவிட்டன. அன்றியும் அவர்களில் பெரும்பாலோர் (ஃபாஸிக்குகளாக) பாவிகளாக ஆகிவிட்டனர்.'' (அல் ஹதித் 57:16)
மேற்சொன்ன அந்த 3 வகையினருக்கும் நேரெதிரான வகையினர்தான் நான்காவது வகையினரான ''முஃமின்'' இஸ்லாத்தின் உண்மையான இறைவிசுவாசி. பூமியில் மகிழ்ச்சிகரமான மனிதன் அவன்!
ஆவன் யாருக்கும் அடிமைஏவல் புரிய மறுக்கிறான். அப்படி அடிமை வேலை வாங்குபவர்களை எதிர்க்கிறான். அவனது உள்ளம் இஸ்லாத்தின் இறைக் கொள்கை யால் நிரம்பி வழியும். அவன் உளப்பூர்வமாக இறைவனிடம் தன்னை ஒப்படைக்கிறான்.
அவனுக்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
''எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கின்றானோ, அவன் நிச்சயமாக உருதியான கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ் விடமே உள்ளது.'' (லுக்மான் 31:22)
நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒரு நொடியில் தெரிந்துவிடும் நாம் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பது. ஆனால் அல்லாஹ் நம்மைவிட மிகத் தெளிவாக இதனை அறிவான்.
அல்லாஹ் அருள்மறையில் கூருகின்றான்:
''ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர். நற்செயல்களின்பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கின்றான். (அல் பகரா2:148)
மேற்கண்ட வசனத்தின் படி நமக்கென்று ஒரு திசையை, இலக்கை நாம் கொண்டிருக்க வேண்டும். அதுமிக முக்கியம். சுரியும் தப்பும், சரிசமமாக இருக்க முடியாது. அதேபோல் சத்தியத்தின் பக்கம் இருப்பவர்களும், அசத்தியத்தின் பக்கம் இருப்பவர்களும் சமமாக முடியாது.
அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
''எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாகமாட்டார்கள்.'' (அஸ்ஸஜ்தா 32:18)
''எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தம் மனோ இச்சைகளை பின்பற்றுகிறார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?'' (முஹம்மத் 47:14)
நல்ல பாதை, கெட்ட பாதை இதில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறான் மனிதன். தேர்ந்தெடுக்க வேண்டிய அவசரத்தை அல்லாஹ் கீழ்கண்ட வசனத்தில் தெளிவகக் குறிப்பிடுகின்றான்:
''நாம் உங்களை படைத்ததெல்லாம் வீனுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (என்றும் இறைவன் கேட்பான்) ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ் மிக உயர்ந்தவன், அவனைத் தவிர நாயன் இல்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!'' (முஃமினூன் 23:115,116)
ஆதலால் நம்மை இந்த உலகில் படைத்ததன் நோக்கத்தை நாம் அறிந்து, அந்த நோக்கத்தின் படி வாழ்வதற்க்குன்டான தகுதிகளை நம்முள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் மேற்கண்ட வசனத்தின் ''வீனுக்காக அல்ல'' 'கணக்கு' 'உண்மையான அரசன்' ஆகிய வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகளைப் பார்த்தாலே தெரியும் இது அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று.
மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்? இதை இறைவனே கூறுவதைப் பார்ப்போம்.
''(பின்னர் ஆண்,பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காக. ஆவனைக் கேட்பவனதகவும் பார்ப்பனவாகவும் ஆக்கினோம்.'' (அத்தஹ்ர் 76:2)
வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் வீழும் மனிதன் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை மறக்கலாம்.
மனிதனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கியது அவனது அருளே இதை மறந்துவிடலாகாது. அந்த எச்சரிக்கை இதோ:
''எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞான மில்லையோ அதைச்(ச் செய்யத்) தொடர வேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்னுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (பனீ இஸ்ராயில் 17:36)
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கத்தை மிகத் தெளிவாக மேற்கண்ட வசனத்தின் வாயிலாக கூறுகின்றான்.
ஆதம்(அலை) அவர்கள் தொட்டு அனைத்து இறைச் செய்திகளும் இதனையே கூறுகின்றன.
ஸூரா அத்தாரியாத்தின் கீழ் கண்ட வசனங்கள் அல்லாஹ் நம்மை படைத்ததன் நோக்கத்தை அழகுறச் சொல்கின்றான்.
''இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. அவர்களிடமிருந்து எந்தப் பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன். பலம் மிக்கவன், உறுதியானவன்.'' (அத்தாரியாத் 52:56-58)

நகர ஜமாஅத்துல் உலமாவின் 5ம் ஆண்டு நிறைவிழா மற்றும் பரிசளிப்பு விழா நமது ஊர் தலைவர் யூனுஸ் நானா அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. கிராஅத் ஹாபிஸ் காரி சித்திக் அலி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓத நிகழ்ச்சியை ஹாபிஸ் மு முஹம்மத் ஷேக்ஆதம் ஹஜ்ரத் மழாஹிரி அழகிய முறையில் அவர்கள் தொகுத்து கொடுத்தார்கள். வரவேற்புரை ஹாபிஸ் அப்பாஸ் ஹிஜ்ரத் அவர்கள் கூற லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை கூற கூட்டம் இனிதே துவங்கியது தலைவர் அவர்களின் தலைமையுரைக்குப் பின் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது இறதியில் சித்திக் அலி ஹஜ்ரத் அவர்கள் மற்றும் ஜகரிய்ய நானா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.
போட்டியை காண வந்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி
மழலை மாறா சிறு குழந்தை கலிமாவை முழங்கும் காட்சி
வெற்றியாளர்களுக்கு ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்கள் பரிசு வழங்குகிறார்கள்


கிராத்தில் வெற்றி பெற்றவருக்கு சித்தீக் அலி ஹஜ்ரத் அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்கள்
இரண்டாம் பரிசை வென்ற மாணவிக்கு ஜகரிய்யா நானா பரிசு வழங்குகிறார்கள்

காஜி சாஹிப் அவர்கள் பரிசு வழங்குகிறார்கள்

சிறப்பு பேச்சாளர்


சிறப்பு பேச்சாளர் வர இயலாவிட்டாலும் சிறப்பு பேச்சாளரின் இடத்தை நிவர்த்தி செய்த ஜகரிய்யா நானா
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி