முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

பரங்கிப்பேட்டையில் மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு

கடலூர் மாவட்டம் தழுவிய அளவில் மாபெரும் மீலாது(ஸீரத்து)ன் நபி (ஸல்) மற்றும் ஷரீஅத் விளக்க மாநாட்டை கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவையினரும், பரங்கிப்பேட்டை மீலாது கமிட்டியினரும் இணைந்து நடத்துகின்றனர்.

பரங்கிப்பேட்டை ஹக்கா ஸாஹிபு தர்கா தெருவில் உள்ள இஜ்திமா திடலில் வரும் (பிப்ரவரி) 23ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை இம்மாநாடு நடைபெறும்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் தமிழக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மன்பயீ அவர்கள் தலைமையேற்க, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவருமான முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் மற்றும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் கேட்பன் எம். ஹமீது அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அறிஞர் பெருமக்கள் பலர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி, சென்னை அடையார் பளளியின் தலைமை இமாம் மவ்லவீ முனைவர் எம். ஸதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். மீலாது கமிட்டி தலைவர் எஸ். ஓ. செய்யது ஆரிஃப் நன்றியுரையாற்ற இருக்கின்றார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி