முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 22 நவம்பர், 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம் என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் குவைத் இந்திய தூதரகத்திலும், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் குவைத் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு நற்பணிகளாற்றும் சிறந்த பேரியக்கமான K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், முதன் முறையாக "ஃபைலக்கா" என்று அழைக்கப்படும் தீவு பகுதிக்கு தியாகத் திருநாள் விடுமுறையை முன்னிட்டு இஸ்லாமிய இன்ப வரலாற்றுச் சுற்றுலாவை 18.11.2010 வியாழக்கிழமை அன்று ஏற்பாடு செய்தது.ஃபைலக்கா என்பது போர்த்துகீசிய சொல். 'வெற்றி / ஈடேற்றம்' என்பது இதன் பொருள். இந்தத் தீவு குவைத் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக 20 கி.மீ. தொலைவில் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சாதாரண கப்பலில் பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரத்திலும், விரைவு கப்பலில் சென்றால் ஒரு மணி நேரத்திலும் அத்தீவை சென்றடையலாம்.

இந்தத் தீவு, குவைத் நாட்டின் கடல் பகுதியில் ஃபாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒன்பது தீவுகளில் இரண்டாவது மிகப் பெரியதும், மக்கள் வாழ்வதற்கு தகுதியும் உள்ள ஒரு தீவாகும். 12 கி.மீ. நீளமும், 6 கி.மீ. அகலமும் உடைய நிலப்பரப்பை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 10 மீ உயரத்தில் உள்ளது. 3000 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இத்தீவு பாரசீக வளைகுடா பகுதி வாணிபத்திற்கு முக்கிய கேந்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பல வரலாற்று தகவல்களும், பழைய கால நாணயங்களும் அந்தப் பகுதியில் கிடைத்திருப்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அவற்றை இன்றும் குவைத் அருங்காட்சியத்தில் காண முடிகின்றது. சுமார் ஏழு கிராமங்களிலும், ஒரு நகரத்திலும் 1990ம் ஆண்டு வரை அங்கே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 1985ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் அத்தீவில் குவைத் மக்கள் 5832 நபர்களும், வேறு நாட்டைச் சார்ந்த மக்கள் 2426 நபர்களும் வசித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
1990
ம் ஆண்டு குவைத்தை ஈராக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை அங்கே மக்கள் வசிப்பதில்லை. அத்தீவை பாரம்பரிய சின்னமாக அறிவித்து விட்டது குவைத் அரசு. குவைத் மக்களுக்கு அத்தீவில் சொத்துக்கள் இருந்தாலும் அங்கே யாரும் வசிப்பதில்லை. விடுமுறை தினங்களை பயன்படுத்துவதற்காக அங்கே சென்று வருகின்றனர். தொழுகைக்காக 5 பள்ளிவாசல்கள் அங்கே உள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்குமிடம், உணவகம், படகு குழுhம் உள்ளிட்ட சுற்றுலா வாசிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். விரைவில் இத்தீவு உலக தரத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமாக அமையக்கூடும் என சில செய்தி வலைப்பதிவுகள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
வாழ்வாதாரம் தேடி வந்த நாட்டின் வரலாற்றுச் சுவடுகளை காண்பது நமது சிந்தனைக்கு நல்ல விருந்தளிக்கும் செயல் என்பதை உணர்ந்து நமது சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த சுற்றுலாவுக்கு ஆர்வமாக தங்களின் பெயர்களை பதிவு செய்தனர். சுமார் 12 குடும்பங்கள்
, சிறார்கள் உட்பட 60 உறுப்பினர்கள் இந்த சுற்றுலாவில் பங்கேற்றனர்.
காலை 9 மணிக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ மற்றும் மீடியா குழு செயலாளர் அல்ஹாஜ் ஏ. அப்துல் கஃபூர் ஆகியோர் வழியனுப்பி வைக்க குவைத்
, ஸால்மியா பகுதியில் அமைந்துள்ள துறைமுகத்திலிருந்து சுற்றுலாக் குழுவினர் கப்பலில் புறப்பட்டனர்.
பயண ஒழுக்கம்
, பிரார்த்தனை (துஆ), தலைமைக்கு கட்டுப்படுதல், வரலாற்று அத்தாட்சிகளினால் ஏற்பட வேண்டிய சிந்தனை மாற்றங்கள் போன்ற அறிவுரைகளுடனும், மிதமான வெப்பம், ரம்மியமான காற்று என பல்வேறு மகிழ்ச்சியான தருணங்களுடனும் புறப்பட்ட கப்பல் நண்பகல் 11 மணியளவில் ஃபைலக்கா தீவை சென்றடைந்தது. தனி ஏற்பாட்டில் தீவை சுற்றிப்பார்க்க வந்திருந்த சில தமிழ் முஸ்லிம் குடும்பங்களும், சகோதரர்களும் நம்முடன் இணைந்து கொண்டது சங்கத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இயன்றளவு தீவை சுற்றிப்பார்த்து விட்டு இடையில் நண்பகல் தொழுகையான லுஹர் தொழுகையையும்
, மாலை தொழுகையான அஸர் தொழுகையையும் அந்தந்த நேரங்களில் நிறைவேற்றினர். அவரவர்களும் கொண்டு வந்திருந்த உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டு விட்டு, குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிய நிகழ்வுகளை ஆனந்தமாக அனுபவித்தனர்.
அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதுடன் அந்தி மாலைத் தொழுகையான மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு மாலை 5:30 மணிக்கு ஃபைலக்கா துறைமுகம் வந்து குவைத் செல்லும் கப்பலுக்காக காத்திருந்த வேளையில் குவைத் நாட்டைச் சார்ந்த சில இளைஞர்கள் துறைமுகத்தில் கூடியிருந்து மக்களை மகிழ்விப்பதற்காக உடல் சார்ந்த திறன்களை வெளிப்படுத்தி காட்டி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
ஃபைலாக்காவில் புறப்பட்ட கப்பல் இரவு 8 மணிக்கு ஸால்மியா துறைமுகம் வந்தடைந்தது. இடைப்பட்ட பயண நேரத்தில் கப்பலின் உள்ளேயே பல்வேறு தலைப்புகளில் கருத்துக் பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதுபோன்ற வரலாற்று இடங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்றும், அதற்கு சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரவர் இல்லம் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ்.
சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் இந்த சுற்றுலாவை தலைமையேற்று வழிநடத்தி சென்றார். இஸ்லாமியப் பொது அறிவுப் போட்டி நடத்தும் பொறுப்பை இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் ஏற்று நடத்தினார். பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., வழிகாட்டியாக செயல்பட்டார்.
சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண் (
+965) 97872482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-------------------------------------------------

Kuwait Tamil Islamic Committee (K-Tic) carried out its picnic for its members and their families on Thursday 18th November 2010.

It is a maiden picnic for K-Tic and its of its first kind to visit “Failaka Island”. The day started with fun-filled voyage on the ferry at 9:00AM from Salmiya (Ras Al Ard).

Moulavee Ash-Shaikh M.S. Mohammed Meera Shah Fazil Baqaavee (President) and Al-Haaj A. Abdul Gafoor (Secretary, Media Wing) attended to give a send-off for the trip to Failaka. About 12 families and some bachelors explored Failaka.

The cruise was entertaining, kids and children enjoyed it. The weather was very pleasant and reached the port of Failaka around 11AM.

Failaka - Out of an archipelago of nine islands, Failaka is Kuwait 's only inhabited one. It is located 20 kilometers off Kuwait City 's coast. Failaka is a bastion of Kuwait 's rich heritage. Several historic and archaeological sites can be found at different locations. In the 3rd century BC, the Greeks referred to the island as Icaria . This was when Alexander the Great conquered the region. Traces of Greek mythology amalgamated with the local culture. Historical records show that the island was populated during the seventh and eighth century AD.

The beach and zoo were also other spots were the families enjoyed. The amiable weather passed by walking around the island and having awareness with Islamic Quiz program. The waiting time at the Failaka port was filled with the amazing gymnastic art of talented intrepid group of youngsters.

This historical trip to Failaka island evoked the people lived in those days, the changes that happened during yesteryears. The pleasant trip arrived back at Salmiya at about 8PM with evening sea breezes.

For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group.

வியாழன், 11 நவம்பர், 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!


குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'மாபெரும் புனித ஹஜ்' சிறப்பு நிகழ்ச்சி, எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதன் முக்கியத்துவ நாட்களின் வருகையொட்டி 04.11.2010 வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

தலைவர் மவ்லவீ அஷ்-ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் முன்னிலை வகித்தார். இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார்.


துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்-ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹழ்ரத், 'நபி இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் வரலாறு' என்ற தலைப்பிலும், மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ அஷ்-ஷைஃக் எஸ். ஹாஜா முயீனுத்தீன் உலவீ, 'இறுதிக் கடமை ஹஜ்' என்ற தலைப்பிலும், பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., 'துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகளும், அந்நாட்களில் செய்ய வேண்டிய செயற்பாடுகளும்' என்ற தலைப்பிலும், இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர், 'தியாகம் மற்றும் இறையச்சம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.


பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்ற, மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்-ஷைஃக் ஏ. முஹம்மது ஷா நவாஸ் மன்பயீ துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் சகோதர சகோதரிகள் பலர் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


வாராந்திர சிறப்பு சொற்பாழிவுகள்

05.11.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கீழ்க்கண்ட இரண்டு பள்ளிவாசல்களில் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைஃக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ சிறப்புறையாற்றினார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 225 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் சிறப்புறையாற்றினார்.

கடந்த ஓன்றரை ஆண்டுகளாக 75 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்களும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டது.


மேலதிக விபரங்களுக்கு...

  • துரித சேவை அலைபேசி எண் : (+965) 97872482
  • அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
  • மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com
  • யாஹு குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்


இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

திங்கள், 8 நவம்பர், 2010

குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி

புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!


எதிர்வரும் புனித அரஃபா நாள் (துல் ஹஜ்ஜு பிறை 9) வருகையை முன்னிட்டு குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி' வருகின்ற 12.11.2010 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில் உள்ள)' பள்ளிவாசலில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.

சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., மற்றும் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் புனித அரஃபா நாளின் சிறப்பு, அந்நாளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு வழிபாடுகள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை, தியாகத்தின் சிறப்புகள், இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினரின் வரலாறு போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி