முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

ஹஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 நவம்பர், 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!


குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'மாபெரும் புனித ஹஜ்' சிறப்பு நிகழ்ச்சி, எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதன் முக்கியத்துவ நாட்களின் வருகையொட்டி 04.11.2010 வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...

தலைவர் மவ்லவீ அஷ்-ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் முன்னிலை வகித்தார். இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார்.


துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்-ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹழ்ரத், 'நபி இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் வரலாறு' என்ற தலைப்பிலும், மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ அஷ்-ஷைஃக் எஸ். ஹாஜா முயீனுத்தீன் உலவீ, 'இறுதிக் கடமை ஹஜ்' என்ற தலைப்பிலும், பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., 'துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகளும், அந்நாட்களில் செய்ய வேண்டிய செயற்பாடுகளும்' என்ற தலைப்பிலும், இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர், 'தியாகம் மற்றும் இறையச்சம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.


பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்ற, மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்-ஷைஃக் ஏ. முஹம்மது ஷா நவாஸ் மன்பயீ துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் சகோதர சகோதரிகள் பலர் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


வாராந்திர சிறப்பு சொற்பாழிவுகள்

05.11.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கீழ்க்கண்ட இரண்டு பள்ளிவாசல்களில் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைஃக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ சிறப்புறையாற்றினார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 225 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் சிறப்புறையாற்றினார்.

கடந்த ஓன்றரை ஆண்டுகளாக 75 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்களும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டது.


மேலதிக விபரங்களுக்கு...

  • துரித சேவை அலைபேசி எண் : (+965) 97872482
  • அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
  • மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com
  • யாஹு குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்


இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!


எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதன் முக்கியத்துவ நாட்களின் வரவாக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி' வருகின்ற 04.11.2010 வியாழக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.

சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத்தலைவர்கள் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ ஆகியோர் புனித ஹஜ்ஜின் சிறப்பு, அம்மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள், தியாகத்தின் சிறப்புகள், இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினரின் வரலாறு போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

குவைத்தில் ஹஜ் / அரஃபா சிறப்பு நிகழ்ச்சி


வெள்ளி, 13 நவம்பர், 2009

ஹாஜிகளே!


வியாழன், 12 நவம்பர், 2009

ஹஜ்ஜில் உள்ளதா அந்த உயிரோட்டம்...?

வெள்ளி, 6 நவம்பர், 2009

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம்!



வியாழன், 29 அக்டோபர், 2009

ஜம்ஜம் எனும் அதிசய நீரூற்று



மக்கா - முஸ்லிம் உம்மத்தின் சந்தை


புதன், 28 அக்டோபர், 2009

ஹஜ் - அறிமுக சட்டக் குறிப்புகள்



புனிதப் பயணிகளுடன் சில வார்த்தைகள்



ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம்!

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள்.

பல்வேறு தயாரிப்புகள் – பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ஆனால் – மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர்.

அது – உடல் நலம்!

ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ‘உடல்நலம்’ குறித்ததாகும்.

ஏனெனில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம். பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் ‘ஹஜ்’ செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

இதனைத் தவிர்த்து ‘ஆரோக்கியமான ஹஜ்’ ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.

1. ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்!

எப்போது ஹஜ்ஜிற்காக ‘விண்ணப்பிக்கிறார்களோ’ அந்நாள் முதல் ஹாஜிகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்னவெனில் – நடைப்பயிற்சிதான்.

நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று

மாதங்களுக்கு முன்பே இப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஏனெனில், ஹஜ்ஜின் போது அதிகம் நடக்க வேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்தி லிருந்து வெகுதூரம் நடக்க வேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ) எல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய எண்ணும் ஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில் ஒரு தவாஃப் முடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும்.

ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஹாஜிகள் மிகவும் கஷ்டப்படுவது ‘நடக்கும்’ விஷயத்தில்தான்! காரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற் கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள முஸ்லிம்கள் நடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்.

2. ஹாஜிகளே! உங்களுடைய கால்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் ஹஜ்ஜின் போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சாதாரணமாக காலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின் போது பயன் படுத்துங்கள். புதுச் செருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.

3. ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்திலிருக்கும் ஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்ற ழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே நீண்ட தொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று! ஹஜ்ஜில் ‘மெதுவாக’ நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

4. பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல நாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள் தினமும் அதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது முக்கியமானதுதான்! எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில் (துல்ஹஜ் 8 முதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு அடைந்து விடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. ஆண்களைப் பொறுத்தவரை ‘இஹ்ராம்’ உடையில் நடப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே உள்ளாடை எதுவும் அணியாமல் வேட்டி மட்டுமே அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது உதவியாக இருக்கும்.

6. பெண்களில் சிலர் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக சில ஹார் மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப் பட வேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன் படுத்தலாம். அதுவும் பெண் மருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.

நோயாளிகளும் ஹஜ்ஜும்
உயர் ரத்த அழுத்தம் (BP) நீரழிவு முதலான நோயுள் ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள் வதோடு மட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப் பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார் குழுக்கள் ‘சிறப்பு உணவினை’ இது போன்ற நோயாளி களுக்குத் தயாரிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஹாஜிகள் உணவு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

சிறுநீர் தொந்தரவுள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஹரமில் கழிப்பறைக்குச் சென்று வரவேண்டுமெனில் அது மிகச் சிரம மானதாகும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அவர்கள் தங்களுடைய அறைகளிலே சிறிநீர் கழித்து ஒளு செய்து விட்டு பள்ளிக்கு வருவது சிறந்ததாகும்.

முக்கியமான ஒரு நோய் என்னவெனில் ‘சளி தொந்தரவு’ சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் ‘சளி தொந்தரவு; ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஹஜ் காலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். இதனை Community acquired Pneumonia என்று அழைப்பார்கள். அதாவது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த மருந்து ‘முன்னெச்சரிக்கை’ (Prevention) தான். முகத்தில் ‘முகமூடி’ அணிந்து கொள்வது இந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி. அறைகளிலும், ஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே ஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து சாப்பிடுவது மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பது அவசியம்.

பல்வேறு விதமான நுரையீரல் சளி நோய்கள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றன. பறவைக் காய்ச்சல் (Avian Flu) பன்றிக் காய்ச்சல் (Swine Flu) போன்ற வைரஸ் நோய்களால் ஹாஜிகள் யாரும் பயப்பட வேண்டாம். முகமூடி அணியுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

7. இறுதியாக…

இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்காக (அரசு மூலமும், தனியார் குழுக்கள் மூலமும்) மருத்துவக் குழு (Indian Medical Mission) மக்காவிலும், மதீனாவிலும் செயல்படும். நீங்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ மையமும், மருத்துவமனையும் அமைந்திருக்கும்.

இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் இல்லை. எனவே கவலைப்படாமல் இம்மையங்களை அணுகுங்கள்! தனியார் குழுக்களில் பல மருத்துவர்களை அழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக் கின்றன. எனவே ஹாஜிகள் கவலைப்படத் தேவையில்லை.

ஆக, ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பயணத்தில் நீங்கள் சில முக்கிய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.

  1. வலி நிவாரணக் களிம்புகள் (Ointment)
  2. முகமூடிகள் (Face Mask)
  3. சாதாரண காய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்
  4. நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.
  5. இருமல் சளிக்கான மருந்துகளை (Syrup) பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச் செல்லுங்கள்.
  6. தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில மாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  7. கொஞ்சம் பஞ்சினை (Cotton) மருந்துடன் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ள உதவும்.
  8. நோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை ( Medical Records ) அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.

எனவே ஹாஜிகளே! உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்! உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன் ஆக்கியருள் புரிவானாக!

Dr. ஜெ. முகைதீன் அப்துல் காதர் MBBS, MS
(சென்ற ஆண்டு இந்திய மருத்துவக் குழுவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட மருத்துவர்)
தொடர்புக்கு : mohideenkadhar@gmail.com
நன்றி : சமரசம் அக்டோபர் 16 -31, 2009

சனி, 24 அக்டோபர், 2009

வியாழன், 22 அக்டோபர், 2009

தமிழகத்தில் ஹஜ் பயணம் நாளை தொடக்கம்

புதன், 21 அக்டோபர், 2009

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி