முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

வியாழன், 2 ஏப்ரல், 2009

விடுமுறையும் விளையாட்டும்

விடுமுறையும் விளையாட்டும்
-------------------------------------------------------------------------------- ;குழந்தை வளர்ப்பு
பள்ளிக்கூடங்கள் அடைக்கப்பட்டு விட்டன. விடுமுறைகள்.., குதூகலங்கள்..!
மாணவ மாணவிகளுக்கு நிம்மதி. ஓயாத விளையாட்டு உணவுண்ண நேரமில்லாத விளையாட்டு! பாட்டி வீட்டுக்கு, பிறந்த ஊருக்கு என்று பயணங்கள். இப்படியெல்லாம் இரு;நதன ஒரு கால கட்டத்தில். குழந்தைகள் பள்ளிப் பருவத்தை அனுபவித்துக் கொண்டிருந்த காலங்கள் அவை.
என் பள்ளிப்படிப்பில் அப்படி இருந்தேன், இப்படி இருந்தேன் என இனிமையான சூழலில் வாழ்ந்த நாட்களை எண்ணி வாழ்வின் வாடிய நாட்களில் இதயத்தை ஈரப்படுத்திக் கொள்வதுண்டு. இந்த இனிமைகளெல்லாம் கடந்த கால வரலாறாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இன்றைய நாட்களில் பள்ளிப் பருவம் பரபரப்பான பருவமாக மாறிப் போய் விட்டது. சதா சர்வ காலமும் நல்ல மார்க், நல்ல மார்க் என்று அதட்டும் பெற்றோர்கள். அதிக மதிப்பெண்களுக்காக பள்ளிக் கூடங்களிலும், டியூஸன் சென்டர்களிலும் மாற்றி, மாற்றி குடியிருக்கும் மாணவர்கள்.
பள்ளிக்கூடங்களிலும் கட்டுப்பாடுகள், டியூஷன் சென்டர்களிலும் கட்டுப்பாடுகள். காலில் ஷு இறுக்கிக் கட்டு, வயிற்றில் ஒரு கட்டு. இல்லை இடுப்பில் ஒரு கட்டு பெல்ட். கழுத்தில் இன்னும் அழுத்திக் கட்டு டை, சாவு என்று இதற்கு பொருள் இல்லை.
இரண்டு புஜங்களையும் இறுகப் பிணைக்கும் ஒரு மூட்டை புத்தகங்கள். கட்டு, கட்டு எனக் கட்டிய பிறக கட்டுப்பாடுகள். அதற்கு ஆங்கிலத்தில் பெயர் டிசிப்ளின், இப்படிப் பள்ளிப் பருவம் பயங்கரப் பருவமாக மாறிப் போயிற்று.
இப்படி அவர்கள் மாணவப் பருவம் முழுவதும் வகுப்பறையில் கழிகின்றன. மறைக்காமல் சொன்னால் பள்ளியறைகள் என்ற சிறைச்சாலையில் அவர்களின் வாழ்க்கை! இந்த மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழும் வாழ்க்கையில் அவர்கள் ஒரு பகடைக்காயாய் உருளுகிறார்கள்.
இந்தப் பள்ளிப் படிப்பில் மாணவர்கள் எந்த அளவுக்கு வெறுப்படைந்திருக்கிறார்கள் என்றால், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் தங்கள் புத்தகங்களை சில மாணவர்கள் கிழித்து எரிகின்றார்கள்.
இன்னும் சில மாணவர்கள் பாதிப்படிப்பிலேயே ஓடிவிடுகின்றார்ளாம் பள்ளிப்படிப்பை விட்டு. ஆசிரியர்கள் பெற்றோர்கள் சந்திப்பில் இந்தப் பள்ளிப் பாலகர்களுக்கு கொஞ்சமாவது ஆசுவாசம் கிடைக்குமா என்றால் அதுவுமில்லை. ஆசிரியர்-பெற்றோர்கள் கூட்டங்களுக்கு வரும் பெற்றோர்களில் பெரும்பாலோர் இன்னும் கொஞ்சம் கண்டித்து வையுங்கள் என்று தான் பரிந்துரைத்துக் கொண்டு செல்கின்றார்களாம். அனுபவமிக்க ஆசிரியை ஒருவர் ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகின்றார் இதை.
மாணவ மாணவிகளுக்கு நாம் உருக்கியும், உலுக்கியும் எடுக்கப்படுகின்றோம் என்ற எண்ணம் மனதில் ஆழப் பதிந்து இருக்கின்றதாம். ஒருமுறை வகுப்பில் மாணவர் பருவம் தான் வாழ்க்கையின் நிம்மதியான பருவம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியை. கொல் என்று சிரித்து விட்டார்களாம் சக மாணவ மாணவிகள்.
விளக்கம் சொல்லிட வேண்டிய தேவையே இல்லாமல் ஆசிரியை மாணவர்களின் விரக்தியைப் புரிந்து கொண்டாராம். மாணவப் பருவம் விம்மிடம் விளைவுகளால் வீங்கிப் போயக் கிடக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும் மாதம் தான் இந்த மே மாதம். ஆனால் இந்த மாதத்திலும் நுழைவுத் தேர்வு பயம்.
குழந்தைப் பருவம் முதற் கொண்டு ஒவ்வொரு பருவத்திலும் நுழைவுத் தேர்வு. எதிர்காலம்என்ன ஆகுமோ என்ற சூன்யமான சிந்தனை. 10, ஸ்ரீ2 வகுப்பு மாணவர்களுக்குச் சில பள்ளிக்கூடங்களில் இந்த மாதமும் முழுநேரப்படிப்பு.
இப்படி மழலைப் பருவமும் பெரும் போராட்டப் பருவம் அல்லது அழுத்தங்கள் அதிகமான (டென்ஷனான) பருவமாகி விட்டது. இப்போது கட்டுப்பாடுகள் அவர்களைக்கட்டிப் போடுகின்றன.
இப்படிச் சொல்லிவிடுவதால் கட்டுப்பாடுகள் வேண்டாம் என்றில்லை. இப்போது உள்ள நிலையில் அவர்களுக்குக் கட்டுபாடுகளைப் போல் ஆசுவாசங்களும் தேவை என்பதை நாம் உணர வேண்டும்.
அவர்கள் மொத்தமாக உருமாறிப் போகும் முன் சற்று வெளியே அழைத்துச் செல்லுங்கள். இறைவனின் அருட்கொடையாய் அவனது ஆற்றல்கள் வெளிப்படுத்தும் ஆறு, கடல், மலர்த் தோட்டங்கள், மலை மடுவு இவற்றையும் அவர்களுக்குக் காட்டுங்கள்.
விரிந்து விசாலமான இந்த உலகில் ஆண்டவனின் அத்தாட்சிகளை (ஆயத்துல்லாஹ்) அவர்களை அழைத்துச் சென்று காட்டுங்கள்.
வசதியும், வளமும் கைவரப் பெற்றோர் கோடை வாசஸ்தலத்தைக் கொண்டு காட்டுங்கள். அவர்களின் மன அழுத்தங்களுக்கு மருந்தாய் அமையும். அவர்களின் மன வளத்திற்கு விருந்தாய் அமையும்.
மழலைகளின் நலன் கருதி இதைச் செய்யலாம். சூழ்நிலை சரியில்லை என நீங்கள் சற்று முணங்கலாம். ஆயிரம் ஆபத்திற்கிடையேயும் ஆசுவாசமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படிக் கற்றுத் தந்த முஹம்மத் (ஸல்) அவர்களை வழிகாட்டியாய் கொண்டவர்கள் நாம்! இந்தப் பயணத்திலும் நாம் ஒரு முன்மாதிரியாக அமையலாம். இறைவன் தன் இறைமறையில் கூறுகின்றான் :
(நபியே!) நீர் கூறும் : பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து சிருஷ்டிகளைப் எவ்வாறு உற்பத்தி செய்கிறன்றான் என்பதைப் பாருங்கள். (அவ்வாறே மரித்த) பின்னரும், அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையோன். (அல்குர்ஆன் 29:20)
மேலும் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களைப் பார்க்கவும் : 22:46, 40:21? 40:82, 30:09, 35:44.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி