முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

புதன், 29 ஏப்ரல், 2015

போக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹாம் கால்வாய்

சென்னை - ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியத் தொழில் நிறுவன கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை (07.04.2015) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்

பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். 

இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள்.

இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. 

சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது. 

தற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

எனவே, மீண்டும் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். 

நமது அரசு செய்யுமா? 

என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது.

வந்த பதில்: 

The scheme for utilising the Buckingham canal as on inland water ways is under the consideration of the National Inland Waterway Authority and the same would be implemented in due course. Petitioner informed vide EIC WRD PWD Chepauk ch-5 lr.no.S7/CMP/CR/2014 dt 05.01.15.

மீராப்பள்ளியில் தொடங்கியது நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்! (படங்கள்)

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் திங்கள் கிழமை (27.04.2015) தொடங்கின. பதினொறாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் முதல் நாள் அன்று 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.  










படங்கள்:  ஜஃபர் அலீ மன்பயீ & ஷேக் ஆதம் மழாஹிரி

வியாழன், 23 ஏப்ரல், 2015

கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்; ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27, 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். 

11வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் அதிகமான பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 5ம் வகுப்பு வரை படிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர். 

புதன், 22 ஏப்ரல், 2015

சிதம்பரத்தில் மாபெரும் மாநில மாநாடு; தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு

18117_83
வரும் ஏப்ரல் 25  சனிக்கிழமை  காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை சிதம்பரத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு

இடம்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழி) நினைவரங்கம், ஈத்கா திடல், சிதம்பரம், கடலூர் மாவட்டம்

நாள்: 25.04.2015 சனிக்கிழமை இன்ஷா அல்லாஹ்....

சமூக நல்லிணக்க அரங்கம் - நேரம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை

ஆய்வரங்கம் - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

ஷரீஅத் அரங்கம் - நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை

சிறப்பு அமர்வுகள் - இடம்: M.Y.M. ஃபைஸல் மஹால், சிதம்பரம்

மகளிர் அரங்கம் (பெண்களுக்கு மட்டும்) - நாள்: 24.04.2015 வெள்ளிக்கிழமை - நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

ஆலிம்கள் அரங்கம் (ஆலிம்களுக்கு மட்டும்) - நாள்: 25.04.2015 சனிக்கிழமை - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தமிழகத்தின் தலை சிறந்த மதிப்பிற்குரிய ஆலிம் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.

அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
11080418_8350
 
11082505_8350025
 
அதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
 
IMG-20150421-WA0005 
 
IMG-20150421-WA0006
 
IMG-20150421-WA0007
 
IMG-20150421-WA0004
 
புகைப்படங்கள் உதவி: லால்பேட்டை இணையதளங்கள் 
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி